search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hijack plane"

    • அரசுமுறை பயணமாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.
    • அங்கு மந்திரி ஜெய்சங்கர், ஜெனீவாவில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.

    ஜெனீவா:

    அரசுமுறை பயணமாக சுவிட்சர்லாந்து சென்றுள்ள வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், ஜெனீவாவில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.

    சமீபத்தில் ஓ.டி.டி.யில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய ஐ.சி-814: தி காந்தஹார் ஹைஜாக் என்ற வெப் தொடர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மந்திரி ஜெய்சங்கர் அளித்த பதிலளித்து கூறியதாவது:

    இந்த வெப் தொடரை இன்னும் பார்க்கவில்லை. ஆனாலும் என் தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    1984-ம் ஆண்டிலும் ஒரு விமான கடத்தல் நடந்தது. இண்டியன் ஏர்லைன்ஸ் பயணியர் விமானத்தை காலிஸ்தான் ஆதரவு கடத்தல்காரர்கள் துபாய்க்கு கடத்தினர்.

    அப்போது இளம் அதிகாரியாக இருந்த நான் இந்திய வெளியுறவு துறையின் கையாளும் குழுவில் ஒருவனாக இருந்தேன். மொபைல் போனில் என் அம்மாவை அழைத்து, 'விமானத்தை கடத்தியுள்ளனர். என்னால் வீட்டுக்கு வரமுடியாது' என கூறினேன்.

    அதன்பின், கடத்தப்பட்ட விமானத்தில், என் தந்தையும் இருப்பதைக் கண்டுபிடித்தேன். இது ஒரு பெரிய கதை.

    இதில் சுவாரசியம் என்னவென்றால், ஒருபுறம் கடத்தல் சம்பவத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவில் இருந்தேன். மறுபுறம், விமானக் கடத்தல் தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்தேன் என தெரிவித்தார்.

    ரஷிய விமானத்தை கடத்த முயன்ற குடிகார நபரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #RussianFlight #HijackPlane
    மாஸ்கோ:

    ரஷிய விமானம் ஒன்று, சைபீரியாவின் சூர்குத் நகரத்தில் இருந்து மாஸ்கோ நோக்கி நேற்று சென்றுகொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு நபர், விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு திருப்பும்படி விமான ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் விமானி அந்த விமானத்தை அவசரமாக காண்டி மான்சிய்ஸ்க் நகரில் தரையிறக்கினார். அந்த விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் அந்த விமானம் நிறுத்தப்பட்டிருந்தது.

    போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீசார் விமானத்தில் ஏறி அந்த நபரை கைது செய்தனர். குடிபோதையில் இருந்த அவர் சூர்குத் நகரை சேர்ந்தவர் என்பதும், சொத்துகளை சேதம் செய்த வழக்கில் தண்டனை அனுபவித்தவர் என்பதும் தெரிந்தது. அவர் மீது விமானத்தை கடத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #RussianFlight #HijackPlane

    ×