என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "HIV positive"
- உத்தரகாண்டின் ருத்ராபூரில் மணப்பெண் போல் நடித்து ஒரு பெண் பலரை ஏமாற்றியுள்ளார்.
- ஜெயிலில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் உறுதியானது.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் உத்தம்சிங் நகர் பகுதியைச் சேர்ந்த பெண் அவரின் தாய் உள்பட 7 பேரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது.
அந்த பெண் உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பல ஆண்களை திருமணம் செய்து, அவர்களிடமிருந்த பணம் மற்றும் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளார். இதற்கு அந்த பெண்ணின் தாயும், மற்ற சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், சிறையில் உள்ள அந்தப் பெண்ணுக்கு சமீபத்தில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு எச்.ஐ.வி. இருப்பது உறுதியானது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறை மற்றும் போலீசார் அந்தப் பெண் திருமணம் செய்து ஏமாற்றிய ஆண்களைத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, அந்தப் பெண்ணுடன் தொடர்பிலிருந்த 3 மாப்பிள்ளைகளுக்கு எச்.ஐ.வி. இருப்பது கண்டறியப்பட்டது. நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை வழங்கி வருகின்றனர்.
மேலும், இந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரேனும் பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடலாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
உலகை அச்சுறுத்தும் எய்ட்ஸ் நோய்க்கு எதிராக இந்தியா பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு பிரசாரங்களையும் செய்து வருகிறது.
எச்.ஐ.வி. பாதிப்பால் விஷம் குடித்து இறந்த வாலிபரின் உடல் ஐகோர்ட்டு உத்தரவுப்படி இன்று வெளிமாவட்ட டாக்டர்களால் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் வீடியோவில் அதனை பதிவு செய்யும் பணிக்கான ஏற்பாடுகள் முடிவடையாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபர் தானமாக வழங்கிய ரத்தம், விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்டது. இதனால் அந்த பெண் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளானார்.
இதனால் மன வேதனை அடைந்த வாலிபர், எலி மருந்து (விஷம்) குடித்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 30-ந்தேதி பரிதாபமாக இறந்தார்.
அவரது சாவில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டிய உறவினர்கள், பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும் வெளிமாவட்ட அரசு டாக்டர்களை கொண்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று வாலிபரின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
இதனை மதுரை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் ஏற்க மறுத்ததால் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருநெல்வேலி, தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் ஏதாவது ஒன்றின் 2 மருத்துவ நிபுணர்களை கொண்டு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டனர். மேலும் அதனை வீடியோவில் பதிவு செய்யவும் உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தேனி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த தடயவியல் துறை பேராசிரியர்கள் அருண்குமார், சந்திரசேகர் ஆகியோர் மதுரை வந்தனர். அவர்களுடன் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஜூலியானா, சதாசிவம் ஆகியோரும் பிரேத பரிசோதனை செய்ய தயாரானார்கள்.
இந்த சூழலில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீன், வழக்கு விசாரணைக்காக மதுரை ஐகோர்ட்டிற்கு சென்று விட்டார். இதன் காரணமாகவும் வீடியோ ஒளிப்பதிவுக்கான பணிகள் முடிவடையாததாலும் பிரேத பரிசோதனை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த சிக்கல் காரணமாக எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளான வாலிபரின் உடல் இன்று பிற்பகலில் பிரேத பரிசோதனை செய்யப்படக்கூடும் என மருத்துவ வட்டாரம் தெரிவித்தது. #HIVBlood
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்