என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hot temperature"

    • மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும்.
    • தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இருக்கும்.

    சென்னை:

    வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) இன்று வடக்கு, வடகிழக்கு திசையில் திரும்பி, மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும்.

    தென் தமிழகத்தை யொட்டிய கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களிலும் இன்று ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்று வெப்பம் 97 டிகிரி பாரன்ஹீட்டை யொட்டி இருக்கும்.

    தமிழகத்தில் நேற்று (புதன்கிழமை) காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 80 மி.மீ. மழை பதிவானது.

    தமிழகத்தில் நேற்று (புதன்கிழமை) அதிக பட்சமாக வேலூரில் 101.3, சேலத்தில் 100.76 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை மீனம்பாக்கத்தில் 101.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
    • நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    தமிழகத்தில் இன்று 10 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. இதில், அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

    தொடர்ந்து, ஈரோடு, சேலத்தில் 101.12 டிகிரி ஃபாரன்ஹீட், டிகிரி, கரூர் பரமத்தி, திருப்பத்தூரில் 102.2 டிகிரி வெப்பம் பதிவாகியுளளது.

    திருச்சியில் 100.22 டிகிரி, திருத்தணியில் 100.4 டிகிரி, தருமபுரி, மதுரையில் 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

    சென்னை மீனம்பாக்கத்தில் 101.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

    நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    • 2023ல் ஆங்காங்கு காடுகள் தீப்பற்றி எரிவதும், அதிகளவு வறட்சியும் அதிகரித்தது
    • புளோரிடா மாநிலத்தில் பவழ பாறைகள் வெள்ளை நிறமாக மாறின

    முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 2023ல் உலகளாவிய வெப்பநிலையில் கடும் மாற்றம் காணப்பட்டது.

    வல்லுனர்கள் நேரடியாக பூமியின் வெப்பத்தை கணக்கிட தொடங்கியதில் இருந்து 174 வருடங்களில் இத்தகைய வெப்பம் இருந்ததில்லை என்றும், நேரடியாக கணக்கிடாமல் அறிவியல்பூர்வமாக எடுக்கப்பட்ட சில கணக்கீடுகளின்படி 1,25,000 வருடங்களில் இந்த அளவு அதிக வெப்பம் ஏற்பட்டதில்லை எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

    ஆங்காங்கு காடுகள் தீப்பற்றி எரிவதும், அதிகளவு வறட்சியும் இவ்வருடம் அதிகரித்தது.

    அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் (Arizona) பல வாரங்களுக்கு அதிக வெப்பம் மக்களை வாட்டியது. வெப்பம், தொடர்ந்து 110 டிகிரிக்கு மேல் 31 நாட்களுக்கு நிலவியது.

    புளோரிடா (Florida) மாநிலத்தில் பவழ பாறைகள் வெள்ளை நிறமாக மாறி அதிக வெப்ப நீரினால் கரை ஒதுங்கின.

    சீனா, தெற்கு ஐரோப்பா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் உணரப்பட்டது.

    படிம எரிபொருள் (fossil fuel) பயன்படுத்துவதால் வெளியாகும் புகையினால் புவி வெப்பமயமாதல் அதிகரிப்பதை இதற்கு காரணமாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் இதற்கு தீர்வு காணவில்லை என்றால் எதிர்கால தலைமுறை இப்பூமியில் வாழ்வது கடினமாகி விடும் என புவியியல் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    ×