search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health disorders"

    • உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும்.
    • எந்த வேலையும் செய்ய முடியாத சோர்களை ஏற்படுத்துகிறது.

    குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனநல பாதிப்பு உருவாகி வருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    குழந்தைகள் ஓடியாடி விளையாடி உடல் நலனை மேம்படுத்தும் விஷயத்தில் இருந்து ஒதுக்கி வைத்து விடுவதால் உடற்பயிற்சி இன்றி குழந்தைகள் உடல் பருமன் அதிகரித்து, பின்னர் சிறுவயதிலேயே நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உருவாகலாம்.

    செல்போனில் மூழ்கிக்கிடக்கும் குழந்தைகளுக்கு தூக்கம் கெட்டு அவர்கள் பகல் நேரத்தில் கூட ஒருவித தூக்க கலக்கத்திலேயே இருக்கும் உணர்வுடன் காணப்படுகிறார்கள்.

    நீண்ட கால தூக்கமின்மை, குழப்ப மனப்பான்மை, பதற்றம், எந்த வேலையும் செய்ய முடியாத சோர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

    குழந்தைகள் செல்போன் மூலம் தங்கள் வயதுக்கு பொருத்தமற்ற நண்பர்கள் அல்லது குழுவில் பகிர்ந்து கொள்ளும் பொருத்தமற்ற செய்திகள், ஆபாச படங்கள் அல்லது உரையாடல்களை காணும் போது அவர்கள் சிறு வயதிலேயே ஆபாசங்களை நோக்கி நகரும் அபாயம் இருக்கிறது. இது உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி நடத்தை மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

    இதுதவிர, தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் கை விரல் எலும்பு, கழுத்து எலும்பு தேய்மானம், கண்களில் வறட்சி மற்றும் பார்வைத்திறன் குறைதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    செல்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்தி இரவில் தாமதமாக உறங்க செல்பவர்களுக்கு நோய் எதிர்ப்புதிறன் குறைவு, சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பு, கவனக்குறைபாடு, ஞாபக மறதி ஆகியவை ஏற்படவும் வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் உள்ள 74 ஆயிரம் பேரிடம் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அத்தியாவசியத் தேவைகளை தி.மு.க. அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது.
    • ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் பேரூராட்சியில் வாழும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை தி.மு.க. அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது.

    அந்த பகுதியில் நிலவி வரும் சுகாதாரச் சீர்கேடுகளை சரி செய்யவும், பாலாற்றின் குறுக்கே சேதமடைந்துள்ள தரைப் பாலத்தை சீரமைக்கவும், வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கு போதிய டாக்டர்களை நியமிக்கவும் வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மறுநாள் (12-ந்தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்புச் செயலாளர்களான மைதிலி திருநாவுக்கரசு, வாலாஜாபாத் பா. கணேசன் ஆகியோர் தலைமை வகிப்பார்கள். தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சுற்றுலா வாகனங்கள் ஆக்கிரமிப்பால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்
    • திருச்சி ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் சாலையில்

    திருச்சி:

    108 திவ்ய ஸ்தலங்களில் முதன்மையானதாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் திகழ்ந்து வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வருகை தந்து ரெங்கநாதரை வழிபட்டு செல்கின்றனர். வைகுண்ட ஏகாதசி விழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதேபோன்று விஷேச தினங்களில் பல்லாயிரக்கணக்கான வெளியூர் பக்தர்களும் வாகனங்களில் வருகை தருகின்றனர்.

    இந்த கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து சுற்றுலா பஸ்களில் வரும் பக்தர்கள் அம்மா மண்டபம் சாலை, தெப்பக்குளம் தெரு, மங்கம்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்திக்கொண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்புகிறார்கள். இதற்கிடையே மங்கம்மா நகர் பிரதான சாலையில் இருபுறமும் சில நேரங்களில் சுற்றுலா வாகனங்களை குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தி வைக்கிறார்கள். இது அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

    இது தொடர்பாக மங்கம்மா நகர் குடியிருப்பு வாசிகள் கூறும்போது, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சுற்றுலா வாகனங்களில் வரும் பக்தர்கள் நடப்பதற்கு சிரமப்பட்டு ராஜகோபுரம் அருகாமையில் உள்ள மங்கம்மா நகர் பகுதியில் வாகனங்களை நிறுத்துகிறார்கள். வாகனம் நிறுத்துவது பிரச்சினை கிடையாது. வாகனம் நிறுத்தப்பட்டதும் பக்தர்கள் கோவிலுக்கு செல்கிறார்கள்.

    டிரைவர்களும் இறங்கி அவர்களின் சொந்த வேலையாகவும், டீ குடிக்க மற்றும் பாத்ரூம் என சென்று விடுகிறார்கள். இவ்வாறு வாகனங்களை நிறுத்தி செல்பவர்களில் சிலர் நேராக வீட்டு வாசலுக்கு எதிர்ப்புறம் வாகனங்களை நிறுத்துகிறார்கள். இதனால் குடியிருப்புவாசிகள் வீடுகளுக்குள் நிறுத்தியிருக்கும் தங்களது வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே செல்லவும்,

    வீடு திரும்பும் போது உள்ளே வாகனத்தை நிறுத்துவதற்கும் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.

    அது மட்டுமில்லாமல் சுற்றுலா வாகனங்களில் வருபவர்கள் தங்களது குழந்தைகளை வீட்டின் முன்பு சிறுநீர் கழிக்க விடுகிறார்கள். பலர் வீதிகளை திறந்தவெளி கழிப்பறையாகவும் பயன்படுத்துகிறார்கள். மேலும் சிலர் வாகனங்களில் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு இலை மற்றும் உணவு கழிவுகளை வீட்டின் முன்பாகவே போட்டு விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது.

    அதுமட்டுமின்றி வீதிகளில் வீசப்படும் உணவுப்பொருட்கள் பல நாட்கள் அப்புறப்படுத்தப்படாமல் துர்நாற்றம் வீசவும் செய்கிறது. மேலும் அதன் மூலம் கொசுக்கள், ஈக்கள் மொய்த்து தொற்று நோயை பரப்பும் அபாயத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. இதனை ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும். சுற்றுலா வாகனங்கள் கண்ட கண்ட இடத்தில் நிறுத்தாமல் இருக்க பெரிய அளவுக்கு பார்க்கிங் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றனர்.

    • பெத்தநாடார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் நவநீதகிருஷ்ணபுரத்தில் இயங்கி வருகிறது.
    • குப்பை கழிவுகள் அனைத்தையும் நாகல்குளத்தின் கரையோர பகுதிகளில் கொட்டி வருகிறார்கள்.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெத்தநாடார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் நவநீதகிருஷ்ணபுரத்தில் இயங்கி வருகிறது. ஊராட்சிமன்ற தலைவராக பெத்தநாடார்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயராணி கலைச்செல்வன் என்பவர் உள்ளார்.

    குப்பை கழிவுகள்

    ஊராட்சி மன்றத்தின் சார்பாக சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் அனைத்தையும் நாகல்குளத்தின் கரையோர பகுதிகளில் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு மற்றும் நீர் மாசுபாடு ஏற்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    எனவே விவசாய நிலங்களுக்கு செல்லும் குளக்கரைகளில் கொட்டப்படும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் சூழ்நிலை மற்றும் குளங்களில் வாழும் மீன்களும் இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    விவசாயிகள் கோரிக்கை

    இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×