என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health Tips"

    • நீரிழிவற்ற உடல் பருமன் பிசிஓடி ரத்தகொதிப்பற்ற மக்களும் பழங்களை ஆரோக்கியமான ஸ்நாக்காக அளவோடு உட்கொள்ளலாம்.
    • பல் இல்லாத முதியோர் குழந்தைகளுக்கு நோயாளிகளுக்கு பழத்தை சாறாக்கி வழங்கலாம்.

    பழங்களை பழமாகவே சாப்பிடுவது தான் சிறந்தது.

    அதைச் சாறாக்கி கூழாக்கி குடிப்பது சிறந்தததன்று.

    பழமாக உண்ணும் போது இன்னும் அதிகமான நார்ச்சத்து கிடைக்கும்.

    மேலும் பழச்சாறில் சீனி / சர்க்கரை கலந்து பருகுவது மிகப்பெரும் தவறு.

    அது அந்த பழத்தின் இயற்கை சுவையை மறக்கடித்து விடுகிறது. மேலும் இனிப்பு கலந்த பழச்சாறு நன்மை தருவதை விட கேட்டைத்தான் அதிகமாக தரும்.

    ஆனால் நானும் பழச்சாறுக்கடைகளில் பார்த்து விட்டேன். சீனி இல்லாமல் எங்கும் விற்பனை நடப்பதில்லை. பழத்தை உண்ணுங்கள்.

    சாறாக பருகவேண்டும் எனில் இனிப்பு சேர்க்காமல் அந்த பழத்தின் இயற்கை சுவையோடு பருகுங்கள்.

    ஒரு செயற்கை குளிர்பானம் குடிப்பதை விடவும் பழச்சாறு குடிப்பது சிறந்தது தான்.

    ஆனால் அதில் சீனி/ சர்க்கரை சேர்க்கும் வரை மட்டுமே அது செயற்கை குளிர்பானங்களை விடச் சிறந்தது என்பதை அறிக. சிறார் சிறுமியருக்கு பேக்கரி உணவுகளைக் காட்டிலும் பழங்கள் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்.

    நீரிழிவற்ற உடல் பருமன் பிசிஓடி ரத்தகொதிப்பற்ற மக்களும் பழங்களை ஆரோக்கியமான ஸ்நாக்காக அளவோடு உட்கொள்ளலாம்.

    பல் இல்லாத முதியோர் குழந்தைகளுக்கு நோயாளிகளுக்கு பழத்தை சாறாக்கி வழங்கலாம்.

    பழங்களில் மேற்படி இனிப்பை சேர்ப்பது என்பது அதில் இருக்கும் நன்மைகளை மழுங்கடிக்கச் செய்து விடுகிறது .

    -டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா

    • தூக்கமின்மை, கல்வி மற்றும் வேலைக்கான செயல் திறன் மற்றும் நினைவுத் திறனை பாதிக்கும்.
    • மன அழுத்தம் மற்றும் தவறான வாழ்வியல் முறைகளே பெரும்பாலும் தூக்கமின்மை ஏற்படுவதற்கான காரணங்கள்.

    தினசரி யாருக்கு, எவ்வளவு நேரம் தூக்கம் அவசியம்?

    நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிவுறுத்தலின் படி,

    3 மாதம் வரையுள்ள குழந்தைகள் 14 - 17 மணிநேரம்,

    4 - 12 மாதம் வரையுள்ள குழந்தைகள் 12 - 16 மணிநேரம்,

    1 முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகள் 11 - 14 மணிநேரம்,

    3 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் 10 - 13 மணிநேரம்,

    6 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் 9 - 12 மணிநேரம்,

    13 - 18 வயது வரையுள்ள வளிரிளம் பருவத்தினர் 8 - 10 மணிநேரம்

    மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 7 - 9 மணிநேரம், தினந்தோறும் தூங்க வேண்டும்.

    தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

    தொடர்ந்து தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம், இதய நோய், ஆஸ்துமா, உடல் பருமன், மனச்சோர்வு, குழப்பம் போன்றவை ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.

    மேலும், தூக்கமின்மை, கல்வி மற்றும் வேலைக்கான செயல் திறன் மற்றும் நினைவுத் திறனை பாதிக்கும்.

    தூக்கமின்மை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

    மன அழுத்தம் மற்றும் தவறான வாழ்வியல் முறைகளே பெரும்பாலும் தூக்கமின்மை ஏற்படுவதற்கான காரணங்கள்.

    ஒழுங்கற்ற தூக்க அட்டவணை, தூக்க நேரத்தில் செல்போன், லேப்டாப், டிவி போன்றவற்றை தொடர்ந்து உபயோகப்படுத்துவது, தூங்கும் அறையில் அதிகளவு வெளிச்சம் அல்லது சத்தம் இருத்தல் போன்றவை தூக்கமின்மையை ஏற்படுத்தும். காஃபீன், நிக்கோட்டின், மது போன்றவை தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

    உளவியல் பாதிப்புகள், புற்றுநோய், இதய நோய், ஆஸ்துமா, மனச்சோர்வு நோய், இருமல் போன்றவற்றிற்கு உபயோகப்படுத்தும் சில மருந்துகளும் தூக்கமின்மையை ஏற்படுத்தலாம்.

    -எம். எஸ். சீதாராமன்

    • நெல்லிக்காய்னு சொன்னதுமே பெரிய நெல்லிக்காயா? சின்ன நெல்லிக்காயான்னுதான் நிறையபேர் கேள்வி கேப்பாங்க.
    • நெல்லிக்காய் இதயத்தை பாதுகாக்குறதோட கொழுப்பை கரைக்கும். அதோட ரத்தக்குழாய்ல கொழுப்பு படியாம தடுக்கக்கூடியது.

    இந்தியாவை பொறுத்தவரைக்கும் இன்றைக்கு பெரும்பாலானவர்கள் இதய நோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ரொம்பவே அவதிப்பட்டு வர்றாங்க. அப்படிப்பட்டவங்க தினமும் காலையில வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலே போதும், நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.

    அதுசரி, நெல்லிக்காய்னு சொன்னதுமே பெரிய நெல்லிக்காயா? சின்ன நெல்லிக்காயான்னுதான் நிறையபேர் கேள்வி கேப்பாங்க. பொதுவா அரிநெல்லின்னு சொல்லக்கூடிய சின்ன நெல்லிக்காயை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துறது இல்லை. ஆனாலும் ஒரு கேள்வி கேட்டு வைப்பாங்க... நம்ம மக்கள். நெல்லிக்காய்... நாட்டு நெல்லிக்காய், எலுமிச்சம்பழம் அளவு பெரிதாக இருக்குமே அந்த நெல்லிக்காய்தான் நான் சொல்லக்கூடியது.

    வெறுமனே நெல்லிக்காய் சாப்பிட முடியலைனா நெல்லிக்காயோட இஞ்சி சேர்த்து அரைச்சி அதோட எலுமிச்சை சாறு சேர்த்து சர்க்கரை, தேவைப்பட்டா உப்பும் சேர்த்து தண்ணி கலந்து சாப்பிடலாம். காலையில் டீக்கு பதிலாக இந்த ஜூஸை குடிக்கலாம்.

    நெல்லிக்காய் இதயத்தை பாதுகாக்குறதோட கொழுப்பை கரைக்கும். அதோட ரத்தக்குழாய்ல கொழுப்பு படியாம தடுக்கக்கூடியது. கல்லீரல், கணையத்தை பாதுகாக்கும். அந்த வகையில கல்லீரல், கணையத்தில் வரக்கூடிய புற்றுநோய்களையும் சரி செய்யும் நெல்லிக்காய். ஏன்... ரகசியமா வரக்கூடிய எய்ட்ஸ் நோயைக்கூட நெல்லிக்காய் குணப்படுத்தும்னு ஆராய்ச்சியில கண்டுபிடிச்சிருக்காங்க. ஆனா நாம சாப்பிடுற முறையிலதான் நோய் குணமாகும்.

    -மரியா பெல்சின்

    • கொழுப்பு தேவையென்றால் உடலே அதனை உருவாக்கிக் கொள்ளும்.
    • கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிட்டால் மட்டும்தான் கொழுப்புகள் உருவாகும் என்பது கற்பனைதான்.

    இதயத்தில் அல்லது ரத்தத்தில் கொழுப்பு உருவாவதற்கோ அல்லது அடைப்பு ஏற்படுவதற்கோ கொழுப்பு அதிகமுள்ள உணவுகளே காரணம் என்று மருத்துவ விஞ்ஞானிகளும், பன்னாட்டு மருந்து நிறுவனத்தினரும் கூறிவருகிறார்கள்.

    ஆட்டினுடைய உடல் அமைப்பில் இயல்பாகவே கொழுப்பு அதிகமாக இருக்கும். உடலில் எந்த அளவு தசை இருக்கிறதோ, அதே அளவு கொழுப்பும் இருக்கும். இவ்வளவு கொழுப்பு உருவாவதற்கு ஆடு எவ்வளவு கொழுப்பை உணவாக உட்கொண்டிருக்க வேண்டும்?

    ஆனால், ஆடு சுத்த சைவம். சைவ உணவுகளை மட்டும் அதிலும் இயற்கையான, சமைக்காத உணவுகளை மட்டுமே ஆடுகள் சாப்பிடுகின்றன. ஆனால் இவ்வளவு கொழுப்பு ஆட்டிற்கு எங்கிருந்து வந்தது?

    கொழுப்பு தேவையென்றால் உடலே அதனை உருவாக்கிக் கொள்ளும். கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிட்டால் மட்டும்தான் கொழுப்புகள் உருவாகும் என்பது கற்பனைதான்.

    நாம் உண்ணும் முறைதான் நோய்களை உருவாக்குகிறது. பசியில்லாத நேரத்தில் நீங்கள் சாப்பிடும் உணவு சைவமாக இருந்தால் கூட, அதிலிருந்து கொழுப்பு உருவாக வாய்ப்பிருக்கிறது. பசியோடு இருக்கும் நேரத்தில் நீங்கள் சாப்பிடும் உணவு அசைவமாக, கொழுப்பு அதிகம் இருக்கும் உணவாக இருந்தாலும், அதிலிருந்து உடலிற்குத் தேவையில்லாத கொழுப்பு உருவாகாது.

    அதே போல, கொழுப்பு என்றவுடன் நமக்கு ஒருவித பயம் ஏற்படுகிறது. உண்மையில் கொழுப்பு உடலிற்கு அவசியமான சத்துக்களில் ஒன்று. நம் உடலின் உள்ளுறுப்புகளின் முழுமையான உருவாக்கத்திற்கு கொழுப்பு அவசியம். நம் உடலின் ஒவ்வொரு செல்லும் கொழுப்பால் ஆன வெளிச்சுவரைக் கொண்டிருக்கிறது. கொழுப்பைக் குறைக்கிறேன் பேர்வழி என கடுமையான டயட்டில் இருப்பது, காம்பவுண்ட் சுவரே இல்லாமல் வீடு கட்டுவது போன்ற பாதுகாப்பற்ற நிலைக்கு நம் உடலை ஆளாக்கிவிடும்.

    -உமர் பாரூக்

    • உடல் எடையை குறைக்க காலை உணவை தவிர்ப்பது சரியான வழி அல்ல.
    • எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள்.

    உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முதலில் குறைக்க நினைப்பது தொப்பை பகுதியைத்தான். உடலின் புறப்பகுதியில், நம்முடைய கண்ணுக்குத் தெரியும் தொப்பையை மட்டும் கொலஸ்ட்ரால் என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

    ஆனால் நம்முடைய கண்ணுக்குத் தெரியாமல் சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற உடலின் உள்ளுறுப்புகளிலும் கொழுப்பு படிந்திருக்கக்கூடும். இது தொப்பை பகுதியைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானது. உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய கொழுப்பானது இருக்கும் என நினைக்கக்கூடாது. ஒல்லியாக மற்றும் சரியான உடல் அமைப்பைக் கொண்ட மக்களிடமும், இது காணப்படுகிறது.

    உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

     * பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை வி...ட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

    * எடையை குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

    * காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

    * இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

    * உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

    * தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

    * எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

    இதனை தொடர்ந்து செய்து வந்தால், பானை போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

    • டோபமைன் சிறப்பான அளவில் வெளியிடப்பட்டால் மனநிலை சிறப்பாக இருக்கும்.
    • பசலைக்கீரை ஆண்மை மற்றும் கருவுறுதலை அதிகரிப்பதற்கு உதவுகிறது.

     பூண்டு

    பூண்டில் இருக்கும் அல்லிசின் திருமணமான ஒவ்வொரு ஆண்களுக்கும் அவசியமான ஒன்று. ஏனென்றால் இந்த பொருள் தான் ஆண்களின் பிறப்புறுப்பு பகுதிகளுக்கு ரத்த ஓட்டட்தை அதிகரிக்க உதவுகிறது. இதுதான் பாலியல் வாழ்க்கைக்கு சிறப்பாக அமையும்.

    சாக்லேட்

    சாக்லேட்டி டோபமைன் உள்ளது. உடலில் டோபமைன் சிறப்பான அளவில் வெளியிடப்பட்டால் மனநிலை சிறப்பாக இருக்கும். மற்றும் அவர்கள் தங்களை எப்போதும் மகிழ்ச்சியாக உணர்வார்கள். மன அழுத்தமின்றி இருப்பார்கள்.

    வாழைப்பழம்

    திருமணமான ஆண்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிடுவதை வழக்க மாக்கிக்கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு தேவையான வைட்டமின் பி6, பொட்டாசியம், கால்சியம் போன்றவை கிடைக்கிறது. இது உடலையும் மனதையும் சுறுசுறுப்பாகவும், வலிமையாக வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் இது காதல் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. பாலுணர்வை நல்ல நிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது.

    பசலைக்கீரை

    பசலைக்கீரையில் உள்ள ஃபோலிக் அமிலம் ஆண்மை மற்றும் கருவுறுதலை அதிகரிப்பதற்கு உதவுகிறது.

    கடல்சிப்பிகள்

    கடல் சிப்பிகளில் துத்தநாகம் மற்றும் ஜிங்க் உள்ளது. இது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கக் கூடியது. மேலும் கடல் சிப்பி உணவுகளும் காதல் ஹார்மோன்களை அதிகரிக்கக்கூடியவை.

    மாதுளை

    பழங்களில் மாதுளைப்பழம் எல்லோருக்கும் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக வழங்குகின்றன. மேலும் மாதுளை கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கும் உதவுகிறது.

    • உங்கள் உடல் படுக்கைக்கு முன் ஒரு கனமான உணவை ஜீரணிக்காது.
    • தாமதமான இரவு உணவு செரிமானத்தை பாதிக்கும் மற்றும் எடை அதிகரிப்புக்கு பங்களிக்கும்.

    உணவும் மருந்தும் ஒன்றே... படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்... பசிக்காக சாப்பிடு ருசிக்காக சாப்பிடாதே... இதுபோன்ற பழமொழிகளை சும்மாவா சொன்னார்கள்...

    இன்றைய அவசரமான உலகில் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாத நிலை உள்ளது. வீட்டு வேலை, பணி சுமை போன்ற காரணங்களால் நேரம் தவறி உணவு சாப்பிடுவதால் பலர் ஆரோக்கிய சீர்கேடுக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இன்னும் சொல்லப்போனால் இரவு நேரத்தில் 9.30 மணிக்கு மேலாகவும் பலர் உணவு உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது தவறான பழக்கம் என்றும் மாலை 6 மணிக்கு முன்னதாகவே உணவை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இது தொடர்பாக நியூட்ரியண்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவுகளில், "இரவு உணவை தாமதமாக சாப்பிடுவது போது, வளர்சிதை செயல்பாட்டில் மாற்றம், குளுகோஸ் வளர்சிதை செயலிழப்புகளை ஊக்குவிக்கிறது.

    இதற்கு நேர்மாறாக, ஒருநாளின் கடைசி உணவை முன்கூட்டியே சாப்பிடும் போது, இரத்த குளுக்கோஸ், இன்சுலின் உணர்திறன், இரத்தத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இது அதிக எடை கொண்டவர்கள் அல்லது உடல்பருமன் கொண்டவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்."


    பெங்களூரில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் ஆலோசகர் இரைப்பை குடல் மருத்துவ நிபுணரான டாக்டர் பிரணவ் ஹொன்னவரா சீனிவாசன் உணவு நேரத்தை மாற்றும் போது ஏற்படும் உடனடி உடலியல் மாற்றங்கள் குறித்து கூறியதாவது:-

    "இரவு உணவை இரவு 9 மணிக்கு முன்னதாக மாலை 6 மணிக்கு மாற்றுவது உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களின் அடுக்கை அமைக்கிறது. உங்கள் உடல் படுக்கைக்கு முன் ஒரு கனமான உணவை ஜீரணிக்காது. அதுவே மாலையில் உடனடி ஆற்றல் அதிகரிப்பதை நீங்கள் கவனிக்கலாம். இந்த மாற்றம் இரவுநேர நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணம் போன்ற பொதுவான செரிமான அசௌகரியங்களைத் தணிக்கும். ஏனெனில் நீங்கள் படுப்பதற்கு முன் உங்கள் வயிறு காலியாகிவிடும்."

    "மேலும், இது ஆரம்ப இரவு உணவுகள் இரவு முழுவதும் நிலையான இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும், தூக்கத்தின் தரம் மற்றும் காலை விழிப்புணர்வை மேம்படுத்தும். தாமதமான இரவு உணவு செரிமானத்தை பாதிக்கும் மற்றும் எடை அதிகரிப்புக்கு பங்களிக்கும்," என்கிறார்.

    • ஆரோக்கியத்தை மேம்படுத்த, சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
    • இயற்கை சர்க்கரையை விட பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரை ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

    ஒரு நாளைக்கு உண்ணக்கூடிய சர்க்கரையின் அளவு என்பது நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் மொத்த கலோரிகளின் அளவு மற்றும் நமது செயல்பாடுகளை பொறுத்தது.

    பொதுவாக முடிந்தவரை அதிகமான சர்க்கரைகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கவில்லை. அதிக சர்க்கரை சாப்பிடுவது தடுப்பூசி மூலம் தடுக்கப்பட்ட பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

    இது கூடுதல் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் கலோரிகளை வழங்குகிறது மற்றும் நீண்ட காலத்திற்கு வளர்சிதை மாற்றத்தை சேதப்படுத்தும். 

    பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற உணவுகளில் இருந்து இயற்கையாக கிடைக்கும் சர்க்கரைகள் மற்றும் சர்க்கரைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை காண்பது மிகவும் முக்கியம்.

    பழங்கள், காய்கறிகளில் நீர், நார்ச்சத்து மற்றும் பல்வேறு நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. இயற்கையாக கிடைக்கும் சர்க்கரைகள் முற்றிலும் நல்லது, ஆனால் சேர்க்கப்பட்ட சர்க்கரைக்கு இது பொருந்தாது.

    மிட்டாய்களில் சர்க்கரை முக்கிய மூலப்பொருளாகும். குளிர்பானங்கள், வேகவைத்த பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்களில் சர்க்கரை உள்ளது.

     

    ஆரோக்கியத்தை மேம்படுத்த, சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

    நாம் ஒருநாளைக்கு எடுத்துக்கொள்ளும் மொத்த கலோரிகளில் வெறும் 10% மட்டும் தான் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்கர்களுக்கான உணவு வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கிறது.

    மேலும் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளில் இயற்கை சர்க்கரையும் அடங்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக உங்கள் ஓட்ஸ் மீலில் தேனை சேர்த்தால், ஓட்ஸ் மீலில் இயற்கையான மூலத்திலிருந்து சேர்க்கப்பட்ட சர்க்கரை உள்ளது.

    பழங்கள் மற்றும் காய்கறிகள் உணவுகளில் உள்ள இயற்கை சர்க்கரையை விட பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரை ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

    அதிகப்படியான சர்க்கரை நுகர்வு உடல் பருமன், டைப் 2 நீரிழிவு, இதய நோய், சில புற்றுநோய்கள், பல் சிதைவு, ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

    அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA)படி, ஒரு நாளில் உண்ண வேண்டிய அதிகபட்ச சர்க்கரை அளவு:

    ஆண்கள்: ஒரு நாளைக்கு 150 கலோரிகள் (37.5 கிராம் அல்லது 9 டீஸ்பூன்)

    பெண்கள்: ஒரு நாளைக்கு 100 கலோரிகள் (25 கிராம் அல்லது 6 டீஸ்பூன்)

    நீங்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தால், மேற்கூறிய அளவு சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் இந்த சிறிய அளவிலான சர்க்கரையை எரித்துவிடலாம்.

    இருப்பினும் உணவில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    • சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளிர்பானங்கள் அருந்துவதால் பலவிதமான உடல் கோளாறுகள் ஏற்படும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
    • குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது.

    தினமும் காலை எழுந்ததும் பலர் கட்டாயம் காபி குடிப்பதை விரும்புவார்கள். காபி குடிக்காவிட்டால் அந்த நாளே ஓடாது என்று சொல்லுவார்கள். அதே போல், இன்றைய காலத்தில் நம் வாழ்வோடு குளிர்பானங்கள் இரண்டற கலந்துவிட்டன என்றே கூறலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதனை அருந்தாமல் இருக்க முடிவதில்லை.

    ஒருமுறை சுவை பழகி போனவர்களுக்கு இன்னும் சொல்லவே வேண்டாம். ஆனால், இயற்கையாக அல்லாத செயற்கையாக விற்கப்படும் குளிர்பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. அவற்றில் கெமிக்கல், சர்க்கரை மற்றும் தண்ணீர் இதைத் தவிர ஒன்றுமே இருக்காது. எந்த சத்துமில்லாத, ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள இவ்வகை குளிர்பானங்களை எதற்காக விரும்பி அருந்துகின்றனர் என்று தெரியாமலே பலர் அருந்தி வருகின்றனர்.

    சாப்பிட்டது செரிமாணம் ஆவதற்கு பலரும் குளிர்பானங்களை அருந்துவார்கள். சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளிர்பானங்கள் அருந்துவதால் பலவிதமான உடல் கோளாறுகள் ஏற்படும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில், குளிர்பானங்களை அருந்தாமல் இருப்பது உடலுக்கு பல வழிகளில் நல்லது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் உடல் பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது.

    குளிர்பானங்களில் பாஸ்போரிக் அமிலம் (பல் பற்சிப்பியை சேதப்படுத்துகிறது), அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப் (குழிவுகளை உண்டாக்குகிறது) மற்றும் அசெசல்பேம் பொட்டாசியம் (புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையது) உள்ளது என்று வோக்கார்ட் மருத்துவமனையின் டாக்டர் அனிகேத் முல் கூறினார்.

    • பொதுவாக 7 முதல் 8 மணிநேர தூக்கம் என்பது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பொருந்தும்.
    • அவரவர் வயதுக்கு ஏற்ப உடலுக்கும் மனதிற்கும் தேவையான ஓய்வை கொடுப்பது, நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் நீண்ட ஆயுளுக்கும் போதுமான தூக்கம் தேவை என்பதை மறுக்க முடியாது. ஆனால் எத்தனை மணி நேர தூக்கம் போதுமானதாக கருதப்படுகிறது..? வயதுக்கு ஏற்ப தூக்க நேரம் என்ன?

    அதிகமான தூக்கம் அல்லது மிகக் குறைந்த தூக்கம் பெரும்பாலும் உடல் நோய்க்கான அறிகுறியாகும். நீங்கள் இவை இரண்டையும் செய்வதில்லை என்றாலும் உங்கள் வயதுக்கு எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வது அவசியம். பொதுவாக 7 முதல் 8 மணிநேர தூக்கம் என்பது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பொருந்தும்.

    இந்த நிலையில், ஒரு நபருக்கு 4 மணி நேரம் தூக்கம் போதும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக டாக்டர் மனன் வோரா கூறியுள்ளார்.

    சமீபத்திய, போட்காஸ்ட் நிகழ்ச்சியில் மருத்துவர் டாக்டர் மனன் வோரா உடல்நலம், தூக்கம், ஊட்டச்சத்து உள்ளிட்ட பலவற்றைப் பற்றிப் பேசினார். அப்போது, நான்கு மணிநேர தூக்கம் கூட ஒரு நபருக்கு போதுமானது என்பதை நிரூபிக்கும் ஆராய்ச்சி ஆய்வுகள் உள்ளதாக கூறினார்.

    தூக்கம் வருவதில்லை, இரவு முழுக்க விழித்தே இருக்கிறேன் என புலம்பி தள்ளும் 90-ஸ் மற்றும் 2K கிட்ஸ்களுக்கு இந்த ஆய்வு முடிவு ஓரளவுக்கு நிம்மதியை கொடுக்கலாம். எனினும், அவரவர் வயதுக்கு ஏற்ப உடலுக்கும் மனதிற்கும் தேவையான ஓய்வை கொடுப்பது, நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    • ஜாக்கிங் பயிற்சியை பலரும் காலைப்பொழுதில்தான் மேற்கொள்வார்கள்.
    • இரவில் ஜாக்கிங் பயிற்சி செய்வதில் சில பிரச்சனைகளும் இருக்கின்றன.

    நடைப்பயிற்சியின் அடுத்தக்கட்டமாக 'ஜாக்கிங்' அமைந்திருக்கிறது. இந்த பயிற்சியை மேற்கொள்வதற்கு உடலை அதிகம் வருத்திக்கொள்ள வேண்டியதில்லை. ஜிம்முக்கு சென்று மேற்கொள்ளப்படும் கடினமான பயிற்சிகளை போன்று சிரமப்பட வேண்டியதில்லை. அதே வேளையில் எளிமையான முறையில் கலோரிகளையும் ஓரளவுக்கு எரித்துவிடலாம். இதனை மேற்கொள்வதற்கு தரமான, பொருத்தமான காலணிகள் இருந்தால் போதுமானது.

    இந்த ஜாக்கிங் பயிற்சியை பலரும் காலைப்பொழுதில்தான் மேற்கொள்வார்கள். ஜாக்கிங் பயிற்சி செய்வதற்கு ஆர்வம் இருந்தும் சோம்பேறித்தனம் காரணமாக காலையில் அதனை தவிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இரவு நேரத்தில் கூட ஜாக்கிங் பயிற்சியை மேற்கொள்ளலாம். இரவு நேர ஜாக்கிங் பயிற்சியின் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

    * இரவு நேரத்தில் சாப்பிட்ட பிறகு ஜாக்கிங் செய்யும்போது உணவு செரிமானம் ஆவதற்கு போதுமான கால அவகாசம் கிடைக்கும். உணவும் எளிதில் ஜீரணமாகிவிடும். கலோரிகளை எளிதாக எரிப்பதற்கும் வித்திடும். காலையில் வெறும் வயிற்றில் ஜாக்கிங் மேற்கொள்வது சவாலாக இருக்கும். அதனை விரும்பாதவர்களுக்கு இரவு நேர ஓட்டம் ஏற்றதாக இருக்கும். ஆனால் இரவு சாப்பிட்ட உடனேயே ஜாக்கிங் செய்யக்கூடாது.

    * இரவு நேரத்தில் ஓடுவது அதிகப்படியான ஆற்றலை எரிப்பதற்கும் உதவிடும்.

    * இரவில் ஓடும்போது தசைகளுக்கும் பலம் சேர்க்கும். அவை வேகமாக வலுவடைவதற்கு உதவும். தசைகள் தளர்வடைவதற்கும் உதவும் என்பதால் இரவில் நன்றாக தூங்குவதற்கு உதவிடும்.

    * இரவில் ஜாக்கிங் செய்வது மனநிலையை அதிகரிக்கச் செய்யும் எண்டோர்பின் ஹார்மோன்களை வெளியிடுவதற்கும் வழிவகுக்கும். அதன் மூலம் மனக்கவலை, மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் வைக்கும். மனக்குழப்பத்தை விலக்கி அடுத்த நாள் சிறப்பாக திட்டமிடுவதற்கும் வழிவகை செய்யும்.

    * பகல் நேரத்தை விட இரவில் ஓடும்போது சுற்றுச்சூழலை சூழ்ந்திருக்கும் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும். அதனால் கூடுதல் நேரம் ஓடுவதற்கும் துணை புரியும்.

    * காலையில் அலாரத்துடன் போராடி எழுந்து அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில் குறைவாக நேரமே ஜாக்கிங் செய்பவர்கள் இரவு நேரத்தை தேர்ந்தெடுக்கலாம். இரவில் அதிக நேரம் ஓடியும் பயிற்சி பெறலாம்.

    * இரவில் ஜாக்கிங் பயிற்சி செய்வதில் சில பிரச்சனைகளும் இருக்கின்றன. பகலை விட இரவில் வெளிச்சம் குறைவாக இருக்கும் என்பதால் ஓடும் பாதையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பள்ளங்கள், கற்கள் சிதறி கிடந்தால் பாதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதனால் கவனமாக ஓட வேண்டும்.

    • நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.
    • இதன்மூலம் சாப்பிடும் முறையை வலியுறுத்தியுள்ளனர்.

    சென்னை:

    உணவும் மருந்தும் ஒன்றே... படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்... பசிக்காக சாப்பிடு ருசிக்காக சாப்பிடாதே... இதுபோன்ற பழமொழிகளை சும்மாவா சொன்னார்கள்...

    சத்தான உணவு உள்பட எந்த உணவாக இருந்தாலும் சாப்பிடும் முறையில் ஆரோக்கியம் உள்ளது என்பது முன்னோர் வாக்கு.

    காலையில் அரசனைப் போன்றும், நண்பகலில் சாதாரண மனிதனைப் போன்றும், இரவில் பிச்சைக்காரனைப் போன்றும் சாப்பிட வேண்டும் என பெரியோர் சொல்வது வழக்கம்.

    காலை மடக்கி மடித்து சம்மணமிட்டு (சுக ஆசனம்) சாப் பிடும்போது இரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதிக்குள் சீராக செல்வதால் செரிமானம் எளிதாகிறது.

    நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி. இதன்மூலம் சாப்பிடும் முறையை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

    உணவை நன்றாக மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்.

    சாப்பிடும் போது பேசக்கூடாது என சொல்வார்கள். சாப்பிடும்போது வெளியில் இருந்து காற்று வாய் வழியே உள்ளே செல்லும். எனவே பேசாமல் உதடுகளை மூடியபடி சாப்பிட்டால் உடல் நன்கு ஆரோக்கியம் அடையும்.

    மனதில் எந்த உணர்வும் இன்றி உணவை ரசித்து உமிழ்நீரோடு கலந்து மென்று சாப்பிட்டால் நூறு வயது வரை வாழலாம். அப்படி இல்லையெனில் ஆரோக்கியத்தோடு வாழலாம்.

    சாப்பிடுவது குறித்துசாஸ்திரம் சொல்வது என்ன?

    இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்.

    ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.

    குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு சாப்பிடக் கூடாது.

    சாப்பிடும்போது முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு அதன்பின் நீர் அருந்தவேண்டும்.

    சாப்பிடும் வேளை தவிர மற்ற நேரங்களில் இடது கையால் தண்ணீரை அருந்தக் கூடாது.

    இருட்டில் சாப்பிடக் கூடாது.

    சாப்பிடும்போது விளக்கு அணைந்து விட்டால் சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிடவேண்டும் என தெரிவிக்கிறது.

    ×