என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Healthy Eating"

    • நெஞ்செரிச்சலுடன் புளிப்பான ஏப்பம் உண்டாகும்.
    • ஒரு நாளில் ஒருமுறை ஏப்பம் வருவது இயல்புதான்.

    ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் உணவுடன் சேர்த்து சிறிது காற்றையும் விழுங்குகிறோம். அந்தக் காற்றை இரைப்பை வெளியேற்றும் போது தான் 'ஏப்பம்' உண்டாகிறது. ஒரு நாளில் ஒருமுறை ஏப்பம் வருவது இயல்புதான். ஆனால், அடிக்கடி வரும் ஏப்பம், அருகில் இருப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும். இந்தப் பிரச்சினையை வீட்டுச் சமையல் அறையில் உள்ள பொருட்களின் மூலம் எளிதாகத் தீர்க்க முடியும். அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

    வேகமாகச் சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களைப் பருகுவது போன்ற பல காரணங்களால் ஏப்பம் வரும். இரவில் தாமதமாகச் சாப்பிடும்போதும், மசாலா சேர்த்த உணவுகளை அதிகமாக உண்ணும்போதும் இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரிக்கும். இதனால் நெஞ்செரிச்சலுடன் புளிப்பான ஏப்பம் உண்டாகும். சாப்பிட்டவுடன் படுத்தால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு ஏப்பம் வரும். அடிக்கடி, அதிக சத்தத்துடனும், ஒருவித வாடையுடனும் வரும் ஏப்பம் அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று புண் ஆகியவற்றின் அறிகுறி ஆகும்.

    ஏப்பத்தைக் கட்டுப்படுத்தும் உணவு முறைகள்:

    இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கும் அமிலத்தன்மையைக் குறைக்கக் கூடிய கீரை வகைகள், இஞ்சி, சோம்பு, சீரகம் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அடிக்கடி வரும் ஏப்பத்தைத் தடுக்க முடியும்.

    பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளி பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஏப்பம் வருவது குறையும். புதினா மற்றும்

    ஏலக்காய் டீ: கொதிக்கும் தண்ணீரில் புதினா இலைகளைப் போட்டு ஐந்து நிமிடங்கள் நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்பு அந்த நீரை வடிகட்டி அதனுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து குடித்து வரலாம். வாயுத் தன்மை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும்போது ஏலக்காய் டீ குடிப்பது செரிமானத்தைத் துரிதப்படுத்த உதவும். இதனால் ஏப்பம் வருவது குறையும்.

    பெருங்காயம்: சூடான நீரில் சிறிது பெருங்காயத்தைக் கலந்து உணவு சாப்பிடுவதற்கு முன்பு குடித்தால், ஏப்பம் உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்சினைகள் குணமாகும்.

    தயிர்: தயிரில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வயிற்று கோளாறுகளை குணமாக்கும் திறன் கொண்டவை.

    பூண்டு: பூண்டில் இருக்கும் ரசாயன மூலக்கூறுகள், வாயு தொடர்பான கோளாறுகளை நீக்கும். எனவே இதை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

    • நீரிழிவு நோய் என்பதைவிட இதை குறைபாடு என்று அழைக்கின்றனர்.
    • இந்த நோய் எப்படி வருகிறது என்பதை அறிந்து கொள்வோம்.

    நீரிழிவு நோய் தற்போது நாளுக்கு நாள் வயது வித்தியாசம் இல்லாமல் அதிகப்படியான மக்களை பாதித்து வருகிறது. நம்முடைய அவசர வாழ்க்கை முறை இதற்கு முக்கிய காரணம் எனலாம். இந்த நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக சர்க்கரை இருப்பதை குறிக்கிறது. எனவேதான் இதை சர்க்கரை வியாதி என்றும் பாமர மக்கள் அழைக்கின்றனர்.

    நீரிழிவு என்பது கூட இந்த நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும் என்பதன் அடிப்படையில் வந்த பெயர்தான். இந்த நோய் எப்படி வருகிறது என்பதை அறிந்து கொள்வோம்.

    நாம் உண்ணுகின்ற உணவு உடலுக்கு சக்தியாக மாறுவதற்கு இன்சுலின் மிக முக்கியம் இந்த இன்சுலின் திரவத்தை நம் உடல் உறுப்பாகிய கணையம் சுரக்கின்றது.

    குறிப்பாக கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் இந்த இன்சுலினை சுரப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது. ஒருவர் உடலில் அவருக்கு உண்ணும் உணவு மற்றும் தினப்படி உடல் இயக்கத்திற்கு ஏற்ப இன்சுலின் சுரப்பு சரியாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக இன்சுலின் போதுமான அளவுக்கு சுரக்கவில்லை என்றாலோ அல்லது இன்சுலின் போதுமான தரத்தில் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவு கூடுகிறது.

    இதை சரியாக கண்டுபிடித்து சிகிச்சை ஆரம்ப கட்டத்திலேயே துவங்க வேண்டும். இல்லையென்றால் பல வகையான உடல் பிரச்சினைகளுக்கு இது காரணம் ஆகிவிடும். ஆரம்பக் கட்ட நீரிழிவு நோய் உள்ளவர்கள் தேவையான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கும்போது எப்போதும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். சற்று தீவிர நீரிழிவு நோய்க்கு ஆளானவருக்கு இன்சுலின் ஊசிகள் தேவைப்படலாம் இதன் அளவு அவரவர்களின் நோய் தீவிரத்தை பொறுத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருவகையில் நீரிழிவு நோய் என்பதைவிட இதை குறைபாடு என்று அழைக்கின்றனர். காரணம் ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்து விட்டால் அவர் தன் உடல் நிலையை சரியான மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொண்டு தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் அவ்வப்போது நோயின் தீவிரம் ஏற்ற இறக்கம் பற்றிய பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை தொடரும்போது அவர்களுக்கு வேறு எந்த வகையான மோசமான நோய்களும் வராமல் முன்கூட்டியே தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் அம்மா அப்பா குடும்ப நபர்கள் யாரேனும் நீரிழிவு இருந்தால் நமக்கும் கட்டாயம் வரும் என்று மனதளவில் நாமாகவே அந்த நோயை எதிர்பார்ப்பதை தவிருங்கள்.

    • ‘பாப்கார்ன்’ சாப்பிட, பெரியவர்கள்-சிறியவர்கள் என்ற வித்தியாசம் தேவையில்லை.
    • பொரித்து, அவித்து, வறுத்து மக்காச்சோளம் சாப்பிடப்படுகிறது.

    சாதாரண ஒரு கோப்பை பொரித்த மக்காச்சோளத்தில் (பாப்கார்ன்) 31 கலோரி ஆற்றலே இருக்கும். இதே அளவுள்ள கோப்பையில் உருளை சிப்ஸ் சாப்பிட்டால் 139 கலோரி ஆற்றல் இருக்கும். எனவே மக்காச்சோளம் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்குமோ? என்ற கவலையே இல்லாமல் சாப்பிடலாம்.

    'பாப்கார்ன்' சாப்பிட, பெரியவர்கள்-சிறியவர்கள் என்ற வித்தியாசம் தேவையில்லை. எல்லா வயதினருமே விரும்பி சாப்பிடும் பாப்கார்ன் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா..?

    மக்காச்சோளம்தான் பாப்கார்னாக மாறுகிறது. இந்த மக்காச்சோளம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் ஒன்று. குறைந்த கலோரிகள் கொண்டது என்பதால் நொறுக்குத் தீனியாக நிறைய சாப்பிடலாம். பாப்கார்ன் தயாரிக்க பயன்படும் மக்காச்சோளம் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுத்தாத உணவுப் பண்டமாகும். பால், முட்டை, வேர்க்கடலை போன்ற உணவுப் பொருட்கள் ஒவ்வாமை கொண்டவர்கள்கூட மக்காச்சோளம் சாப்பிடலாம். பொரித்து, அவித்து, வறுத்து மக்காச்சோளம் சாப்பிடப்படுகிறது. மாவாக்கி, பண்டங்களாக தயாரித்தும் உண்ணப்படுகிறது. பலவிதமான மணம், சுவை, கூட்டுப்பொருட்களுடன் மக்காச்சோள திண்பண்டங்கள் கிடைக்கின்றன.

    மக்காச்சோளம் முழுவதும் நார்ச்சத்தும், நோய் எதிர்ப்பொருட்களும் கொண்டது. காய்கறி, பழங்களைவிட சிறந்த நோய் எதிர்ப்பு பொருட்கள் மக்காச்சோளத்தில் இருக்கின்றன. சராசரி எடைகொண்ட மக்காச்சோளத்தில் நூற்றுக்கணக்கான முத்துகள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பொரிக்கப்படாத நிலையிலேயே ஒரு கோப்பை நிறைய இருக்கும். 2 மேஜை கரண்டி அளவுள்ள மக்காச்சோள முத்துகளை பொரித்தால் ஒரு லிட்டர் அளவுள்ள பாப்கார்ன் கிடைக்கும்.

    உலக நாடுகளை ஒப்பிடும்போது, அமெரிக்காவில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. கூடவே அமெரிக்கா வில்தான், அதிகளவிலான 'பாப்கார்ன்' சுவைக்கப்படுகின்றன. அங்கு, பாப்கார்ன்களுக்கான பிரத்யேக அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    அமெரிக்காவில் பல வண்ணத்தில் விளைந்த பாரம்பரிய மக்காச்சோள விதைகளை கலப்பு செய்து, 'ரெயின்போ கார்ன்' என்ற பெயரில் வண்ணமயமான மக்காச்சோளம் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது அங்கு வண்ணமயமான மக்காச்சோளத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதை கிளாஸ் ஜெம் கார்ன் என்றும் அழைக்கிறார்கள். சரியாக சாப்பிட மறுக்கும் குழந்தைகளின் பசி போக்கவும், நார்ச்சத்து தேவையை ஈடுகட்டவும் மக்காச்சோளம் உதவும். ஆரோக்கியமான மக்காச்சோளத்தை ருசித்து நலம் பெறுவோம்.

    * பாப்கார்ன் எப்படி வெடிக்கிறது?

    மக்காச்சோள முத்துகளில் சிறிதளவு நீர்ச்சத்து இருக்கும். இதை பொரிக்கும்போது, வெப்பத்தால் அதில் உள்ள நீர் ஆவியாகி வெளியேறுவதால்தான் மக்காச்சோளம் வெடித்துச் சிதறி பாப்கார்ன் பொரியா கிறது. 347 டிகிரி வெப்பத்தில் மக்காச்சோளம் பொரியாக மாறும். மக்காச்சோளம் பொரிபடும்போது 3 அடி உயரம் வரை வெடித்து குதிக்கும். அதனால்தான் கூண்டுவடிவ கலனில் மக்காச்சோளம் பொரித்து எடுக்கப்படுகிறது. பொரிக்கும்போது குதித்து வெடிப்பதால்தான் அதற்கு 'பாப்கார்ன்' என்ற பெயர் ஏற்பட்டது.

    • அரை வேக்காடாக, சாலட் போலச் சாப்பிடுவது மிகுந்த பயனைத் தரும்.
    • கால்சியம் குறைபாடே அதிக ரத்த அழுத்தத்துக்குக் காரணம்.

    உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் செய்யும் தொழிலிலும் கூடுதல் கவனம் செலுத்தி வெற்றிக்கொடி பறக்க விட முடியும். ஆகையால் தொழில் சார்ந்த முதலீடுகளில், உடல் சார்ந்த முதலீடும் அவசியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், நமது உடலை பாதுகாக்க தேவையான உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒன்றாக புரோக்கோலி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

    புரோக்கோலி, இதை மார்க்கெட்டிலும், கடைகளில் பார்த்திருப்போம். ஆனால் நம்மில் பலர் அதை கண்டு கொள்ளாமல் கடந்து சென்று இருப்போம். ஆனால் இதில் பல அற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. குறிப்பாக பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றன. கரோடினாய்டு, வைட்டமின் சி. இ, கே, போலேட், சல்போரபேன் ஆகியனவும் இருக்கின்றன. புரோக்கோலியின் சிறிய பூ போன்ற பகுதியைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அதன் இலைகளிலும் தண்டுகளிலும் அதிக அளவிலான பினாலிக் (Phenolic), ஆன்டிஆக்ஸிடன்ட், புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான பல மூலக்கூறுகள் அடங்கியுள்ளன. அதனால் இப்போது பலரும் புரோக்கோலியின் இலைகளையும் தண்டையும் உணவாகப் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

    இதய ஆரோக்கியம்

    புரோக்கோலியில் இருக்கும் அதிகப்படியான போலேட், இதய ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. இதிலிருக்கும் பாலிபினால் இதயச் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

    சர்க்கரை அளவைச் சீராக்கும்

    கால்சியம் குறைபாடே அதிக ரத்த அழுத்தத்துக்குக் காரணம். புரோக்கோலி உணவைச் சாப்பிட்டால், கால்சியம் சத்து அதிகரிக்கும். ரத்த அழுத்தம் குறையும். இதிலிருக்கும் குரோமியம் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்; இன்சுலின் சுரக்கும் அளவையும் அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து உடலின் செரிமான சக்திக்கு உதவும். இதைச் சாப்பிடுவது குடல் ஆரோக்கியம் மேம்படும்; செரிமானம் சீராகும்.

    கொழுப்பை குறைக்கும்

    `புரோக்கோலி, நம் உடலில் 6 சதவிகிதம் வரை கெட்டக் கொழுப்பைக் குறைக்கிறது' என ஓர் ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே, பல நாடுகளில் இதை அதிகம் உற்பத்தி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். மனஅழுத்தத்தைக் குறைக்க, இதிலிருக்கும் சல்போரபேன் பயன்படுகிறது. மனஅழுத்தத்தின் அறிகுறிகள் தென்பட்டால், சல்போரபேன் நிறைந்த இளசான புரோக்கோலியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

    ரத்தச்சோகையை தடுக்கும்

    நாம் சாப்பிடும் உணவில் இரும்புச்சத்துக் குறைந்தால், ரத்த செல்களின் அளவு குறையும். இதனால் ரத்தச்சோகை ஏற்படும். புரோக்கோலியில் இருக்கும் வைட்டமின் சி நம் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க உதவும். தொடர்ந்து இதை உணவில் சேர்த்து வந்தால், ரத்தச்சோகை வராமல் தடுக்கலாம். இதிலிருக்கும் சல்போரபேன் உடலிலுள்ள நச்சுத் தன்மைக்கு எதிராகச் செயல்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    பிரசவகால

    ஆரோக்கியம் காக்கும்

    பிரசவகாலத்தில் பெண்களுக்கு அதிகம் தேவை கால்சியம் நிறைந்த உணவுகள். புரோக்கோலி கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான கால்சியத்தை அளிக்கக்கூடியது. இதை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவதால் பிறக்கும் குழந்தையின் மூளை ஆரோக்கியத்துக்கு உதவும்.

    புரோக்கோலியை எண்ணெயில் பொரித்தால் அதிலிருக்கும் வைட்டமின் சி, புரதச்சத்துகள் மற்றும் மினரல்களை இழக்க நேரிடும். இதை ஆவியில் வேகவைத்தால் சத்துக்களை இழக்காமல் பாதுகாக்கலாம். சமைத்த புரோக்கோலியில் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும் குறைந்துவிடும். அதனால் பச்சைக் காய்கறியாக, அரை வேக்காடாக, சாலட் போலச் சாப்பிடுவது மிகுந்த பயனைத் தரும். சிலருக்கு இதனால் அலர்ஜி ஏற்படலாம். அவர்கள் மட்டும் இதை உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்கவும். புரோக்கோலி தற்போது பெரும்பாலான கடைகளில் விற்பனைக்காக வருவதில்லை. இருப்பினும் இதை தேடி மார்க்கெட்களுக்கு செல்பவர்களும் இருக்கிறார்கள். எனவே இதையறிந்து, விற்பனை வாய்ப்புகளை உருவாக்கியும், நீங்கள் லாபம் பெற முடியும்.

    • தற்போது அறிமுகமாகியுள்ளது பாடி வால்யூம் இன்டிகேட்டர் (BVI).
    • இச்சோதனை பி.வி.ஐ. ஆப் சோதனை மூலம் நடைபெறுகிறது

    தற்போது உடல் எடையை உயரத்துடன் தொடர்புபடுத்தி அளவிடும் பாடி மாஸ் இன்டெக்ஸ் (BMI) புழக்கத்தில் உள்ளது. 1830-க்குப் பிறகு அடால்ப் க்யூடெலட் என்ற பெல்ஜிய கணிதவியலாளரால் கண்டறியப்பட்ட இம்முறை தோராயமானது. தற்போது இதற்கு மாற்றாக அறிமுகமாகியுள்ளது, பாடி வால்யூம் இன்டிகேட்டர் (BVI).

    உடலின் மொத்த எடையோடு, வயிற்றிலுள்ள கொழுப்பையும் அளவிட்டு ஆரோக்கியமான எடை அளவு கணக்கிடப்படுகிறது. இச்சோதனை பி.வி.ஐ. ஆப் சோதனை மூலம் நடைபெறுகிறது. வயிற்றிலுள்ள கொழுப்புக்கும், இதய மற்றும் நீரிழிவு நோய்களுக்கும் உள்ள தொடர்பு உலகறிந்த ஒன்று.

    2012-ல் எடுக்கப்பட்ட ஆய்வுப்படி உடல்பருமனால் பாதிக்கப்பட்ட 3 லட்சம் ஐரோப்பியர்களில் பலருக்கும் இடுப்பின் அளவு 34-40 அங்குலம் இருந்ததை சுட்டிக்காட்டுகிறார் மேயோ கிளினிக் ஆராய்ச்சிக்குழுவைச் சேர்ந்த மருத்துவர் ஜோஸ் மெதினா இனோஜோஸா. பி.எம்.ஐ. பின்தங்கியது, இடுப்பில் சேரும் கொழுப்பை அளவிடுவதில்தான். பி.வி.ஐ. உடல் எடையையும், வயிற்றிலுள்ள கொழுப்பையும் துல்லியமாக பாடி இமேஜ் முறையில் அளவிடுகிறது.

    • சிலர் பழங்களை தவறான முறையில் உட்கொள்ளுகின்றனர்.
    • சகல நோய்களை தீர்க்க கூடிய வல்லமை பழங்களுக்கு உண்டு.

    பொதுவாக நாம் உண்ணும் உணவுகளில் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றது. குறிப்பாக சகல நோய்களை தீர்க்க கூடிய வல்லமை இதற்கு உண்டு.

    பழங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், பிற கனிமச்சத்துக்களும் வளமான அளவில் உள்ளதால், உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க பெரிதும் உதவி புரிகிறது. சிலர் இதனை தவறான முறையில் உட்கொள்ளுகின்றனர். இதனால் பக்கவிளைவுகளையும் சந்திக்கின்றனர்.

    இதனை மாற்றி கொண்டால் பழங்களில் இருந்து ஆரோக்கியமான முறையில் நன்மையினை பெறலாம். தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

    பழங்களை மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடாதீங்க. இது உடலில் நச்சுக்களை உருவாக்கும். ஏனெனில் பழங்களை கடினமான உணவுகளுடன் சேர்த்து எடுக்கும் போது, அது விரைவில் செரிமானமாகால் வயிற்றில் நீண்ட நேரம் இருப்பதோடு, ஊட்டச்சத்து உறிஞ்சுதலை கடினமாக்கும்

    பழங்களை இரவு தூங்கும் முன்பு சாப்பிட வேண்டாம். இதனை தூங்குவதற்கு முன்பு உட்கொண்டால், அது தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இது தவிர, இரவு நேரத்தில் பழங்களை சாப்பிடுவதால், அது அசிடிட்டியை உண்டாக்கும். 

    பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீரை குடிப்பது மிகவும் தவறு. பழங்களை சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கும் போது, செரிமான மண்டலத்தின் pH அளவு அதிகரித்து, சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தும். இதன் விளைவாக வயிற்றுப் போக்கு அல்லது காலரா போன்ற தீவிர பிரச்சனையால் அவதிப்பட நேரிடும்.

     பலர் ஆப்பிளை சாப்பிடும் போது அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு. எனவே தோலுடன் சாப்பிடக்கூடிறவாறான பழங்களை தோலுடன் சாப்பிடுங்கள். அப்படி சாப்பிடும் போது உடல் பருமன், புற்றுநோய் போன்றவற்றின் அபாயம் குறையும்.

    • உணவு சாப்பிடுவது இன்றைக்கு ஒரு பேஷனாக மாறிவிட்டது.
    • தற்போது ஸ்பூனில் சாப்பிடுவதுதான் நாகரிகம் என்றாகிவிட்டது.

    கையால் சாப்பிடுவதில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அப்படியிருக்க, ஸ்பூனைப் பயன்படுத்தி உணவு சாப்பிடுவது இன்றைக்கு ஒரு பேஷனாக மாறிவிட்டது. பிடிக்கிறதோ, இல்லையோ ஸ்பூனில் சாப்பிடுவதுதான் நாகரிகம் என்றாகிவிட்டது.

    சில பன்னாட்டு நிறுவனங்களில்... உயர்தர உணவகங்களில்... தோசையை ஸ்பூனால் சாப்பிட முயன்று, தோசையோடு சண்டை போட்டுக்கொண்டிருப்பவர்களைப் பார்த்திருக்கலாம். கையால் சாப்பிட இயல்பாக, எளிதாக முடிகிறபோது ஏன் ஸ்பூனோடு மல்லுக்கட்ட வேண்டும்?, இதோடு கையால் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை பார்ப்போமா?

    நன்மை செய்யும் பாக்டீரியாக்கள்

    உணவைத் தொட்டவுடன் அது சூடாக இருக்கிறதா?, குளிராக இருக்கிறதா? என எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். அந்தத் தகவல் உடனடியாக மூளைக்குப் போகிறது. நாம் சாப்பிடப் போகிறோம் என்பதை மூளை உணர்ந்துகொண்டு வயிற்றுக்கு தகவல் அனுப்புகிறது. வயிறு, செரிமானத்துக்குத் தேவையான அமிலங்களைச் சுரக்கும் நிகழ்வை (உணவு வாய்க்கு வந்ததும்) தொடங்கிவிடுகிறது. மேலும், நமது கையில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. வாய், தொண்டை மற்றும் குடலுக்கு நன்மை செய்யும் இந்த பாக்டீரியாக்கள் செரிமானத்தை எளிதாக்குகிறது. ஆனால் கையைக் கழுவிவிட்டு சாப்பிடும்போதுதான் இந்த பலன் கிடைக்கும். கையைக் கழுவாமல் சாப்பிட்டால் கையில் உள்ள கிருமிகள் உடலுக்குள் சென்றுவிடும்.

    ரசித்து... ருசிக்க!

    கைக்குப் பதிலாக ஸ்பூனில் சாப்பிடும்போது மூளைக்கு தகவல் அனுப்புவது உள்ளிட்ட நிகழ்வுகள் தொடங்க தாமதமாகும். அதுவுமல்லாமல் உணவின் தன்மை நமக்குத் தெரியாது என்பதால் சூடான பொருளை ஸ்பூனில் எடுத்து வாயில் வைத்தால் நாக்கை சுட்டுக்கொள்ள நேரிடலாம். ஸ்பூனில் சாப்பிடும்போது நமது கவனம் முழுக்க நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் இருக்கிறது. ஒருவிதமான எந்திரத்தன்மை வந்துவிடுகிறது. இதனால் உணவை ரசித்து, ருசித்துச் சாப்பிட முடிவதில்லை. கையால் சாப்பிடும்போது ஸ்பூனில் சாப்பிடுவதை விட அதிக திருப்தி கிடைக்கிறது.

    மன அழுத்தம்

    ஸ்பூனில் சாப்பிடுபவர்கள் மிக வேகமாகச் சாப்பிடுவதோடு, அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு சில குறைபாடுகள் வரலாம் என கண்டறிந்திருக்கிறார்கள். சீரற்ற மனநிலை, மன அழுத்தம் போன்றவையும் இந்த நோய் ஏற்படுவதற்கான பிற காரணங்களாக இருக்கின்றன.

    கெட்டவை விரட்டப்படும்

    நாம் சாப்பிடும்போது கையை வைத்திருக்கும் அமைப்பானது யோக முத்திரைகள், பழமையான நடன முறைகளின் முத்திரைகள் மற்றும் தியானத்தின் மூலம் நோயை குணப்படுத்தும் முறையை குறிக்கிறது. ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு விரலும் நீர், நிலம், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களைக் குறிக்கிறது. உணவில் உள்ள கெட்ட சக்திகளை இவை விரட்டுவதாக நம்பப்படுகிறது. இந்த பலன்கள் ஸ்பூனில் சாப்பிடும்போது கிடைப்பதில்லை.

    • வாழைப்பழத்தில் பல்வேறு வகைகள் உள்ளன.
    • நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை வாழைப்பழம் சிறந்த மருந்தாகும்.

    வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளன. அனைத்து பழங்களுமே ஏதோ ஒரு விதத்தில் நமக்கு நன்மை பயக்கக் கூடியதாகதான் இருக்கின்றன. அந்த வகையில் பச்சை வாழைப்பழத்தில் உள்ள நன்மைகளைத் தெரிந்து கொள்வோம்.

    பச்சை வாழைப்பழம், வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. குடல்களில் சுரக்கும் அமிலங்கள் குடல் சுவரை அரிப்பதன் காரணமாக குடல்புண் எனப்படும் 'அல்சர்' ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

    நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை வாழைப்பழம் சிறந்த மருந்தாகும். ஏனென்றால், பச்சை வாழைப்பழத்தில் 'ஸ்டார்ச்' அதிகமாக உள்ளதால், இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வருகிறது.

    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பச்சை பழத்தை தொடர்ந்து சாப்பிடலாம். பச்சை பழத்தில் உடல் எடையை குறைக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளதால், பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைந்து விடும்.

    ரத்தம் சம்பந்தமான பல பிரச்சினைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. குறிப்பாக, ரத்த ஓட்டம் சீராக அமையவும், இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும் இந்தப் பழம் உதவுகிறது. பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. பற்களுக்கு தேவையான கால்சியம் சத்தினை அளித்து பற்களை உறுதிப்படுத்துகிறது.

    • வளர் இளம்பெண்கள் ரத்த சோகையினாலும், பிற நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.
    • இதனை தவிர்க்க கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

    இன்றைய காலக்கட்டத்தில் ரசாயன கலப்பு மற்றும் ஊட்டச்சத்து உணவு குறைபாடு காரணமாக வளர் இளம்பெண்கள் ரத்த சோகையினாலும், பிற நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

    * காய்கறிகளை வெட்டுவதற்கு முன்பு நல்ல தண்ணீரில் 10 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும். அப்போது தோலில் உள்ள பூச்சி மருந்துகளின் தாக்கம் குறையும்.

    * காய்கறிகளை வெட்டிய பிறகு எக்காரணம் கொண்டும் கழுவக்கூடாது.

    * கருணைக்கிழங்கு தவிர, பிற கிழங்கு வகைகளை குறைவாக பயன்படுத்த வேண்டும்.

    * மாவுச்சத்து மிகுந்த, கடினமான காய்கறிகளை மட்டும் அதிக நேரம் வேக வைக்கலாம். கொடிக்காய்கள், நீர்ச்சத்து மிகுந்த காய்களை 3 அல்லது 5 நிமிடங்கள் வேக வைத்தால் போதுமானது.

    * காய்கறிகளை எண்ணெய்யில் வதக்குதல், பொரித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    * ஈரமான பருத்தித்துணி அல்லது மண்பானை, பிரிட்ஜ் ஆகியவற்றில் காய்கறிகளை பாதுகாக்கலாம்.

    * கேரட், தக்காளி, வெள்ளரி, தேங்காய், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை சமைக்காமல் பயன்படுத்த வேண்டும்.

    * காய்கறிகளை வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் பயன்படுத்த வேண்டும். அந்த தண்ணீரை வீணாக்காமல் பருகலாம்.

    * ஒவ்வொரு பருவகாலங்களிலும் விளையும் காய்கறிகளை மட்டும் பயன்படுத்துவது மிக சிறந்தது ஆகும்.

    • கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்க சில உணவுகள் வழிவகுக்கின்றன.
    • நட்ஸ் உங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

    ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இளைஞர்களும், இளம் பெண்களும் கண்களை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டியது மிக அவசியம். ஏனெனில் 24 மணி நேரத்தில், குறைந்தது 12 மணி நேரம் கணினி திரைகளையே பார்த்து கொண்டிருப்பதால், கண்கள் பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடும். அத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட்டு, கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்க சில உணவுகள் வழிவகுக்கின்றன.

    ஆரோக்கியமாக கண்களை பராமரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

    1. மீன்

    நல்ல கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா 3 ஆகியவை மீனில் அதிகம் நிரம்பி இருக்கின்றன. இவை கண் மற்றும் அதன் செயல்பாட்டிற்கு நன்மை தரும்.

    2. முட்டை

    லுடீன் மற்றும் வைட்டமின் ஏ உட்பட முட்டையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

    3.முழு தானியங்கள்

    முழு தானியங்களில் காணப்படும் வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் நியாசின் ஆகியவை ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

    4. பச்சை காய்கறிகள்

    கீரை, முட்டைக்கோஸ் மற்றும் காலார்ட் கீரைகள், புரோக்கோலி, பட்டாணி மற்றும் வெண்ணெய் ஆகியவை கண் தசை பராமரிப்புக்கான சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றியாக செயல்படுகிறது.

    5. சிட்ரஸ் பழங்கள்

    ஆரஞ்சு, திராட்சைப்பழம், எலுமிச்சை மற்றும் பெர்ரிகளில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது கண் தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தை குறைக்கும்.

    6. நட்ஸ்

    பிஸ்தா, வால்நட், பாதாம் உள்ளிட்ட நட்ஸ்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளன. அவை உங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

    7.பருப்பு வகைகள்

    கிட்னி பீன்ஸ் மற்றும் பருப்பு ஆகியவை பயோ பிளவனாய்டுகள் மற்றும் துத்தநாகத்தின் நல்ல ஆதாரங்களாகும். இது கண் பார்வை மற்றும் பிற கண் தொடர்பான செயல்பாடுகளுக்கு உதவும்.

    8.கேரட்

    கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது கண்பார்வையை மேம்படுத்துவதற்கான சிறந்த ஆதாரமான வைட்டமின் ஏ-வை உற்பத்தி செய்ய உதவுகிறது.

    • 100 கிராம் பூசணி விதையில் சுமார் 440-500 கலோரி ஆற்றல் உள்ளது.
    • ஆண், பெண் இருபாலருக்கும் இது மிகச் சிறந்தது.

    பூசணி விதையில் ஏராளமான ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின் ஈ, கரோட்டினாய்டுகள், அதிகமாக உள்ளதால் உடம்பில் வளர்சிதை மாற்றத்தில் உருவாகும் தேவையில்லாத பொருட்களை வெளியேற்றி, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

    100 கிராம் பூசணி விதையில் சுமார் 440-500 கலோரி ஆற்றல் உள்ளது. இதில் உடலுக்கு தேவையான துத்தநாகம் உள்ளதால் நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், புண்கள் விரைவில் ஆறும். வாசனை மற்றும் சுவையறிதலுக்கு இது இன்றியமையாதது.

    பூசணி விதையில் மெக்னீசியம் இருப்பதால், தசைகள், நரம்புகள் நல்ல முறையில் இயங்கும். எலும்புக்கு நல்ல வலிமையைத் தரும். தசை பிடிப்பு, சுளுக்கு நீங்கும். ரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை அளவை குறைக்கும்.

    பூசணி விதையில் உடலுக்கு தேவையான வைட்டமின் கே, மாங்கனீசு, நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. புற்று நோய்க்கு சிகிச்சை எடுப்பவர்கள் பூசணி விதையை உண்பது மிகச் சிறந்தது. ஏன் எனில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை, தடுக்கும் ஆற்றல் பூசணி விதைகளில் உள்ளது.

    இதை இள வறுப்பாக வறுத்து 10 முதல் 15 கிராம் (30 கிராமுக்கு அதிகமாக சாப்பிட கூடாது) அளவு மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் எடுத்தால், ரத்த அழுத்தம் சீரடையும், சர்க்கரை அளவு குறையும், உடலுக்கு நல்ல சுறுசுறுப்பு, ஆற்றல் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும். ஆண், பெண் இருபாலருக்கும் இது மிகச் சிறந்தது.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு உதவும்.
    • கால்சியம் அதிகம் கொண்ட உணவுப்பொருளாக தயிர் உள்ளது.

    பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிரில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும், கால்சியம் அதிகம் கொண்ட உணவுப்பொருளாகவும் தயிர் உள்ளது. இது எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். குறிப்பாக தயிரில் உள்ள கால்சியம் எலும்பின் அடர்த்தியை சமப்படுத்தவும், பலப்படுத்தவும் செய்யும். மேலும் தயிரில் குறைந்த அளவே கொழுப்புகள் மற்றும் கலோரிகள் உள்ளன. உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு இவை உதவும்.

    இருப்பினும் குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா? என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. குளிர்ச்சி நிறைந்த அதனை உட்கொள்வது சளி, இருமல் பிரச்சினைக்கு வித்திடும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் அனைத்து பருவ காலங்களிலும் உட்கொள்வதற்கு ஏற்ற உணவுப் பொருளாக தயிர் இருந்தாலும், கோடை காலத்தில்தான் அதிகம் விரும்பப்படுகிறது. குளிர்காலத்திலும் தயக்கமின்றி உட்கொள்ளலாம். இருப்பினும் இரவில் உட்கொள்வதாக இருந்தால் தயிருடன் சிறிதளவு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. பகல் பொழுதிலும் தயிர் உட்கொள்வதற்கு யோசிப்பவர்களும் இந்த வழிமுறையை பின்பற்றலாம்.

    குளிர்காலத்தில் வரும் சரும பிரச்சினைகளில் முக்கியமானது சருமம் உலர்வடைவது. சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் பொருட்கள் தயிரில் இயற்கையாகவே உள்ளன. அவை சருமம் உலர்வடையாமல் தடுக்கக்கூடியவை. முகப்பரு பிரச்சினை இருப்பவர்களுக்கு தயிர் சிறந்த நிவாரணியாக அமையும். அதில் லாக்டிக் அமிலம் இருப்பதால் முகத்தை அழகுபடுத்தும் `பேஸ் பேக்'காகவும் உபயோகிக்கலாம். தயிரை முகத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து நீரில் கழுவினால் போதும். அது முகத்திற்கு பொலிவு சேர்ப்பதோடு, இறந்த செல்கள், சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் போன்றவற்றையும் நீக்கிவிடும். குடல் சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள் குளிர் காலத்தில் தயிர் சேர்த்துக்கொள்வது நல்லது. அது குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். வயிறு தொடர்பான அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விலக்கி வைக்கும்.

    குளிர்காலத்தில் உணவில் கலந்து சாப்பிடுவதோடு சமைக்கும் பொருட்களிலும் தயிரை சேர்த்துக்கொள்ளலாம். சப்பாத்திக்கு மாவு பிசையும்போது அதனுடன் சிறிதளவு தயிரும் சேர்க்கலாம். தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மாவில் கலந்து ஒட்டுமொத்தமாக ஊட்டச்சத்துக்களின் எண் ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். மேலும் சப்பாத்தியும் மென்மையாக இருக்கும்.

    ஒரு சிலர் குளிர்காலத்தில் மந்தமாகவோ, சோர்வாகவோ உணரலாம். அவர்கள் மாதுளை அல்லது ஸ்ட்ராபெர்ரி பழத்துடன் தயிர் கலந்து சாப்பிடுவது புத்துணர்வை அளிக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க வழிவகை செய்யும். குழந்தையின் உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை சேர்க்க தயிர் பயன்படுத்தலாம். காய்கறிகளுடன் தயிர் சேர்த்து சாலட்டாக தயாரித்து கொடுப்பது சிறப்பானது.

    ×