என் மலர்
முகப்பு » HTC Desire 12 Plus
நீங்கள் தேடியது "HTC Desire 12 Plus"
ஹெச்டிசி நிறுவனத்தின் டிசையர் 12 மற்றும் டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
ஹெச்டிசி நிறுவனத்தின் டிசையர் 12 மற்றும் டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு டிசையர் ஸ்மார்ட்போன்களில் முறையே 5.5 இன்ச் மற்றும் 6.0 இன்ச் ஹெச்டி பிளஸ் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளேக்கள் கொண்டுள்ளன.
டிசையர் 12 ஸ்மார்ட்போன் மீடியாடெக் MT6739 சிப்செட் 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம், 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஹெச்டிசி டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 450, 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம், 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் லிக்விட்-சர்ஃபேஸ் டிசைன் மற்றும் கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது.
ஹெச்டிசி டிசையர் 12 சிறப்பம்சங்கள்:
- 5.5 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
- பவர் விஆர் ரோக் GE8100 GPU
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் சார்ந்த ஹெச்டிசி சென்ஸ் UI
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, PDAF, BSI சென்சார்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2730 எம்ஏஹெச் பேட்டரி
ஹெச்டிசி டிசையர் 12 பிளஸ் சிறப்பம்சங்கள்:
- 6.0 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்ன்ப்டிராகன் 450 பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 நௌக்கட் சார்ந்த ஹெச்டிசி சென்ஸ் UI
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, PDAF, BSI சென்சார்
- 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, எல்இடி ஃபிளாஷ்
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2965 எம்ஏஹெச் பேட்டரி
ஹெச்டிசி டிசையர் 12 மற்றும் டிசையர் 12 பிளஸ் ஸ்மார்ட்போன்கல் கூல் பிளாக் மற்றும் வார்ம் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.15,800 மற்றும் ரூ.19,790 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஜூன் 7-ம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முலம் விற்பனை செய்யப்படுகிறது.
×
X