என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Hills Village"
- பல ஆண்டுகளாக இங்கு சாலை எதுவும் அமைக்கப்படாதால் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர்.
- மலை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் டோலி கட்டி ஊர்வலமாக சென்று தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டம் அர்லா ஊராட்சியில் மலை கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள நீலபெண்டா, பெட கருவு, கொத்தலோ சிங்கி, பத்தலோ சிங்கி ஆர்ல பிட்ரிக் கெட்டா, குர்ரலா பைலு கட்டாபலேம் உள்ளிட்ட கிராமங்களில் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக இங்கு சாலை எதுவும் அமைக்கப்படாதால் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர். கர்ப்பிணிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காக மலை கிராம மக்களுக்கு வாக்குச்சாவடி வசதி ஏற்படுத்தவில்லை.
அவர்கள் 15 கிலோமீட்டர் நடந்து சென்று வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மலை கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மலை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் டோலி கட்டி ஊர்வலமாக சென்று தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.
15 கிலோமீட்டர் நடந்து சென்று ஓட்டு போட முடியாது. எங்கள் மலை கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.