என் மலர்
நீங்கள் தேடியது "heartattack"
- அ.தி.மு.க., விசுவாசியான இவர், கோவையில் உள்ள உறவினருடன் இணைந்து, மதுரை மாநாட்டுக்கு சென்றார்.
- எடப்பாடி பழனிசாமி மாரிமுத்து குடும்பத்துக்கு ஆறு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுமென அறிவித்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மதுரை மாநாட்டுக்கு சென்று திரும்பியபோது, மாரடைப்பால் இறந்த கட்சி தொண்டருக்கு, ஆறு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பெரிச்சிபாளையம் அண்ணமார் காலனி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, (48). அ.தி.மு.க., விசுவாசியான இவர், கோவையில் உள்ள உறவினருடன் இணைந்து, மதுரை மாநாட்டுக்கு சென்றார். மாநாடு நிறைவடைந்த பிறகு, அங்கிருந்து, திருப்பூர் குழுவினருடன் திருப்பூர் புறப்பட்டார்.
வேனில் வந்து கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தவரை சோதித்த போது, மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது. அதன்பின், உடலை திருப்பூர் எடுத்து வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன்,எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஆகியோரது பரிந்துரைப்படி, பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இறந்த மாரிமுத்து, குடும்பத்துக்கு, ஆறு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுமென அறிவித்துள்ளார்.