search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "helicopters"

    • தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது - மம்தா பானர்ஜி
    • திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டது

    அலிபுர்துவாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, "தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. மேற்கு வங்காளத்தில் ஏதேனும் ஒரு கலவரம் நடந்தால் கூட ஆணையத்திற்கு வெளியே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

    பாஜகவின் உத்தரவின் பேரில் முர்ஷிதாபாத் காவல் துணைக் கண்காணிப்பாளரை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இப்போது, முர்ஷிதாபாத் மற்றும் மால்டாவில் கலவரம் நடந்தால், அதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பாகும். கலவரம் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில், போலீஸ் அதிகாரிகளை மாற்ற பாஜக விரும்புகிறது.

    நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டது. இதே போல் தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபடும் பா.ஜ.க தலைவர்களின் ஹெலிகாப்டர்களிலும், தேர்தல் ஆணைய பறக்கும் படை சோதனை செய்யுமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    அபிஷேக் பானர்ஜியை தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஹெலிகாப்டரும் சோதனைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

    இந்திய கடற்படைக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 111 புதிய ஹெலிகாப்டர்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. #helicoptersprocurement #111Navyhelicopters
    புதுடெல்லி:

    நாட்டின் முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்களை கொள்முதல் செய்யும் குழுவின் கூட்டம் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் இந்திய கடற்படைக்கு ரூ.21 ஆயிரம் கோடி செலவில் 111 புதிய ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    மேலும், 3,364 கோடி ரூபாய் செலவில் அதிநவீன துப்பாக்கிகள் மற்றும்  24,879 கோடி ரூபாய்க்கு பிற ஆயுதங்களை கொள்முதல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மொத்தத்தில் சுமார் 46 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கொள்முதலுக்கு இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். #helicoptersprocurement   #111Navyhelicopters  
    கேரளாவில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பும்படி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார். #KeralaFloods #KeralaRain #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    தென்மேற்கு பருவமழை தென்னிந்தியாவில் தீவிரமடைந்து தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இடைவிடாத பெய்த மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீர் திறக்கப்பட்டதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல்வேறு பாலங்கள் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    கேரளா மற்றும் கர்நாடகாவில் மழை படிப்படியாக குறையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற உள்ளது.



    இந்நிலையில் கேரளாவில் வெள்ள பாதிப்பு அதிகம் இருப்பதால் மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாடர்களை அனுப்பும்படி பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.

    கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடர்பு கொண்டு வெள்ள பாதிப்பு மற்றும்  மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர் தேவை என முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்ற மத்திய மந்திரி, கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பும்படி விமானப்படை தளபதிக்கு உத்தரவிட்டிருக்கிறார். அத்துடன், கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என கூறியுள்ளார். #KeralaFloods #KeralaRain #NirmalaSitharaman
    ரூ.6 ஆயிரம் கோடிக்கு 6 ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. #Helicopter
    வாஷிங்டன்:

    ராணுவ தாக்குதலில் பல்வேறு சாகசங்களை புரியும் ‘அப்பச்சி’ ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்ய இந்தியா விரும்பியது. இந்தியாவின் விருப்பத்துக்கு இணங்கியுள்ள அமெரிக்க அரசு, 6 அப்பச்சி ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான ‘பென்டகன்’ கூறியுள்ளது.

    இது குறித்து ‘பென்டகன்’ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அமெரிக்க நிர்வாகம் ‘வெளிநாட்டு ராணுவத்துக்கு விற்பனை’ என்ற அடிப்படையில் 930 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.6 ஆயிரம் கோடி) 6 ஏ.எச்-64இ அப்பச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது’ என்று கூறப்பட்டு உள்ளது.

    அத்துடன், ஹெல்பயர், ஸ்டிங்கர் ஏவுகணைகள், 14 டி700-ஜி.இ-701டி ரக என்ஜின்கள், 4 ஏ.என் மற்றும் ஏ.பி.ஜி.78 தீத்தடுப்பு ரேடார்கள், 4 ரேடார் எலக்ட்ரானிக் அலகுகள், இரவுநேர பயன்பாட்டுக்கு உதவும் சென்சார்கள் உள்ளிட்ட ஏராளமான தளவாடங்களையும் இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்து இருப்பதாக பென்டகன் மேலும் கூறியுள்ளது.

    இதுபற்றி அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ‘பென்டகன்’ தனது அறிவிக்கையை அனுப்பி வைத்துள்ளது. எந்த எம்.பி.யும் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், இந்த விற்பனை விவகாரத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்.

    ‘பென்டகன்’ தனது அறிவிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

    ‘அப்பச்சி’ ரக ஹெலிகாப்டர்கள், அமெரிக்க ராணுவத்தாலும், சர்வதேச படைகளாலும் பயன்படுத்தப்படுபவை. இவற்றை பயன்படுத்துவதிலோ, தனது ராணுவத்தில் சேர்ப்பதிலோ இந்தியாவுக்கு எந்த கஷ்டமும் இருக்கப்போவதில்லை.

    தனது நாட்டை பாதுகாத்துக்கொள்ளவும், பிராந்திய அச்சுறுத்தலை சமாளிக்கவும் இந்தியாவுக்கு இது வலிமையை அளிக்கும். தனது படைகளை நவீனமயமாக்குவதற்கும் உதவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அடுத்த மாதம் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி மற்றும் ராணுவ மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதற்கு முன்பாக இந்த ஹெலிகாப்டர்கள் விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
    ×