search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Home Minister Amit Shah"

    • 8 பேரின் குடும்பத்தினர் பிரதமர், உள்துறை அமைச்சர் தலையீட்டை கோரினர்
    • புதிய தண்டனையின் விவரம் குறித்து இரு அரசுகளும் தகவல் தெரிவிக்கவில்லை

    அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் (Qatar) அல் தஹ்ரா (Al Dahra) எனும் தனியார் நிறுவனத்தில் பணியாற்ற சென்ற இந்திய கப்பற்படையை சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் 8 பேர் அந்நாட்டில் பணியாற்றி கொண்டே இஸ்ரேல் நாட்டிற்கு உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கத்தார் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    அதிகாரிகளின் குடும்பத்தினரும், உறவினரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரி கடிதங்கள் எழுதினர்.

    இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரி குற்றம் சாட்டப்பட்ட 8 பேரின் குடும்பத்தினர் இந்திய அரசிடம் கண்ணீர் மல்க பலமுறை கோரிக்கை வைத்தனர். அவர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் பலர் இத்தீர்ப்பை கத்தார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதற்கு இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வந்தனர்.

    இம்மாத தொடக்கத்தில் கத்தாருக்கான இந்திய தூதர் சிறையில் அடைக்கப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசினார்.

    கத்தார் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்த போது தூதரும், அதிகாரிகளின் குடும்பத்தினரும் நேரில் அங்கு சென்றிருந்தனர்.

    இந்நிலையில் இன்று, கத்தார் நீதிமன்றம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைத்திருப்பதாகவும், குறைந்த தண்டனையே வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு துறை அறிவித்துள்ளது.

    புதிய தண்டனையின் விவரம் குறித்து இதுவரை இரு நாட்டு அரசாங்கங்களும் தெரிவிக்கவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் புரிந்தவர்கள் அவர்கள்
    • ரெயில்வே மந்திரியாக இருந்த போது லல்லு பிரசாத் பல கோடிக்கு ஊழல் செய்தார்

    இந்தியாவின் 18-வது மக்களவைக்கான தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும், பா.ஜ.க. கூட்டணியை எதிர்க்க "இந்தியா கூட்டணி" எனும் பெயரில் 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகளை உள்ளடக்கிய எதிர்கட்சி கூட்டணியும் இப்போதிலிருந்தே மும்முரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன.

    பா.ஜ.க.வின் சார்பில் "லோக் சபா பிரவஸ்" எனும் திட்டத்தின் கீழ் தற்போது நாடு முழுவதும் ஆங்காங்கே அதன் சாதனை விளக்க பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

    ஆளும் பா.ஜ.க.வின் உள்துறை அமைச்சரான அமித் ஷா, பீகார் மாநில மதுபானி மாவட்டத்தில் லோக் சபா பிரவஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜஞ்சர்பூர் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது இந்தியா கூட்டணியை எதிர்த்து அமித் ஷா பேசியதாவது:

    "எதிர் கட்சியினர் ஒரு புது பெயரில் பழைய கூட்டணியையே உருவாக்கியுள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி எனும் பெயரில் ஒரு கூட்டணி அமைத்து முன்பு ஆட்சியில் இருந்த போது ரூ.12 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் செய்தனர்."

    "அப்போது ரெயில்வே மந்திரியாக இருந்த பீகாரின் லல்லு பிரசாத் யாதவ் பல கோடிக்கு ஊழல் செய்தார். அதே பெயரில் மீண்டும் அவர்கள் ஓட்டு கேட்டு ஆட்சிக்கு வர முடியாது என உணர்ந்து இந்தியா கூட்டணி என புது பெயரிட்டு உலா வருகிறார்கள். இக்கூட்டணியை சேர்ந்தவர்கள் இந்துக்களின் புனித ராம்சரிதமானசை அவமானப்படுத்துகிறார்கள்."

    "ரக்ஷாபந்தன் மற்றும் ஜன்மாஷ்டமி ஆகிய இந்துக்களின் பண்டிகை தினங்களுக்கு விடுமுறையை ரத்து செய்கிறார்கள். இந்துக்களின் சனாதன தர்மத்தை வியாதிகளோடு ஒப்பிடுகிறார்கள். ஆனால் வேறு சிலரோடு மற்றும் சமாதான அணுகுமுறையை கடைபிடிக்கிறார்கள்," என்று கூறினார்.

    ×