search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Honda Activa"

    • ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 2001 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்பட்டுள்ளது.
    • தென்னிந்தியாவில் 50 லட்சம் ஹோண்டா ஆக்டிவாவை விற்பனை செய்ய 16 ஆண்டுகள் தேவைப்பட்டது.

    தென்னிந்தியாவில் 1 கோடி ஆக்டிவா ஸ்கூட்டரை விற்பனை செய்து ஹோண்டா மோட்டார் சைக்கிள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

    இதில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் போன்ற யூனியன் பிரதேசங்களும் அடங்கும்.

    ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் 2001 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்பட்டுள்ளது.

    2017 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் 50 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த இலக்கை எட்ட அந்நிறுவனத்திற்கு 16 ஆண்டுகள் தேவைப்பட்டது.

    அதே சமயம் அடுத்த 50 லட்சம் ஸ்கூட்டியை விற்க 7 ஆண்டுகள் மட்டுமே அந்நிறுவனத்திற்கு தேவைபட்டுள்ளது. 

    • ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா எலெக்ட்ரிக் வேரியண்ட் உருவாக்கப்பட்டு வருகிறது.
    • புதிய ஆக்டிவா எலெக்ட்ரிக் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    ஹோண்டா நிறுவனம் 2025 வாக்கில் பத்து எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. இதில் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் இடம்பெற்று இருக்கிறது. இந்த நிலையில், ஹோண்டா எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் பற்றி புது தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அந்த வகையில் ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் இதன் விலை தற்போது விற்பனை செய்யப்படும் ஆக்டிவா 110சிசி வேரியண்டை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஆக்டிவா பெட்ரோல் மாடல் விலை ரூ. 73 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

     புதிய ஹோண்டா எலெக்ட்ரிக் வெர்ஷன் மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும் என்றும் மிட்-ரேன்ஜ் எலெக்ட்ரிக் வாகனமாக அறிமுகமாகும் என தெரிகிறது. எலெக்ட்ரிக் வாகனத்தை மாற்று போக்குவரத்துக்காக வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடல் ஏற்றதாக இருக்கும் என ஹோண்டா தெரிவித்து இருக்கிறது.

    இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் எத்தனை கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த ஸ்கூட்டர் 60 முதல் 80 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் கொண்டிருக்கும் என தெரிகிறது. தோற்றத்தில் இந்த ஸ்கூட்டர் பெட்ரோல் மாடலை போன்றே காட்சியளிக்கும்.

    635 விதிமீறல்கள் நிலுவையில் இருந்த ஹோன்டா ஆக்டிவா ஸ்கூட்டரை மடக்கிப்படித்த போலீசார் ஸ்கூட்டரை ஓட்டி வந்தவருக்கு பெரிய தொகையை அபராதமாக விதித்தனர். #TrafficOfficers


    மைசூரு நகர போக்குவரத்து காவல் துறைக்கு 'அன்றைய' வாகன சோதனை வழக்கமானதாக இருக்கவில்லை. வாகன சோதனையின் போது சிக்கிய ஹோன்டா ஆக்டிவா காவல் துறையினரின் நீண்ட நாள் தேடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

    போக்குவரத்து காவல் துறையினர் மடக்கிய குறிப்பிட்ட ஹோன்டா ஆக்டிவா மீது ஏற்கனவே 635 போக்குவரத்து விதிமீறல்கள் நிலுவையில் இருந்தது, காவல் துறையினருக்கு அதிர்ச்சி கலந்த ஆனந்த உணர்வை ஏற்படுத்தியது. ஆக்டிவா ஸ்கூட்டரின் பதிவு எண் மூலம் நிலுவையில் இருந்த விதிமீறல் விவரங்களை காவல் துறையினர் தெரிந்து கொண்டனர்.

    சிறிதளவு விதிமீறல் என்றாலே கொதித்தெழும் போக்குவரத்து காவல்துறையினர், இத்தனை விதிமீறல்களுக்கு பெரிய தொகையை அபராதமாக கணக்கிட்டு, வாகனத்தை ஓட்டிவந்தவர் கையில் ஒப்படைத்ததோடு, ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். விதிமீறல்களுக்கு மொத்தமாக குறிப்பிட்ட ஆக்டிவா ஸ்கூட்டருக்கு ரூ.63,500 அபராதமாக விதித்தனர். 



    மேலும் விதிமீறியவர் மீது வழக்க தொடர்ந்து அபராத தொகையை பெற முடிவு செய்துள்ளோம். நீதிமன்ற உத்தரவு வரும் வரை காத்திருப்போம் என போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    மைசூருவில் புத்தம் புதிய ஹோன்டா ஆக்டிவா விலை ரூ.66,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் போக்குவரத்து காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ள ஹோன்டா ஆக்டிவா 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த ஸ்கூட்டரின் உரிமையாளர் குறித்த விவரங்கள் அறியப்படவில்லை. காவல் துறையினர் ஸ்கூட்டரின் உரிமையாளரை கண்டறியும் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் இத்தகைய அபராத தொகையை எவ்வாறு மீட்பது என்ற யோசனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #TrafficOfficers

    Source: Cartoq
    இந்திய ஸ்கூட்டர் விற்பனையில் ஹோன்டா அபார வளர்ச்சி பெற்று, இந்திய சந்தையில் முன்னணி இடத்தை பெற்றிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #HondaActiva
    இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் பிரிவில் ஸ்கூட்டர் விற்பனையில் ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. ஜூன் மாதத்துடன் நிறைவுற்ற காலாண்டில் ஹோன்டா நிறுவனம் மட்டும் 81% பங்குகளை பெற்றிருக்கிறது.

    அந்நிறுவன வரலாற்றிலேயே அதிகபட்ச வளர்ச்சி பெற்று ஹோன்டா நிறுவன ஸ்கூட்டர்கள் சந்தையில் 200 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த காலாண்டில் மட்டும் ஹோன்டா நிறுவனம் 9,04,647 ஆக்டிவா மாடல்களை விற்பனை செய்திருக்கிறது. இதே காலாண்டில் முன்னதாக இந்தியாவில் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிளாக இருந்த ஹீரோ ஸ்ப்லென்டர் 8,24,999 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    மோட்டார்சைக்கிள்களுக்கான தேவை அதிகரிக்கும் நிலையில், ஆக்டிவா தொடர்ந்து இந்தியாவில் முன்னணி இடத்தில் இருக்கிறது. இதே காலாண்டில் அதிகம் விற்பனையாகியிருக்கும் ஸ்கூட்டர், சுமார் 9 லட்சம் யூனிட்களை கடந்த ஒற்றை இருசக்கர வாகனமாக இருக்கிறது. மேலும் ஆக்டிவா மற்றும் ஸ்ப்லென்டர் யூனிட்களிடையே குறைந்த இடைவெளியாக பதிவாகியுள்ளது.


    முன்னதாக செப்டம்பர் 2017 காலாண்டில் 9,51,186 ஆக்டிவா யூனிட்கள் விற்பனையான நிலையில் 7,13,182 ஸ்ப்லென்டர் யூனிட்களே விற்பனையாகி இருந்தது. மே 2016-ம் ஆண்டு ஸ்ப்லென்டர் மாடலை பின்னுக்குத் தள்ளி ஹோன்டா ஆக்டிவா இந்திய சந்தையில் முதலிடத்தை பிடித்தது. 17 ஆண்டுகள் கழித்து இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையில் முதலிடத்தை ஹோன்டா நிறுவனம் பிடித்தது.

    "ஒரே காலாண்டில் சுமார் 18 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பது இதுவே முதல் முறையாகும். இதே காலாண்டில் ஆக்டிவா மட்டும் 40% வேகமான வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. இது ஒட்டுமொத்த சந்தையை விட வேகமானது," என ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு மூத்த துணை தலைவர் வை.எஸ். குலேரியா தெரிவித்திருக்கிறார்.  #HondaActiva
    ×