search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Highway Project"

    • பாலம் கட்டுவதற்கான கூடுதல் நிதியை நெடுஞ்சாலைத்துறையில் இருந்து ரெயில்வே துறை கோரியது.
    • சென்னையில் இருந்து சித்தூர் வழியாக திருப்பதிக்கு செல்லும் பயண நேரம் 15 முதல் 20 நிமிடங்கள் குறையும்.

    சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை சத்ராஸ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி ஆகிய பகுதிகளுடன் இணைக்கும் புதிய நெடுஞ்சாலை திட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாக சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

    சமீபத்தில் சாலை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இப்போது வரை 94 சதவீத பணிகள் முடிந்து விட்டன. இந்த பணிக்காக நந்தி ஆற்றின் குறுக்கே 100 மீட்டர் நீளமுள்ள புதிய பாலமும், திருத்தணி மற்றும் அரக்கோணம் ரெயில் நிலையங்களில் ரெயில்வே பாலம் கட்டுவதும் இதன் திட்டப் பணியாகும். அதற்காக, 3.2 கி.மீ நீளமுள்ள சாலை கூடுதலாக போடப்பட வேண்டி உள்ளது.

    மேலும் 800 மீட்டர் நீளமுள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கட்டுமான செலவும் அதிகரித்தது.

    எனவே பாலம் கட்டுவதற்கான கூடுதல் நிதியை நெடுஞ்சாலைத்துறையில் இருந்து ரெயில்வே துறை கோரியது.

    இந்த நிலையில் தமிழக அரசு இதற்காக கூடுதலாக ரூ.5.9 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது. இதையடுத்து மேம்பாலம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்த நெடுஞ்சாலைப் பணியின் முழு திட்டமும் அடுத்த ஆண்டு 21-க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கப்பட உள்ளது.

    இந்த பணிகள் முடிந்தால் போக்குவரத்து தொடர்பாக சென்னையில் இருந்து சித்தூர் வழியாக திருப்பதிக்கு செல்லும் பயண நேரம் 15 முதல் 20 நிமிடங்கள் குறையும். மேலும் கோவில் நகரமான திருத்தணியில் 70 சதவீதம் போக்குவரத்து நெரிசலும் குறையும்.

    ×