search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "highway work"

    • நெடுஞ்சாலை பணிக்காக மூடப்பட்ட பாசன கால்வாயால் விவசாயிகள் அவதி அடைந்தனர்.
    • வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் வந்த சோதனை.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் எஸ். மாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் இங்குள்ள வாகை கண்மாயில் பருவ மழை காலங்க ளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி பல ஆண்டுகளாக விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விவசாயி களின் விளைநிலங்கள் குறுக்கே கடந்த 3 ஆண்டுகளாக மதுரை-காரைக்குடி தேசிய நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் காலங்காலமாக ஏக்கர் கணக்கில் உள்ள விளை நிலங்களுக்கு பாசனத்திற்காக பயன்படுத்தி வந்த கால்வாயை அதிகாரிகள் சாலை பணிக்காக மூடி விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் சாலையின் ஒரு புறம் சுமார் 20 ஏக்கர் பரப்பில் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியும், மறுபுறம் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பல ஏக்கர் நிலம் தரிசு நிலம் போல் காட்சி அளிக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகை யில், சாலை பணி தொடங்கும் போது அதிகாரிகளிடத்தில் காலங்காலமாக விவசாயத்திற்கு நாங்கள் பயன்படுத்தி வந்த தூம்பு வாய்க்காலிலேயே புதி தாக கல்வெட்டு பாலத்தை ஏற்படுத்தி தாருங்கள் என்று கோரிக்கை விடுத்தோம்.

    ஆனால் அதிகாரிகள் எங்கள் பேச்சுக்கு செவி சாய்க்காமல் கண்மாயின் இருபுறமும் மேடாக உள்ள பகுதியில் பாலத்தை கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கண் மாயிலில் உள்ள தண்ணீரை பாசனத்திற்கு மடை வழியாக திறக்கும்போது வயலின் ஒரு பகுதியில் கண்மாய் போல் தண்ணீர் தேங்கிய கார ணத்தினால் மறுப்பகுதிக்கு செல்ல முடியாத ஒரு சூழ்நிலை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நிலவி வருகிறது.

    இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் தெரிவித்தும் இன்றளவும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை என்று கூறி வருகின்றனர். அதிகாரி களின் அலட்சியம் மற்றும் மெத்தனப்போக்கால் ஒரு கிராமமே விவசாயத்தை இழந்து தண்ணீர் இருந்தும் கண்ணீர் சிந்தும் சூழ்நிலையிக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×