என் மலர்
நீங்கள் தேடியது "Hormone Balance"
- யோகா ஒட்டுமொத்த ஆரோக்கியத்தோடு தோற்றத்தையும் மேம்படுத்தும்.
- மன அழுத்தத்தை போக்கி, கூந்தல் நலனையும் மேம்படுத்துகிறது.
கூந்தலின் நிலையை வைத்தே நம்முடைய தினசரி அட்டவணை எப்படி இருக்கிறது என சொல்லிவிடலாம். அத்துடன், மன அழுத்தம், மோசமான வாழ்வியல் தெரிவுகள், மரபணு, மருந்துகள், ஹார்மோன் சமநிலையின்மை, கூந்தலில் அதிகளவில் ரசாயன பயன்பாடு ஆகியவை சேரும்போது, கூந்தல் மேலும் பாதிக்கப்படுவதில் வியப்பில்லை. யோகா ஒட்டுமொத்த ஆரோக்கியத்தோடு தோற்றத்தையும் மேம்படுத்தும்.
ஒரு சில யோகாசனங்கள் உச்சந்தலை, மயிர்க்கால்களுக்கான ரத்த ஓட்டத்தை சீராக்கி, கவலை, மன அழுத்தத்தை போக்கி, கூந்தல் நலனையும் மேம்படுத்துகிறது.

உஸ்த்ராசனா
உஸ்த்ரா என்றால் சமஸ்கிருதத்தில் ஒட்டகம் என்று பெயர். இந்த யோகாசனம் ஒட்டக போசில் இருக்கும். தரையில் முட்டி போட்டு, நன்றாக நிமிர்ந்து நிற்கவும். பின் பக்கம் வளைந்து, மேற்கூரையை பார்த்தபடி பாதங்களை பிடித்துக்கொள்ளவும். சில வினாடிகள் இதேநிலையில் இயல்பாக மூச்சு விட்டபடி இருக்கவும். மூச்சை இழுத்துவிட்டு ஆரம்ப நிலைக்கு வரவும். நான்கு அல்லது ஐந்து முறை செய்து ரிலாக்ஸ் ஆகவும்.
பலன்கள்
முதுகுத்தண்டு, கழுத்து ஆகியவை பலம் பெற்று, நெகிழ்வுத்தன்மையை பெறும். ஜீரண உறுப்புகள் நன்றாக வேலை செய்யும். மாதவிலக்கு சீராகும். உங்கள் தோற்றம் கம்பீரமாய் நடைபோடும். முதுகுத்தசை வலிமை பெறும். முதுகு வலி, இடுப்பு வலி ஆகியவை நீங்கும்.

உத்தனாசனா
கட்டைவிரல் உட்பட பாதங்கள், குதிக்கால், முழங்கால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கும் வகையில் கால்களை அருகாமையில் வைத்தபடி நேராக நிற்கவும். மூச்சை இழுத்துக்கொள்ளவும், வெளியே விடும் போது கைகளை மேலே தூக்கி கைவிரல்கள், உள்ளங்கை தரையில் படும் வகையில் முன் பக்கம் குனியவும். இதேபோல ஐந்து முறை செய்யவும்.
பலன்கள்
இது நரம்பியல் மண்டலத்தை சமநிலை செய்து, அமைதியை அளிக்கிறது. அதேசமயம் பின்புற வலி, கைகளில் வலி, உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று செய்யவேண்டும்.
- மங்கலான சிவப்பு ஒளி தரும் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.
- பிஸ்தாக்களில் வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது.
மூளையில் உள்ள ஒரு சிறிய சுரப்பி பினியல் சுரப்பி. இது மெலடோனின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன் உடலின் சர்க்காடியன் ரித சுழற்சியை ஒழுங்கு படுத்துகிறது.
சர்க்காடியன் ரிதம் என்பது நமது மூளையில் உள்ள 24 மணிநேர உடல் இயக்க கடிகாரமாகும். நமது உறக்கம்-விழிப்பு சுழற்சியை இது தீர்மானிக்கிறது. 'தூக்க ஹார்மோன்' என்று குறிப்பிடப்படும் மெலடோனின் இரவில் அதிக அளவிலும், பகலில் குறைந்த அளவிலும் சுரக்கிறது.

பினியல் சுரப்பி கண்களில் உள்ள விழித்திரையிலிருந்து ஒளி-இருட்டு (பகல்-இரவு) சுழற்சியைப் பற்றிய தகவலைப் பெறுவதால், அதற்கேற்ப மெலடோனினை வெளியிடுகிறது. ஒளியைக் கண்டறிய முடியாத பார்வைத் திறன் அற்றவர்களுக்கு பொதுவாக பழக்கத்தின் வாயிலாக சர்க்காடியன் ரிதம் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
மெலடோனின் அளவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
1) இரவில் நீல ஒளியை தவிர்த்து மங்கலான சிவப்பு ஒளி தரும் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.
2) படுக்கைக்கு போவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் பார்ப்பதைத் தவிர்க்கவும்.
3) இரவு ஷிப்டில் பணிபுரிந்தால் அல்லது இரவில் நிறைய எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தினால், நீல நிற ஒளியைத்தடுக்கும் கண்ணாடிகளை அணியவும், அல்லது இரவில் நீலம், பச்சை அலை நீளத்தை வடிகட்டக்கூடிய பாதுகாப்பு பட்டையை பயன்படுத்த வேண்டும்.

மெலடோனின் ஹார்மோனை அதிகரிக்கும் உணவுகள்:
1) டுனா மற்றும் எண்ணெய் சத்துள்ள மீன்கள், செர்ரி பழங்கள், வாழைப்பழம், முட்டை, பால், காளான் உணவுகள் போன்றவை மெலடோனின் சுரப்பை அதிகரிக்கும்.
2) பிஸ்தாவில் உள்ள பிஸ்டாசிஸ் இயல்பாக மெலடோனின் அளவை அதிகரிக்கிறது, இதை இரவில் தூக்கத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும். மற்றும் பிஸ்தாக்களில் வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது. இது டிரிப்டோபனை மெலடோனினாக மாற்ற உதவுகிறது. ஆனால் வறுத்து சாப்பிடக்கூடாது.
3) லாவெண்டரின் இனிமையான நறுமணம், சங்குபுஷ்ப மலர்கள் தூக்கத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.