என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Himachal Pradesh Polls"
+2
- ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை, 300 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது
- பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதலான இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது.
சிம்லா:
இமாசல பிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தது. 68 இடங்களை கொண்ட இந்த மாநிலத்தின் சட்டசபைக்கு கடந்த நவம்பர் 12-ந்தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சிகளும் மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கின. ஆம் ஆத்மி கட்சியும் அத்தனை இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. இடதுசாரி கட்சிகள் 12 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. எனினும், பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அந்த கட்சி 8 லட்சம் பேருக்கு வேலை, பொது சிவில் சட்டம் அமல் என கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கியது. காங்கிரஸ் கட்சிக்காக பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு 1 லட்சம் பேருக்கு அரசு வேலை, 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை என கவர்ச்சி வாக்குறுதிகளை அக்கட்சி அளித்தது. ஆம் ஆத்மி கட்சிக்காக அதன் நிறுவனர் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும் பிரசாரம் செய்தனர். அந்த கட்சி 300 யூனிட் மின்சாரம், 6 லட்சம் பேருக்கு அரசு வேலை, வீடுதோறும் ரேஷன் பொருட்கள் வினியோகம் என வாக்குறுதிகளை வாரி வழங்கியது. இதனை தொடர்ந்து, கடந்த நவம்பர் 12-ந்தேதி வாக்கு பதிவு நடந்து முடிந்தது.
இதனை தொடர்ந்து, குஜராத் சட்டசபைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் சேர்த்து இமாச்சல பிரசேத தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதற்காக மாநிலத்தின் 59 இடங்களில் 68 வாக்கு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாநில போலீசாருடன், துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து ஒவ்வொரு சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இரண்டு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் இழுபறி ஏற்படலாம் என கருதப்பட்டது. ஆனால் பிற்பகல் காங்கிரஸ் கட்சி பல இடங்களில் முன்னிலை பெற்றது. மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், அதைவிட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றதால் காங்கிரசின் வெற்றி உறுதியானது.
இரவு வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதலான இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்று உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. 24 தொகுதிகளையே கைப்பற்றி உள்ளது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர். இதன்மூலம் இமாசல பிரதேசத்தில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதனை தொடர்ந்து, காங்கிரசார் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும், சரவெடிகளை வெடித்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
- காங்கிரஸ் கட்சி 33 இடங்களில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை நெருங்கியது
- மக்களின் மேம்பாட்டிற்காக உழைப்பதை நிறுத்தமாட்டேன் என ஜெய்ராம் தாக்கூர் பேட்டி
சிம்லா:
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. ஆட்சியமைக்க 35 இடங்கள் தேவை என்ற நிலையில், மாலை நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 33 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.
ஆளும் பாஜக தோல்வியை தழுவி உள்ளது. இதையடுத்து முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ராஜினாமா செய்தார். ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த அவர், பதவியில் இல்லாவிட்டாலும் மக்களின் மேம்பாட்டிற்காக உழைப்பதை நிறுத்த மாட்டேன் என்றார்.
பாஜக தோல்வி அடைந்துள்ள நிலையில், சில விஷயங்களை பகுப்பாய்வு செய்ய வேண்டி உள்ளது. சில பிரச்சனைகள் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. இதுபற்றி விளக்கம் கேட்டு மேலிடம் அழைத்தால் டெல்லி செல்வேன் என்றும் ஜெய்ராம் தாக்கூர் கூறினார்.
- மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருப்பது அவசியம் என பிரதமர் பேச்சு
- இரட்டை எஞ்சின் ஆற்றலை பெற்றால் தான் புதிய உயரங்களை இமாச்சல் பிரதேச மாநிலம் எட்டும்.
காங்க்ரா:
இமாச்சல் பிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இந்த மாநிலத்திற்கு துரோகம் செய்தது, வளர்ச்சியின் எதிரியாகவும் இருந்தது. காங்கிரஸ் கட்சி மாநில முன்னேற்றத்தைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது. எனவே, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருப்பது அவசியம்.
இமாச்சல பிரதேசத்திற்கு நிலையான மற்றும் வலுவான அரசாங்கம் தேவை. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி என்பது போல் இரட்டை எஞ்சின் ஆற்றலையும் பெற்றால் தான் சவால்களையும் முறியடித்து புதிய உயரங்களை இமாச்சல் பிரதேச மாநிலம் எட்டும். ஊழல் மற்றும் மோசடிகளுக்கு காங்கிரஸ் தான் உத்தரவாதம் அளிப்பார்கள். காங்கிரஸ் கட்சியால் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு ஒரு நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாது.
இப்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. ஆனால் குறிப்பிட்ட இந்த இரண்டு மாநிலங்களும் வளர்ச்சி அடைந்ததாக எந்த செய்தியும் வரவில்லை.
பா.ஜ.க.வுக்கு, நாடு மற்றும் ராணுவ வீரர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே விரிவான முன்னேற்றம் அடைய முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- காங்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார்
- இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் போதைப்பொருட்களை ஒழிக்க காங்கிரஸ் கட்சி போராடும் என பேச்சு
காங்ரா:
இமாச்சல பிரதேசத்தில் வரும் 12ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு வாக்குறுதிகளையும் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்ராவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது, இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும், பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்குவோம் என்றும் வாக்குறுதி அளித்தார்.
இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் போதைப்பொருட்களை ஒழிக்க காங்கிரஸ் கட்சி போராடும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஆங்கில வழிப் பள்ளிகளைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.
இமாச்சல பிரதேசத்தை ஆளும் பாஜகவை கடுமையாக சாடிய அவர், பாஜக ஆட்சியின் கீழ் மாநிலம் கடனில் மூழ்கியுள்ளது என்றும, 63,000 அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் தெரிவித்தார்.
தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை சுட்டிக்காட்டிய பிரியங்கா, அதேபோன்று இமாச்சல பிரதேசத்திலும் தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றும் என உறுதி அளித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்