search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hogenakkal Cauvery river"

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்த 6-ம் வகுப்பு மாணவி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பென்னாகரம்:

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்த 6-ம் வகுப்பு மாணவி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தாள். உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

    இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கூத்தப்பாடியைச் சேர்ந்தவர் முனுசாமி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி. இவர்களுடைய மகள் பூஜா (வயது 11). கூத்தப்பாடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பூஜா 6-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    நேற்று முனுசாமி தனது குடும்பத்தினருடன் ஒகேனக்கல் சென்றார். அங்குள்ள அருவி, முதலைப்பண்ணை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர்.

    பின்னர் ஊத்துமலை பரிசல்துறைக்கு சென்றனர். அங்குள்ள காவிரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர். பூஜாவும் ஆற்றில் இறங்கி குளித்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக பூஜா தண்ணீரில் மூழ்கினாள். இதை அறிந்த முனுசாமி பதறி துடித்தார். மகளை காப்பாற்றும்படி சத்தம் போட்டார். அதற்குள் பூஜா ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டாள். இதுபற்றி ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசாரும், பரிசல் ஓட்டிகளும் அங்கு வந்து ஆற்றில் பூஜாவை தேடினர். சிறிது தூரத்தில் பூஜா உடலை கண்டு எடுத்தனர். காவிரி ஆற்று தண்ணீரில் மூழ்கி அவள் பலியானது தெரியவந்தது. உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்கொலை செய்த முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் ஓசூரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
    ஒகேனக்கல்

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை அருகே நேற்று முதியவர் ஒருவர் உடல் கரை ஒதுங்கியது. இதனை பார்த்து அந்த பகுதியில் குளிக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த முதியவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள மத்திகிரி பகுதியை சேர்ந்த அன்னியப்பா (வயது85) என்பதும், அவர் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து முதியவர் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது.

    சேலம்:

    கர்நாடகாவில் கபினி அணை நீர்பிடிப்பு பகுகளில் கடந்த வாரம் பெய்த மழையால் அந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து 81 அடியை தாண்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி 25 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கடந்த 24-ந் தேதி மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்ததால் 18 ஆயிரத்து 428 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.

    இதற்கிடையே கர்நாடகாவில் மழை குறைந்ததால் கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை அணைக்கு நீர்வரத்து 3919 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் மட்டுமே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் நீர்வரத்து குறைந்துள்ளது.

    நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 7500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 3500 கன அடியாக குறைந்தது. இனி வரும் நாட்களில் மேலும் நீர்வரத்து குறைய வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தும், உற்சாகமாக குடும்பத்துடன் படகு சவாரி சென்றும் மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று 9516 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 6912 கன அடியாக இருந்தது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 55.82 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 56.59 அடியாக உயர்ந்தது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்புள்ளது.

    ×