என் மலர்
நீங்கள் தேடியது "Healthy Recipes"
- வெற்றிலையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது.
- இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
வெற்றிலை - 10
காய்ந்த மிளகாய் - 4
வெங்காயம் - ஒன்று
தேங்காய் துருவல் - சிறிதளவு
பூண்டுப் பல் - 3
புளி - கோலிக்குண்டு அளவு
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெற்றிலைத் துவையல்
வெற்றிலைத் துவையல்
செய்முறை:
வெற்றிலையில் காம்பு, நடு நரம்பை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும்.
அதனுடன் காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, தேங்காய் துருவல், வெற்றிலை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் புளி, உப்பு சேர்த்துச் சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்த துவையலாக அரைத்து எடுக்கவும்.
இப்போது சத்தான சுவையான வெற்றிலைத் துவையல் ரெடி.
- அதிக நார்ச்சத்து உள்ள வாழைப்பூ மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக உள்ளது.
- மூலநோய், மூல புண்கள், இரத்தம் வெளியேறுதல் பிரச்சனைகளுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் - 4
துருவிய தேங்காய் - கால் கப்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
செய்முறை:
வாழைப்பூவின் தேவையற்ற காம்புகளை நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
சமைப்பதற்கு முன் அதை மோரில் ஊற வையுங்கள்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயத்தூள், புளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின் அதனை ஆற வையுங்கள்.
அதே கடாயில் வாழைப்பூவையும் வதக்கிக்கொள்ளுங்கள்.
மிக்சியில் முதலில் ஆற வைத்த கடலைப் பருப்பை அரைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
கடைசியாக பின் வாழைப்பூ, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள துவையலில் கொட்டி கலந்து விடவும்.
இப்போது சுவையான வாழைப்பூ துவையல் தயார்.
- இந்த தோசையை குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
- இந்த தோசை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 1 கரண்டி
ஸ்வீட் கார்ன் - தேவையான அளவு
குடைமிளகாய் - சிறியது 1
வெண்ணெய் - தேவையான அளவு
மிளகுப் பொடி - 1/2 மேசைக் கரண்டி
சீஸ் - விருப்பத்திற்கு ஏற்ப
புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் - 1 மேசைக் கரண்டி
செய்முறை
குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசையாக ஊற்றி சுற்றி வெண்ணெய் ஊற்ற அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
பின்னர் தோசை மேல் புதினா சட்னி அல்லது தக்காளி சாஸை தேய்க்கவும்.
அடுத்து அதன் மேல் ஸ்வீட் கார்ன், குடைமிளகாயை மேலே தூவி கொள்ளவும்.
அடுத்து அதன் மேல் மிளகு தூள், சிறிது உப்பு தூவவும்.
கடைசியாக தோசை மேல் சீஸை துருவி விடவும்.
சீஸ் உருகியதும் எடுத்து பரிமாறவும்.
இப்போது சீஸ் கார்ன் கேப்சிகம் தோசை ரெடி.
- குழந்தைகளுக்கு இந்த சப்பாத்தி மிகவும் பிடிக்கும்.
- இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்:
பிரெட் துண்டுகள் - 10,
கோதுமை மாவு - 150 கிராம்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
பால் - 100 மில்லி,
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,
நெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை:
பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
கோது மாவுடன் வெண்ணெய், பால், சர்க்கரை, பொடித்த பிரெட் சேர்த்துப் பிசைந்து, பதினைந்து நிமிடம் மூடி வைக்கவும்.
இதை சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் லேசாக நெய் தடவி சுட்டு எடுக்கவும்.
இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம்.
பிரெட், சர்க்கரை பால் சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும்.
- சாம்பார் பொடியை கடையில் வாங்கி இருப்பீங்க.
- கடையில் வாங்கும் பொடியை விட இது சூப்பராக இருக்கும்.
தேவையான பொருள்கள்:
மிளகாய் வத்தல் - 1/4 கிலோ
கொத்தமல்லி - 300 கிராம்
சீரகம் - 100 கிராம்
துவரம் பருப்பு - 50கிராம்
கடலைப் பருப்பு - 50 கிராம்
மிளகு - 25 கிராம்
வெந்தயம் - 25 கிராம்
செய்முறை :
முதலில் மிளகாய் வத்தலை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும்.
கொத்தமல்லி, சீரகம், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக ஒரு வாணலியில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். கருக விடாமல் மிதமான தீயில் வைத்து வறுத்து கொள்ளவும்.
வத்தல் காய்ந்ததும் எல்லாப் பொருள்கள்களையும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.
இந்த சாம்பார் பொடியை சாம்பார், புளி குழம்பு, கூட்டு மற்றும் அனைத்து குழம்பு வகைகளுக்கும் உபயோகிக்கலாம்.
காற்று புகாத பாட்டிலில் போட்டு 5 மாசம் வரை உபயோகிக்கலாம்.
- பாசிப்பயிறு கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும்.
- உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இந்த இட்லியை சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 1 கப்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
துருவிய கேரட் - 1/4 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - 1 துண்டு
உப்பு - தேவையான அளவு
Eno - 1 தேக்கரண்டி
செய்முறை
ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசிப்பருப்பு நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பேனில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், அரை தேக்கரண்டி கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்துக் வதக்கவும்.
அடுத்து அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அதனுடன் துருவிய கேரட், கொத்தமல்லி, இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
பின்னர் ஒரு தேக்கரண்டி Eno மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
இட்லி தட்டில் எண்ணெய் தடவி தயார் செய்து வைத்துள்ள மாவில் இட்லி ஊற்றவும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடானதும் இட்லி தட்டுகளை வைத்து மூடி வைக்கவும்.
மிதமான சூட்டில் 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
இப்போது சுவையான பாசிப்பருப்பு தாளிச்ச இட்லி தயார்.
தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.
- சில்லி மசாலா இட்லி மாலை நேர சிற்றுண்டியாக உண்பதற்கு சுவையாக இருக்கும்.
- மீதமான இட்லியில் உப்புமா செய்யாமல் இப்படி செய்தால் உடனே காலியாகிவிடும்.
தேவையான பொருட்கள்
குட்டி இட்லி - 20
சமையல் எண்ணெய் - ½ கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி-பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி
கொத்தமல்லி - சிறிது
மிளகாய்த்தூள் - 1 ½ தேக்கரண்டி
கரம் மசாலா - ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
டொமேட்டோ கெட்சப் - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - ½ தேக்கரண்டி
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
ஒரு பானில் ¼ கப் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ½ தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்த பின்னர் அதில் குட்டி இட்லிகளை சேர்த்து கிளறவும்.
குறைவான தீயில் வைத்து இட்லியின் நிறம் மாறி லேசான பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை தனியே எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் ¼ கப் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
பின்னர் டொமேட்டோ கெட்சப் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் செய்து வைத்த இட்லியை சேர்த்து பிரட்டிக் விடவும். அடுப்பை குறைவான தீயில் வைக்கவும்.
2 நிமிடங்களுக்கு பின்னர் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான சில்லி மசாலா இட்லி தயார்.
- கறிவேப்பிலையில் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
- உடலில் உள்ள கொட்ட கொழுப்பை கரைக்கும்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 2 கப்,
காய்ந்த மிளகாய் - 10,
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்,
கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயம் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை
கறிவேப்பிலையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து கொள்ளவும்.
அடுத்து அதில் மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு சிவக்க வறுத்து கொள்ளவும்.
கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, ஆறிய பிறகு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
சூப்பரான சத்தான கறிவேப்பிலை பொடி ரெடி
இந்தப் பொடியை சாதத்தில் சேர்த்து நெய்/எண்ணெய் கலந்து சாப்பிடலாம்.
- உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி உகந்தது.
- சர்க்கரை நோயாளிகள் கோதுமை உணவுகளை சாப்பிடுவது நல்லது.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கப்
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 5
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தாளிக்க
கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதை கரைத்து வைத்த மாவில் சேர்த்து அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து கல்லில் கனமாக விட்டு, இருபுறமும் எண்ணெய் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான கோதுமை வெங்காய தோசை ரெடி.
இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி, புதினா சட்னி அருமையாக இருக்கும்.
- முருங்கை கீரையில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி துவையல் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
துளிர் முருங்கைக் கீரை - 1 கப்
உளுந்தம் பருப்பு - 1 கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 8
புளி - நெல்லிக்காய் அளவு
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 5 பல்
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில்காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்த பின்னர் அதில் பூண்டு, வெங்காயம், முருங்கைக் கீரை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் புளி சேர்த்து கிளறி கொள்ளவும்.
10 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து வாணலியை இறக்கி விட வேண்டும்.
வதக்கிய பொருட்கள் ஆறியவுடன் மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் சேர்க்கவும்.
இந்த துவையலை சூடான சாதம், இட்லி, தோசை ஆகியவையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
- சாம்பாரில் பல்வேறு வெரைட்டிகள் செய்யலாம்.
- இன்று பாகற்காய் சேர்த்து சாம்பார் செய்து எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாகற்காய் - கால் கிலோ
துவரம்பருப்பு - 1 கப்
புளி - நெல்லிக்காய் அளவு
வெங்காயம் - 1
தக்காளி - 1
தேங்காய் துருவல் - 1 கைப்பிடி
தனியா - 3 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 6
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தாளிக்க :
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
பெருங்காய தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை - தேவைக்கு
செய்முறை :
* புளியை வெந்நீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டவும்.
* பாகற்காயை விதை நீக்கி வட்ட வடிவில் நறுக்கி தயிரில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். இது பாகற்காயின் கசப்பை நீக்க உதவும். பிறகு நன்றாக நீரில் அலசி, வேகவைத்து எடுக்கவும்.
* தனியா, மிளகாய் வற்றல், பருப்பு வகைகள், சீரகம், வெந்தயம் எல்லாவற்றையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
* மிக்சியில் தேங்காய் துருவலை போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குக்கரில் நறுக்கி வெங்காயம், தக்காளி, துவரம் பருப்பை சேர்த்து வேகவைத்து கொள்ளவும். பருப்பு வெந்ததும் அதை மசித்து கொள்ளவும்.
* கரைத்த புளியை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
* அடுத்து அதில் பாகற்காயை சேர்த்து பொடித்த மிளகாய், பருப்பு வகைகளை சேர்த்து கொதிக்கவிடவும்.
* அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுது, வேகவைத்து மசித்த பருப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்துக் சாம்பாரில் கொட்டி 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
* இறக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்..
* சூப்பரான பாகற்காய் சாம்பார் ரெடி.
* தக்காளி, தேங்காய் துருவல் சேர்ப்பதால் பாகற்காய் சாம்பார் கசப்பில்லாமல் சுவையாக இருக்கும்.
- இது எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும்.
- சளி, இருமலுக்கு இது நல்ல மருந்தாக செயல்படும்.
தேவையான பொருட்கள்:
தூதுவளை கீரை - ½ கப்
இட்லி அரிசி - 1 கப்
உளுந்து - ¼ கப்
வெந்தயம் - ½ டீஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு அவற்றை வடிகட்டி இஞ்சி, மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் மாவுக் கலவையுடன் உப்பு சேர்த்து வழக்கம் போல புளிக்க வைக்க வேண்டும்.
இப்போது தூதுவளை தோசை மாவு தயார்.
புளித்த பின் தோசையாகச் சுட்டு சாப்பிடலாம்.