search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "higher studies"

    • கடந்த 6 ஆண்டில் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
    • விபத்துகள், மருத்துவ காரணங்கள், தாக்குதல்களால் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் வெளிநாடுகளில் தங்கிப் படிக்கும் இந்தியர்கள் குறித்த கேள்வி இன்று எழுப்பப்பட்டது.

    இந்தக் கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக இணை மந்திரி கீர்த்திவர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியதாவது:

    கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் வெளிநாடுகள் சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

    2019-ம் ஆண்டில் 6,75,541 மாணவர்கள் படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை 13,35,878 ஆக உயர்ந்துள்ளது.

    இந்திய மாணவர்கள் உயர் கல்விக்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர்.

    கனடாவில் 4,27,000 பேரும், அமெரிக்காவில் 3,37,630 பேரும், இங்கிலாந்தில் 1,85,000 பேரும், ஆஸ்திரேலியாவில் 1,22,202 பேரும் படித்து வருகின்றனர்.

    இந்திய மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் எண்ணிக்கை வரும் காலங்களில் தொடர்ந்து உயரும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், விபத்துகள், மருத்துவ காரணங்கள் மற்றும் தாக்குதல்களால் 41 நாடுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். கனடாவில் 172, அமெரிக்காவில் 108, இங்கிலாந்தில் 58, ஆஸ்திரேலியாவில் 57, ரஷ்யாவில் 37, ஜெர்மனியில் 24 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில், 19 உயிரிழப்புகள் கொலைகளால் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த 3 ஆண்டில் 48 இந்திய மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    ×