என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health Tips"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாய், தொண்டை மற்றும் குடலுக்கு நன்மை செய்யும் இந்த பாக்டீரியாக்கள் செரிமானத்தை எளிதாக்குகின்றன.
    • கையைக் கழுவாமல் சாப்பிட்டால் கையில் உள்ள கிருமிகள் உடலுக்குள் சென்றுவிடும்.

    கையால் சாப்பிடுவதில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அப்படியிருக்க, ஸ்பூனை பயன்படுத்தி உணவு சாப்பிடுவது இன்றைக்கு ஒரு பேஷனாக மாறிவிட்டது. பிடிக்கிறதோ, இல்லையோ ஸ்பூனில் சாப்பிடுவதுதான் நாகரிகம் என்றாகிவிட்டது. அதிலிருந்து மாறுபட்டு, கையால் சாப்பிடுவதால் சில நன்மைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது, 'நன்மை செய்யும் பாக்டீரியாக்கள்'.

    உணவைத் தொட்டவுடன் அது சூடாக இருக்கிறதா?, குளிர்ச்சியாக இருக்கிறதா?, திட நிலையில் இருக்கிறதா?, திரவ நிலையில் இருக்கிறதா..? என்று எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். அந்தத் தகவல் உடனடியாக மூளைக்குப் போகிறது.



    நாம் சாப்பிடப் போகிறோம் என்பதை மூளை உணர்ந்துகொண்டு வயிற்றுக்கு தகவல் அனுப்புகிறது. வயிறு, செரிமானத்துக்குத் தேவையான அமிலங்களைச் சுரக்கும் நிகழ்வை (உணவு வாய்க்கு வந்ததும்) தொடங்கிவிடுகிறது. மேலும், நமது கையில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன.

    வாய், தொண்டை மற்றும் குடலுக்கு நன்மை செய்யும் இந்த பாக்டீரியாக்கள் செரிமானத்தை எளிதாக்குகின்றன. ஆனால் கையைக் கழுவிவிட்டு சாப்பிடும்போதுதான் இந்த பலன் கிடைக்கும். கையைக் கழுவாமல் சாப்பிட்டால் கையில் உள்ள கிருமிகள் உடலுக்குள் சென்றுவிடும்.

    • குளிர்ந்த நீர் சிகிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
    • மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் குளிர்ந்த நீரில் மூழ்கி எழுவது பலனளிக்கும்.

    ஐஸ்கட்டி போல் ஜில்லென குளிர்ந்திருக்கும் நீரில் குளியல் போடுவது கூட ஆரோக்கியத்திற்கு ஏற்புடையதுதான். 'குளிர் நீர் தெரபி' எனப்படும் இந்த சிகிச்சையை மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    * தசை வலி

    உடற்பயிற்சியின்போதோ, கடுமையான உடல் உழைப்பின்போதோ ஏற்படும் தசை வலியை போக்க குளிர்ந்த நீர் சிகிச்சை உதவும். ஏனெனில் குளிர்ந்த நீர் ரத்த நாளங்களின் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் பணியை எளிதாக்கும். மேலும் குளிர்ந்த நீர் சிகிச்சை உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைப்பதன் மூலம் தசைகளுக்கு புத்துயிர் அளிக்கும். லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப்பொருட்களை வெளியேற்றும். கடுமையான உடல் செயல்பாடுகளுக்கு பிறகு ஏற்படும் தசை வலியையும் குறைக்கும்.

    * தூக்கம்

    குளிர்ந்த நீர் சிகிச்சை நன்றாக தூங்கவும் உதவிடும். உடல் வெப்பநிலை குளிர்ச்சி சூழலில் இருப்பது தூக்கத்திற்கு உகந்தது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தூங்குவதற்கு முன்பு 5 முதல் 10 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் குளியல் போடுவது ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

    * நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

    குளிர்ந்த நீர் சிகிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதனால் சட்டென்று நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பும் குறையும். குளிர் நீர் சிகிச்சை மேற்கொண்டவர்கள் வலிமையான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பதாக நெதர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

    * மனநிலையை மேம்படுத்தும்

    ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டு மன ரீதியாக பலவீனமாக இருந்தாலோ, மன வேதனைக்கு ஆளானாலோ மன நிலையை மேம்படுத்துவதற்கு குளிர்ந்த நீர் குளியல் துணை புரியும். அப்படி உடலில் குளிர் வெப்பநிலை வெளிப்படுவது நோராட்ரெனலின் உற்பத்தியை அதிகரிக்கும். இது மூளையை தூண்டி கவனமுடன் செயல்படுவதற்கு ஊக்கமளிக்கும். மன நிலையை செம்மைப்படுத்தவும் வழி வகுக்கும்.

    * மனச்சோர்வை போக்கும்

    மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் குளிர்ந்த நீரில் மூழ்கி எழுவது பலனளிக்கும். இந்த குளிர் நீர் குளியல் மூளையில் இருந்து நரம்பு மண்டலம் வழியாக பயணிக்கும் நரம்புகளை தூண்டி அதன் செயல்பாடுகளை மேம்படுத்த உதவிடும். உடலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி சோர்வை விரட்டிவிடும். அதிலும் மனதளவில் மந்தமாகவும், சோர்வாகவும் உணர்ந்தால் குளிர்ந்த நீர் சிகிச்சை சிறந்த தீர்வாக அமையும். மனத்தெளிவை உண்டாக்கும். கவனிக்கும் திறனையும், அறிவாற்றல் செயல்பாட்டையும் வலுப்படுத்தும்.

    • அறுபது நிமிடம் நடைப்பயிற்சி செய்வது உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்க போதுமான நேரத்தை அளிக்கும்.
    • தொடர்ந்து 60 நிமிடங்கள் நடப்பது உடலுக்கும், தசைகளுக்கும் பலம் சேர்க்கும்.

    நடைப்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பலரும் அதனை தவறாமல் பின்பற்றுகிறார்கள். குறிப்பாக, காலை 6 மணி, மாலை 6 மணி என 60 நிமிடங்கள் நடப்பதும், 6 நிமிடங்கள் வார்ம்-அப் பயிற்சி செய்வதும், 6 நிமிடங்கள் உடலை குளிர்வடையச் செய்வதும்தான் நடைப்பயிற்சியின் பலன்களை அதிகமாக்கும். இந்த நடைப்பயிற்சி முறையை 6-6-6 நடைப்பயிற்சி என்கிறார்கள். இதன்படி நடைப்பயிற்சி மேற்கொள்வது எத்தகைய பயன்களை தரும் என்பதை அறிந்து கொள்வோம்.

    காலை 6 மணி

    தினமும் சராசரியாக 30 நிமிடங்கள் நடப்பது இதய நோய் அபாயத்தை 35 சதவீதம் குறைக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு நடைப்பயிற்சி செய்வதில் குறிப்பிடத்தக்க நன்மைகள் உள்ளன. புதிய காற்றை சுவாசிக்கவும், வளர்சிதை மாற்றத்தை தூண்டவும் அது சிறந்த நேரமாக அமையும். அத்துடன் உடலை உற்சாகமாக செயல்பட வைக்கும், மனத்தெளிவை தூண்டும்.

    அன்றைய நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கும் வித்திடும். பிற உடற்பயிற்சிகளை செய்வதற்கு போதிய நேரம் கிடைக்காவிட்டாலும் காலையில் சுறுசுறுப்பாக இருப்பதும், நடைப்பயிற்சி செய்வதும் இதயநோய் மற்றும் பக்கவாத நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என்று ஐரோப்பிய இதயவியல் சங்கம் கூறுகிறது.

    மாலை 6 மணி

    மாலை 6 மணிக்கு நடைப்பயிற்சி செய்வது மனதை அமைதிப்படுத்த உதவிடும். அன்றைய நாளின் வேலைப்பளுவின்போது ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் வழிவகை செய்யும். அத்துடன் மாலை நேர நடைப்பயிற்சி உடலை தளர்வடைய செய்து நிம்மதியான தூக்கத்திற்கு வித்திடும். அன்றைய நாளில் நடந்த அனைத்தையும் சிந்தித்து பார்ப்பதற்கான நேரமாகவும் மாலை நேர நடைப்பயிற்சியை மாற்றிக்கொள்ளலாம். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பும்போது சிறிது நேரத்தையாவது இந்த நடைப்பயிற்சியை செய்வதற்கு ஒதுக்கலாம். அது முடியாவிட்டால் அலுவலக வளாகத்திலாவது 2 நிமிடங்கள் வேகமாக நடக்கலாம்.

    60 நிமிடம்

    அறுபது நிமிடம் நடைப்பயிற்சி செய்வது உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்க போதுமான நேரத்தை அளிக்கும். இதய ஆரோக்கியம், நுரையீரல் செயல் திறனை மேம்படுத்தும். உடல் எடையை குறைக்கும் எண்ணத்தில் இருப்பவர்கள், நடைப்பயிற்சியை மட்டுமே தங்கள் வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளக்கூடியவர்கள் வாரத்தில் 5 முறையாவது குறைந்தபட்சம் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

    அப்படி தொடர்ந்து 60 நிமிடங்கள் நடப்பது உடலுக்கும், தசைகளுக்கும் பலம் சேர்க்கும். மனதை முழுமையாக மீட்டமைக்கும். அப்படி ஒரு மணிநேரம் நடப்பது உடல் நலனில் அக்கறை கொள்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும். தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்துவிடும்.

    தொடர்ந்து 60 நிமிடங்கள் நடப்பது உடலுக்கும், தசைகளுக்கும் பலம் சேர்க்கும். மனதை முழுமையாக மீட்டமைக்கும்.

    ஆட்டு இறைச்சி வாங்கும் போது சில விஷயங்களை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாக ஆட்டு இறைச்சி வாங்கும் போது, ஆட்டின் தொடைப் பகுதிகளில் சதை அதிகமாக இருக்கும் என்பதால் அந்த பகுதியைக் கேட்டு வாங்குவோம். ஆனால் தொடை பகுதியில் சதை அதிகமாக இருந்தாலும், சாப்பிட சற்று கடினமாக இருக்கும். அதற்குக் காரணம் ஆடு நடக்கிற போது, தொடை பகுதி தசை நன்றாக இறுகி கெட்டித்தன்மையுடன் கொஞ்சம் கடினமானதாக இருக்கும். எனவே ஆட்டு இறைச்சி வாங்கும் போது நெஞ்சுப் பகுதி மற்றும் நெஞ்சுக்கு பின்புறம் உள்ள முதுகு தசைப்பகுதியை வாங்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள தசைகள் மிகவும் மென்மையானதாக இருக்கும்.

    இறைச்சி பழையதா அல்லது ஆரோக்கியமான ஆடா? என்பதையெல்லாம் வெட்டி தொங்க விட்டிருக்கும் இறைச்சியில் தேங்கி வடிகின்ற ரத்தத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். நல்ல ஆரோக்கியமான ஆடாக இருந்தால் வெட்டப்படும்போது உடலில் ரத்தம் எங்கும் தங்காமல் வடிந்துவிடும். எங்கும் தேங்கியிருக்காது. இதுவே ஏதேனும் நோய்வாய்ப்பட்ட ஆடாக இருந்தால் ஆங்காங்கே சிறிது சிறிது ரத்தம் தேங்கி இருக்கும்.

    இதுவே ஆடு இறந்து போனபின் அறுத்ததாக இருந்தால் ரத்தம் முழுவதும் அப்படியே உடலில் படிந்திருக்கும். ஒரே பருவத்தில் உள்ள இரண்டு ஆடுகள் வெட்டப்படுகிறது என்றால் அதில் நிச்சயம் பெட்டை ஆட்டின் கறியைத் தேர்ந்தெடுங்கள். அதுதான் ருசி அதிகமாக இருக்கும். கோழியிலும் வெடைக் கோழி தானே ருசி அதிகம். ஆட்டின் தலைக்கறி சாப்பிட்டால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும்.



    பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கு பலத்தைக் கொடுக்கும். ஆட்டின் கழுத்துப் பகுதியில் உள்ள கறி மிகவும் மென்மையானதாகவும் சுவையாகவும் இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மென்று சாப்பிடுவதற்கு ஏற்றது. இதில் இன்னொரு முக்கியமான வி‌‌ஷயம் என்னவென்றால் இந்த பகுதியில் கொழுப்பே இருக்காது.

    உடல் சூட்டால் அவதிப்படுகின்றவர்களுக்கு சிறந்த மருந்தாக இருப்பது ஆட்டினுடைய நாக்குப்பகுதி தான். ஆட்டினுடைய கொழுப்பானது இடுப்புப் பகுதிக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். உடம்பில் எத்தகைய வலி மற்றும் புண்ணையும் ஆற்றக்கூடிய குணம் கொண்டது. அம்மை நோய், அக்கி நோய் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக ஆட்டுக் கொழுப்பை சொல்லலாம்.

    ஆட்டின் மூளை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியடையும். ஆண்களுக்கு ஆண்மை விருத்திக்கும், தாது பலம் பெறுவதற்கும் சிறந்த உணவாக மூளை இருக்கும். நினைவாற்றலை அதிகரிக்கும். ஆட்டுக்கால் சூப் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா என்ன? எலும்புக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நெஞ்சு சளியை வெளியேற்றும். கால்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.
    அதிக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளவர்கள் ஆகியோர்களுக்கு நீரிழிவு எளிதாக ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அவர்களுக்கு உடல் உழைப்பு மிகவும் அவசியமானது.
    நீரிழிவு நோய் கட்டுப்பாடு குறித்து சென்னை எழும்பூர் மற்றும் கிண்டியில் அமைந்துள்ள டாக்டர் அ. இராமச்சந்திரன் நீரிழிவுநோய் மருத்துவமனை சிகிச்சை குழுவினர் தெரிவித்ததாவது :

    ‘எவ்வகை உணவை நாம் உண்டாலும் கடைசியாக உடலில் அது கணையம் சுரக்கும் இன்சுலின் என்னும் ஹார்மோன் மூலம் சர்க்கரை சத்தாக மாற்றப்படுகிறது. அப்போது சுரக்கும் இன்சுலின் அளவு குறைவது அல்லது வீரியமாகச் செயல்படாமல் போவது ஆகிய காரணங்களால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுவது நீரிழிவு குறைபாடு என்று குறிப்பிடப்படும்.

    இன்றைய காலகட்டத்தில் வயதானவர்களுக்கு மட்டுமல்லாது, இளைஞர்களுக்கும் நீரிழிவு குறைபாடு வர ஆரம்பித்துவிட்டது. பொதுவாக இவ்வகை குறைபாடு உள்ளவர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நேர்மறை எண்ணங்களோடு செயல்பட்டு அதை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இயலும்.

    அவ்வாறு கட்டுப்பாட்டில் வைக்க இயலாத நிலையில் தலை முதல் கால் வரை உடலின் அனைத்து உறுப்புகளும். பாதிக்கப்பட்டு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக, இதயம் கண், நரம்புகள், சிறுநீரகம், கால் ஆகியவை சிக்கல்களுக்கு உள்ளாகலாம். அவற்றை தவிர்க்க வாழ்க்கை நடைமுறை மாற்றமே மிகச்சிறந்த வழியாகும். அதை ஒரு சிகிக்சை முறையாகவும் கருதலாம்.

    மேலும், அதிக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளவர்கள் ஆகியோர்களுக்கு நீரிழிவு குறைபாடு எளிதாக ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அவர்களுக்கு உடல் உழைப்பு மிகவும் அவசியமானது. சர்க்கரை இனிப்பை தவிர்த்தல், எண்ணெய், கொழுப்புணவை தவிர்த்தல் நார்ச்சத்து உணவுகளை அதிகம் உண்ணுதல், கிழங்கு வகை உணவுகளை தவிர்த்தல், உடற்பயிற்சி குறிப்பாக நடைப்பயிற்சி, மாடிமேல் ஏற லிப்டை எதிர்பார்க்காமல் படிக்கட்டுகளை பயன்படுத்துதல் ஆகியவை எப்போதும் நல்லது.

    மேலும், மன பதற்றம் மற்றும் மன உளைச்சல் ஆகியவை இன்சுலின் நன்றாக சுரப்பதையும், செயல்படுவதையும் தடை செய்கின்றன. அதனால் அமைதியான வாழ்க்கைக்கு யோகா, தியானம் போன்றவை அவசியமானதாக உள்ளன.

    மேற்கண்ட பழக்க வழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடித்தால் நீரிழிவு குறைபாடு ஒரு பிரச்சினையாக இருக்காது. மேலும், மருத்துவர்களின் ஆலோசனைகள்படி மருந்து மாத்திரைகளை தவறாமல் சாப்பிடுவதுடன், குடும்பத்தார் ஆலோசனைகளையும் கேட்டு ஆரோக்கியமான வழிகளில் நடந்துகொள்வதும் நல்லது.

    நீரிழிவு குறைபாடு உள்ளவர்களின் நன்மைக்காக அவர்களது குடும்பத்தினர் உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வைப்பதுடன், சோம்பல் காரணமாக உடற்பயிற்சியை செய்யத் தவறும் பட்சத்தில் அதன் நன்மைகளை பற்றி எடுத்து சொல்லவேண்டும். சுயக்கட்டுப்பாடு, குடும்பத்தாரின் ஆதரவு போன்றவை நீரிழிவு குறைபாட்டை கட்டுபாட்டில் வைக்க உதவி செய்வதுடன், ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் நீண்ட நாள் வாழ நிச்சயம் உதவும்..’

    இவ்வாறு நீரிழிவு நோய் சிகிச்சை குழுவினர் தெரிவித்தனர்.

    எழும்பூர் தொலைபேசி எண்: 044-28582003-05

    கிண்டி தொலைபேசி எண்: 044-22353729-32
    ×