search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Historical symbols"

    • அமராவதி ஆற்றங்கரையில் புராதான கோவில்களும், கல்வெ ட்டுகளும் அதிகளவில் உள்ளன.
    • உடுமலை நகராட்சி அலுவலக கட்டடம் 1941ல் கட்டி முடிக்கப்பட்டு தாகூர் மளிகை என்ற பெயரில் பயன்பாட்டுக்கு வந்தது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல், அமராவதி என ஆற்றங்கரை நாகரீகம் முற்காலத்தில் செழித்திருந்தது. அமராவதி ஆற்றங்கரையில் புராதான கோவில்களும், கல்வெ ட்டுகளும் அதிகளவில் உள்ளன.மேலும், வரலாற்று சிறப்பு மிக்க நெடுகல், நடுகல், கல்வெட்டுகள் ஏராளம் இப்பகுதியில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வரலாற்று சின்னங்கள் போதிய பராமரிப்பின்றி பாழாகி வருகிறது.முக்கியத்துவம் தெரியாமல் பழங்கால சிலைகள், கல்திட்டைகள், கல்வெட்டுகள் அழிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.

    உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் உள்ள பெருங்கற்கால சின்னங்கள், சுதந்திர போராட்ட வரலாறு குறித்து இளைய தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக திருப்பூர் மாவட்டம் 2009ல் உருவாக்கப்பட்ட போது தொல்லியல்துறை சார்பில், அருங்காட்சியகம் ஏற்படுத்தி பழங்கால பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும்.மாவட்டத்தின் தொன்மையான வரலாறு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்த ப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    உடுமலை நகராட்சி அலுவலக கட்டடம் 1941ல் கட்டி முடிக்கப்பட்டு தாகூர் மளிகை என்ற பெயரில் பயன்பாட்டுக்கு வந்தது. நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டதும் பழைய கட்டடம் பயன்பாடு இல்லாமல் இருந்தது.முழுவதும் கற்களால் கட்டப்பட்டு பொலிவு மாறாமல் இருக்கும் கட்டடத்தில், அருங்காட்சியகம் அமைக்க கோரிக்கை எழுந்தது.

    இதையடுத்து நகராட்சி சார்பில் தாகூர் மளிகையில், அருங்காட்சியகம் ஏற்படுத்தி உடுமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான பொருட்கள் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.சுதந்திர போராட்ட வரலாறு குறித்த தகவல் பலகைகளும் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், உடுமலை நகராட்சியும், அருங்காட்சியகம் அமைப்ப தற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×