search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hostage"

    • ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது.
    • இந்தப் போரை நிறுத்தும்படி உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தி வருகின்றன.

    ஜெருசலேம்:

    பாலஸ்தீனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு மேற்காசிய நாடான இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தியது.

    இதில், 1,200 பேரை கொன்றதுடன், அங்கு நடந்த இசைநிகழ்ச்சியில் பங்கேற்ற 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாகக் கடத்திச்சென்றது. அவர்களில் பலர் வெளிநாட்டினர்.

    இதைத் தொடர்ந்து அவர்களை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது.

    இதனால் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வசித்த அப்பாவி மக்கள் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்தப் போரை நிறுத்தும்படி உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    இதற்கிடையே, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை முற்றிலும் ஒழிக்கும்வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.

    இந்நிலையில், கடத்திச் செல்லப்பட்ட பிணைக்கைதிகளில் மேலும் ஒருவரை இஸ்ரேல் ராணுவம் பத்திரமாக மீட்டது.

    இதுவரை 8 பிணைக்கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர். ஹமாஸ் பயங்கரவாதிகளின் வசம் 100-க்கு மேற்பட்ட பிணைக்கைதிகள் இருப்பதாகவும், அதில் பலர் இறந்திருக்கலாம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • பல மணி நேரத்துக்கு பின்னர் பிணைக் கைதிகளில் 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.
    • கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    நெதர்லாந்தின் ஈத் நகரில் உள்ள இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.போலீசார் விரைந்து வந்து பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல மணி நேரத்துக்கு பின்னர் பிணைக் கைதிகளில் 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.

    அதன்பின் 4-வது நபரும் பத்திரமாக வெளியே வந்தார். இதுகுறித்து நெதர்லாந்து போலீசார் கூறும்போது, கடைசி பிணைக் கைதியும் விடுவிக்கப்பட்டார். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போதைய சூழலில் கூடுதல் விவரங்களை தெரிவிக்க இயலாது என தெரிவித்தனர்.

    இதற்கிடையே, இந்த சம்பவத்தில் பயங்கரவாத நோக்கம் இருப்பதாக சந்தேகிக்க எந்த காரணமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • கேளிக்கை விடுதியில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்.
    • அப்போது அங்கு ஆயுதங்களுடன் நுழைந்தவர் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தார்.

    ஆம்ஸ்டர்டாம்:

    நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் அருகே அமைந்துள்ள சிறிய நகரம் ஈடி. இந்நகரில் இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த கேளிக்கை விடுதியில் இன்று வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். அப்போது அந்த கேளிக்கை விடுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தார்.

    தகவலறிந்த அங்கு விரைந்து வந்த போலீசார் அருகிலுள்ள குடியிருப்புகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். தொடர்ந்து பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஜெர்மனியில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்துக் கொண்டதால் ரெயில் நிலையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Germany #Hostage
    பெர்லின்:

    ஜெர்மனி நாட்டில் மைன்ஸ் நகரில் உள்ள ரெயில் நிலையத்துக்கு பின்புறம் ஒரு மருந்துக்கடை உள்ளது. அதனுள் புகுந்த ஒரு மர்ம நபர், அங்கிருந்த ஒரு பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்துக் கொண்டார். இதனால், ரெயில் நிலையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் நிலையம் மூடப்பட்டது. ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    போலீசார் வந்து அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். அவர் லேசாக காயம் அடைந்து இருந்தார். மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். பயங்கரவாதத்துக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.  #Germany #Hostage 
    இந்தோனேஷியாவில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் மோதலில் சிறையிலிருந்த கைதிகள் 5 போலீஸ் அதிகாரிகளை கொன்று, ஒரு போலீஸ் அதிகாரியை பிணைக்கைதியாக சிறை பிடித்து வைத்துள்ளனர். #KilledFivePolice #Hostage #JailClash
    ஜகர்தா:

    இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் பார்வையாளர்கள் எடுத்து வரும் வெளி உணவுகளை போலீசார் சோதனை செய்துள்ளனர். இதற்கு சிறைக்கைதிகள் சிலர் கடும் எதிப்பு தெரிவித்துள்ளார்கள்.

    இதைத்தொடர்ந்து, போலீஸ் மற்றும் கைதிகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. சிறைக்கைதிகள் கூட்டாக சேர்ந்து 5 போலீஸ் அதிகாரிகளை கொலை செய்துள்ளனர். மேலும், ஒரு போலீஸ் அதிகாரியை பிணைக்கைதியாக சிறைப்பிடித்து வைத்துள்ளனர்.


    போலீசார் வைத்திருந்த ஆயுதங்களையும் கைதிகள் கைப்பற்றி வைத்துள்ளனர். இந்நிலையில், சிறைச்சாலை மோதலை கட்டுப்படுத்த இந்தோனேஷிய போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த திடீர் மோதலால் வெளியாட்கள் யாரும் சிறைச்சாலை அருகே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. #KilledFivePolice #Hostage #JailClash
    ×