என் மலர்
நீங்கள் தேடியது "He served as Subedar in the Indian Army."
- பாணாவரத்தை சேர்ந்தவர்
- உடல் இன்று கொண்டுவரப்படுகிறது
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கூத்தம் பாக்கத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 44). இவர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகில் உள்ள கோபால்பூரில் இந்திய ராணுவத்தில் சுபேதாரராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சங்கீதாவும் மகன்களும் பாணாவரம் திடீர் நகரில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒடிசா மாநிலம் கோபால்பூரில் சசிகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினருக்கு தகவல் வந்தது. அவரது உறவினர்கள் கோபால் பூர் விரைந்தனர்.
கோபால் பூர் போலீசார் சசிகுமாரின் உடலை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் கோபாலபூர் போலீஸ் வழக்கு பதிவு செய்து சசிகுமார் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த சசிக்குமாரின் உடல் இன்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து பாணாவரத்திற்கு கொண்டு வரப்படுகிறது.