என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HDFC Bank"

    • நேற்றைய சாதனைகளை தகர்த்தெறிந்து இன்று [ஜூலை 3] வரலாறு காணாத ஏற்றத்துடன் இன்றைய இந்திய பங்குச்சந்தை தொடங்கியுள்ளது.
    • இன்றைய நிஃப்டி லாபத்தில் HDFC வங்கி முன்னிலையில் உள்ளது.

    நேற்று [ஜூலை 2] மும்பை பங்குச் சந்தை குறியீட்டு [BSE] சென்செக்ஸ் 79,856 என்று சாதனையை எட்டிய பின்னர் 31 புள்ளிகள் குறைந்து 79,441 என்ற புள்ளிகணக்கில் முடிவடைந்தது. மேலும் நேற்றைய தினம் தேசிய பங்குச் சந்தை குறியீடு எண் [NSE] நிஃப்டி குறியீடு 24,124 என்ற புள்ளிகணக்கில் நிலைபெற்று முடிவடைந்தது.

    இந்நிலையில் நேற்றைய சாதனைகளை தகர்த்தெறிந்து இன்று [ஜூலை 3] வரலாறு காணாத ஏற்றத்துடன் இந்திய பங்குச்சந்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 574 புள்ளிகள் அதிகரித்து 80,015 புள்ளிகணக்கிலும் நிஃப்டி 172 புள்ளிகள் அதிகரித்து 24,296 என்ற புள்ளிகணக்கிலும் தற்போது வர்த்தகமாகி வருகிறது. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 80,000 புள்ளிகளைக் கடப்பது இதுவே முதல் முறை ஆகும்.

     

    HDFC வங்கியால் இந்த உயர்வு ஏற்பட்டு உள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய நிஃப்டி லாபத்தில் HDFC வங்கி முன்னிலையில் உள்ளது. அதனைத்தொடர்ந்து ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல் மற்றும் நெஸ்லே ஆகியவை அதிக லாபத்தைப் பெற்றுள்ளன.  

     

    • எச்டிஎப்சி வங்கியில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளின் யுபிஐ பரிவர்த்தனைகள் செயல்படாது.
    • எச்டிஎப்சி வங்கியின் பிற இணையதள சேவைகளும் முடங்க வாய்ப்பு.

    எச்.டி.எப்.சி வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் சேவை பராமரிப்பு பணி காரணமாக இரண்டு நாட்களுக்கு தலா இரண்டு மணி நேரத்திற்கு யுபிஐ உள்ளிட்ட சேவைகள் இயங்காது என வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

    அதன்படி, நவம்பர் 5 மற்றும் 23ம் தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ சேவைகள் செயல்படாது என எச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது.

    இந்த பராமரிப்பு காலத்தில் எச்டிஎப்சி வங்கியில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளின் யுபிஐ பரிவர்த்தனைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், ரூபே (Rupay) கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், மொபைல் பேங்கிங், ஜி பே, வாட்ஸ் அப் பே, பேடிஎம், மொபிக்கிவிக் உள்ளிட்ட சேவைகளும் குறிப்பிட்ட இரண்டு நாட்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, பராமரிப்புப் பணியின்போது எச்டிஎப்சி வங்கியின் பிற இணையதள சேவைகளும் முடங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • காதை வெட்டிய நபரை அங்கிருந்த ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
    • சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை தி.நகர் பர்கிட் சாலையில் உள்ள எச்.டி.எஃப்.சி வங்கியில் நுழைந்த நபர் அங்கு ஊழியராக பணியாற்றி வந்த தினேஷ் என்பவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இன்று காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாடிக்கையாளர் போல் வங்கிக்குள் நுழைந்து, வெகுநேரமாக ஆள்நடமாட்டத்தை அறிந்து தினேஷ் காதை வெட்டி உள்ளார். இதனால் படுகாயமடைந்த தினேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    மேலும் காதை வெட்டிய நபரை அங்கிருந்த ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

    தி.நகர் எச்.டி.எப்.சி. வங்கியில் இருந்து 100 வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.13 கோடி பணம் வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சென்னை:

    சென்னை தி.நகரில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் 100 பேர் கணக்கில் ரூ.13 கோடி வரவு வைக்கப்பட்டதாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி சென்றது.

    இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உடனே குறிப்பிட்ட 100 வங்கிக் கணக்கை அதிகாரிகள் தற்காலிகமாக முடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், வங்கி சர்வரில் புதிய மென்பொருளை நிறுவியதே குளறுபடிக்கு காரணம் என தகவல் தெரியவந்துள்ளது. 

    வாடிக்கையாளர்களின் பக்கத்தில் சில தகவல்களை அப்டேட் செய்யும்போது வரவு பக்கத்தில் குழப்பம் ஏற்பட்டு பணம் வரவு வைக்கப்பட்டதாகவும், சில கிளைகளில் இதுபோன்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. விரைவில் சரியாகும் என வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    ×