என் மலர்
நீங்கள் தேடியது "Honeybees"
- சவ ஊர்வலம் சென்ற சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தன.
- தேனீக்கள் கொட்டியதில் 40 பேர் கவுரி தேவி பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம், கன்னெரு கொய்யா பாடுவை சேர்ந்தவர் பல்லையம்மா (வயது 86). வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இறந்து விட்டார்.
நேற்று அவரது இறுதி சடங்குக்கான பணிகள் நடந்தன. இதையடுத்து உறவினர்கள் பல்லைய்யமாவின் பிணத்தை பாடையில் வைத்து தோளில் இடுகாட்டிற்கு சுமந்து சென்றனர்.
அப்போது சவ ஊர்வலத்தில் வந்தவர்கள் நடனமாடியபடி பட்டாசுகளை வெடித்தனர்.
சவ ஊர்வலம் சென்ற சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தன. சவ ஊர்வலத்தில் வெடித்த பட்டாசு பறந்து சென்று தேனி கூட்டில் விழுந்தது.
இதனால் கூடு கலைந்து தேனீக்கள் பறந்து வந்து சவ ஊர்வலத்தில் சென்றவர்களை விரட்டி, விரட்டி கொட்டின.
இதனால் வலி தாங்காத அவர்கள் பிணத்தை நடுரோட்டிலேயே போட்டுவிட்டு அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். மூதாட்டியின் பிணம் நீண்ட நேரம் நடுரோட்டிலேயே கிடந்தது.
தேனீக்கள் சென்ற பிறகு மாலை மூதாட்டியின் உறவினர்கள் வந்து அவரது பிணத்தை எடுத்துச் சென்று இடுகாட்டில் இறுதி சடங்கு செய்தனர்.
தேனீக்கள் கொட்டியதில் 40 பேர் கவுரி தேவி பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த 4 பேர் பத்ராசலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வன உரிமை சட்டத்தின் கீழ் தற்போது மலைவாழ் மக்களுக்கு விவசாய நிலங்களுக்கான பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
- தேனீ வளர்ப்பு வாயிலாக மலைவாழ் மக்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
உடுமலை :
ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனச்சரகத்தில் 13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் குறைந்த பரப்பில், விவசாயம் மேற்கொள்கின்றனர்.மேலும்வடுமாங்காய், சீமாறு புல் சேகரித்து சமவெளிப்பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்தும் வருகின்றனர்.வன உரிமை சட்டத்தின் கீழ் தற்போது அப்பகுதி மக்களுக்கு விவசாய நிலங்களுக்கான பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தங்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும் வகையில் வேளாண் சார்ந்த தொழில் துவங்க அரசு உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன் மலைவாழ் கிராமங்களில் சிறு, குறு தொழில்கள் மேற்கொள்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாதவனத்தோடு தொடர்புடைய தேனீ வளர்ப்பு வாயிலாக அப்பகுதி மக்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும் வாய்ப்புள்ளது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அப்போது கோவை வேளாண் பல்கலைக்கழகம் உதவியுடன், ஆட்டுமலை, பொருப்பாறு, கரட்டுப்பதி கிராமங்களைச்சேர்ந்த 50 பேருக்குதேனீ வளர்ப்பு பயிற்சியும், 30 பேருக்கு, தேனீ வளர்ப்பு பெட்டி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.இத்திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், அனைத்து மலைவாழ் கிராமங்களிலும், தேனீ வளர்ப்பு பயிற்சியும், உபகரணங்களையும் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.இதன் வாயிலாக நிரந்தர வருவாய் கிடைப்பதுடன், புதிதாக மேற்கொள்ளும் விவசாய சாகுபடிக்கும் உதவியாக இருக்கும். பாரம்பரியமாக தேன் சேகரிப்பில் அனுபவம் உள்ளதால், இத்தொழிலை தொடர்ந்து மேற்கொள்ளவும் முடியும் என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
- அட்மா திட்டத்தின் மூலம் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
- உதவி வேளாண்மை அலுவலர் சின்னராஜ் வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குநர் அருள்வடிவு சிறப்புரை ஆற்றினார்.
அவிநாசி :
அவிநாசி அருகேயுள்ள தெக்கலூர் ஊராட்சி, வெள்ளாண்டிபாளையத்தில் வேளாண்மைத்துறை சார்பில், 2022-23ம் ஆண்டிற்கான அட்மா திட்டத்தின் மூலம் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் தோட்டத்தில் தேன் பூச்சி பெட்டி வைத்து வளர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
உதவி வேளாண்மை அலுவலர் சின்னராஜ் வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குநர் அருள்வடிவு சிறப்புரை ஆற்றினார். தேனீ வளர்ப்பாளர் சதீஷ்குமார் செயல் விளக்கம் காண்பித்தார். மேலும் தேனீ வளர்ப்பினால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து உதவி வேளாண்மை அலுவலர் வினேத்குமார், வேளாண் திட்டங்கள் குறித்து வேளாண்மை அலுவலர் சுஜி ஆகியோர் பேசினர். அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரகாஷ் நன்றி கூறினார். இப்பயிற்சியில், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.