என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health issue"

    • ஏ.ஆர். ரகுமானுக்கு நீர்ச்சத்து குறைந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • நோன்பு காலம் என்பதால் ஏ.ஆர்.ரகுமானும் நோன்பு கடைபிடித்து வருகிறார்.

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று காலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    உடனடியாக அவரை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். உடனடியாக அவரை டாக்டர்கள் பரிசோதித்தார்கள்.

    அப்போது அவருக்கு நீர்ச்சத்து குறைந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் வீடு திரும்பினார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்பட பல்வேறு இந்திய மொழிகளிலும், உலக அளவிலும் இசை அமைத்து வருவதால் ஐதரா பாத், மும்பை, லண்டன் என்று சுற்றிக் கொண்டி ருப்பார்.

    அந்த வகையில் லண்டனில் இருந்து நேற்று இரவுதான் மும்பை வழியாக சென்னை திரும்பினார். இன்று காலையில் தூங்கி எழுந்து அமர்ந்திருந்த போதுதான் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    தற்போது நோன்பு காலம் என்பதால் ஏ.ஆர்.ரகுமானும் நோன்பு கடைபிடித்து வருகிறார்.

    ஏ.ஆர்.ரகுமானுடன் அவரது மகன் அமீன், மகள் இஸ்ரத், சகோதரி ரஹானா ஆகியோரும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்கள்.

    ஏ.ஆர்.ரகுமான் உடல் நிலை குறித்து அவரது மகன் அமீன் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    எங்களது ரசிகர்கள், குடும்பத்தினர், நலம் விரும்பிகள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய அன்பு பிரார்த்தனை ஆதரவு எல்லாவற்றிற்கும் ரொம்ப நன்றி. என் அப்பா நலமுடன் இருக்கிறார் என்பதை உங்களுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • செய்தியாளர் சந்திப்பில் குமாரசாமி பங்கேற்றபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
    • குமாரசாமியை அவரது மகன் நிகில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

    மத்திய அமைச்சரும், ஜேடிஎஸ் தலைவருமான எச்.டி.குமாரசாமிக்கு திடீரென மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, எடியூரப்பா ஆகியோருடன் செய்தியாளர் சந்திப்பில் குமாரசாமி பங்கேற்றபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, குமாரசாமியை அவரது மகன் நிகில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

    குமாரசாமிக்கு ஏற்கனவே இதய பிரச்சனை இருப்பதாகவும், அவருக்கு 2 முதல் 3 முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் காலமானார்.
    • கவியூர் பொன்னம்மாவின் மறைவு மலையாள திரையுலகிற்கு பெரும் இழப்பாகும் என்று முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா (80) காலமானார்.

    மலையாள நடிகர்களான மோகன்லால், நசீர் மற்றும் மம்மூட்டி உள்ளிட்ட நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளவர் கவியூர் பொன்னம்மா. இவர், 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு முறை கேரள அரசின் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

    இவர் உடல்நலக் குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் காலமானார்.

    அவரது மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். கவியூர் பொன்னம்மா மறைவிற்கு கேரள திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • பிசிசிஐ வினோத் காம்ப்ளிக்கு மாத ஓய்வூதியமாக ரூ.30,000 வழங்குகிறது.
    • கடந்த 6 மாதமாக வினோத் காம்ப்ளி மொபைல் போன் இல்லாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர். 51 வயதாகும் அவருக்கு கடந்த டிசம்பர் 21-ம் தேதி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. உடல் நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து இந்திய ஜெர்சி அணிந்து டிஸ்சார்ஜ் ஆனார். இது தொடர்பான வீடியோ வைரலானது.

    இந்நிலையில், வினோத் காம்ப்ளி பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. எனினும் எந்த அளவுக்கு அவரின் நிலைமை உள்ளது என்பது வெளிப்படவில்லை. தற்போது அது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அதாவது, கடந்த 6 மாதமாக வினோத் காம்ப்ளி மொபைல் போன் இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதற்கு முன் ஐபோன் பயன்படுத்திய நிலையில், தனது வீட்டை பழுதுபார்ப்பதற்கு ரூ.15,000 கட்டத் தவறியதால், அதற்கு பதிலாக வினோத் காம்ப்ளியின் ஐபோனை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    ஒரு காலத்தில் 13 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த வினோத் காம்ப்ளி, இப்போது அதனையும் தொலைத்துவிட்டு பிசிசிஐ வழங்கிவரும் ஓய்வூதியத்தை தனது குடும்பச் செலவுகளுக்கு நம்பியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. பிசிசிஐ அவருக்கு மாத ஓய்வூதியமாக ரூ.30,000 வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    அவரின் வீடும் கடனில் உள்ளது. சமீபத்தில் காம்ப்ளியின் மனைவி அளித்த பேட்டியில், ரூ.18 லட்சம் வீட்டுக் கடனுக்காக வங்கி தங்களை தொந்தரவு செய்வதாக கூறியிருந்தார். எனினும் ஒரு அரசியல்வாதி சமீபத்தில் இவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்தாலும், அது வீட்டுக் கடனை அடைக்க போதுமானதாக இல்லை என்று வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

    ×