search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "human chain protest"

    • தமிழக அரசு உடனடியாக டி.என்.டி. என்ற ஒற்றைச் சாதி சான்றுகளை வழங்கக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
    • 68 சாதிகளுக்கு உடனடியாக தற்போது வழங்கப்பட்டு வரும் இரட்டைச் சாதி சான்றிதழை ஒழித்து டி.என்.டி. என்ற சான்றிதழ் மட்டும் வழங்க வேண்டும்

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள எம்.குரும்பபட்டி, மல்லனம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சீர் மரபினர் நல சங்கம் சார்பாக தமிழக அரசு உடனடியாக டி.என்.டி. என்ற ஒற்றைச் சாதி சான்றுகளை வழங்கக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    இந்தப் போராட்டத்தில் தமிழக அரசு பல ஆண்டுகளாக போராடி வரும் கள்ளர், முத்தரையர், வலையர், உள்ளிட்ட 68 சாதிகளுக்கு உடனடியாக தற்போது வழங்கப்பட்டு வரும் இரட்டைச் சாதி சான்றிதழை ஒழித்து டி.என்.டி. என்ற சான்றிதழ் மட்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    • ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    பவானி:

    பவானி-மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ள தாசில்தார் அலுவலக வளாகத்தின் நுழைவாயில் பகுதியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நிதி நிலை அறிக்கையில் எந்த ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தலைமை வகித்தார். பவானி தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். புதிய முரண்பாட்டைகளைதல், காலி பணியிடங்களை நிரப்புதல், கால முறை ஊதியம் வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இதனைத்தொடர்ந்து பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தின் நுழைவாயில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் ஜாக்டோ ஜியோவுக்கு உட்பட்ட அரசு ஊழியர் சங்கம், வருவாய்த்துறை, ஆசிரியர் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ் சாலை துறை, சத்துணவு ஊழியர் சங்கம் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அந்தியூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலி–யுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயேந்திரன் தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில்

    பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். அக விலைப்படி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் அந்தியூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து போலீஸ் நிலையம் வரை அரசு ஊழியர்கள் மனித சங்கிலியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பாலு, சிவகுமார், ஆனந்தகுமார், ரமேஷ்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • 12 மணி அளவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து கைக்கோர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

    அதானி குழுமம் பங்கு மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக மோசடியில் ஈடுபட்டதாகவும், இதற்காக வெளிநாட்டு போலி நிறுவனங்களை பயன்படுத்தியதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரியில் குற்றம் சாட்டின.

    இதன் எதிரொலியாக அதானி குழும பங்குகள் பெரும் அளவில் சரிவடைந்தன.

    அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

    பொது மக்களின் பணம் தொடர்புடைய இந்த குற்றச்சாட்டு குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    கடந்த ஜனவரி 31-ல் தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வில் அதானி விவகாரம் வலுவாக எதிரொலித்தது. கடந்த திங்கட்கிழமை தொடங்கிய 2-வது கட்ட அமர்விலும் இந்த விவகாரத்தால் இரு அவைகளும் முடங்கி வருகிறது.

    அதானி குழுமம் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்த விரிவான விசாரணை நடத்த கோரி அமலாக்கத் துறை அலுவலகத்தில் புகார் கொடுக்க எதிர்கட்சியினர் நேற்று முடிவு செய்தனர்.

    பாராளுமன்ற வளாகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக புறப்பட்டனர். 144 தடை உத்தரவு அமலில் உள்ளதை சுட்டிக்காட்டி விஜய் சவுக் பகுதியில் எதிர்கட்சி எம்.பி.க்களான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இந்நிலையில் எதிர்கட்சி எம்.பி.க்கள் இன்றும் ஆலோசனை நடத்தினர். பாராளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பு மேல்சபை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் காங்கிரஸ், தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்டீரிய ஜனதா கட்சி, பாரத் ராஷ்டீரிய சமிதி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ம.தி.மு.க., ஆம். ஆத்மி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 15 எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை சுற்றி எதிர்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஜனநாயகத்தை காப்பாற்றுவோம் என்ற செய்தியை முன் வைத்து இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எதிர்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    அதைத்தொடர்ந்து 12 மணி அளவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து கைக்கோர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

    இந்த கூட்டத்துக்கு பிறகு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறும் போது 'அதானி விவகாரத்தை தடுக்கவே மத்திய அரசு பாராளுமன்றத்தை நடத்த விடவில்லை. நாங்கள் அமைதியாக நேற்று போராட்டம் நடத்தினோம் எங்களை தடுத்துவிட்டனர் என்றார்.

    • நிலக்கோட்டையில் சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
    • வி.சி.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி போராட்டம் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் போது ராஜன் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக விடுதலைச் சிறுத்தை கட்சியின் நிலக்கோட்டை தொகுதி செயலாளரும், முசுவனூத்து ஊராட்சி மன்றத் தலைவருமான ஜெயபிரகாஷ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    மனிதச் சங்கிலி நிலக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து பெரியகுளம் வத்தலகுண்டு ரோட்டில் போலீஸ் நிலையம் வரை நடைபெற்றது. போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் கோகுல்நாத், திராவிட கழக ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், ம.தி.மு.க ஒன்றிய செயலாளர் ராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் திருப்பதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சவுந்தர்ராஜன்,

    மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது ரிஜால், எஸ். டி. பி. ஐ கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தக்பீர் அலி, டிசம்பர் 3 இயக்க ஆதித்தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் சிவ முருகேசன், மாநில செயலாளர் மோகன்ராஜ், தமிழ் புலிகள் கட்சி ஒன்றிய பொறுப்பாளர் அழகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நல்லாற்றின் குறுக்கே நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது.
    • குளத்தின் நிலத்தை, நீர்நிலையாக வகை மாற்றம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவில் 440 ஏக்கர் பரப்பளவில், நல்லாற்றின் குறுக்கே நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. குளத்தின் அருகே உள்ள 9 ஏக்கர் நிலத்தை தனியார் அறக்கட்டளைக்கு அரசு விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அரசு நிலம் விற்பனை செய்ததை ரத்து செய்து குளத்தின் நிலத்தை, நீர்நிலையாக வகை மாற்றம் செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கம் சார்பில் குளத்தை பாதுகாக்க கோரி மனித சங்கிலி போராட்டம் நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கையை வலியுறுத்தினர்.

    பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது. #Arputhammal #HumanChainProtest
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளவன் உள்பட 7 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தமிழக கவர்னரிடம் மனு கொடுத்தார். ஆனால், இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
     
    அற்புதம்மாள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று 7 பேரின் விடுதலை குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    இதற்கிடையே, 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி சென்னை உள்பட 7 நகரங்களில் மனித சங்கிலி போராட்டத்துக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அழைப்பு விடுத்திருந்தார். 

    இந்நிலையில், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தி சென்னையில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது.



    சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மனித சங்கிலி போராட்டம் இன்று தொடங்கியது. இந்த போராட்டத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பங்கேற்றார். திராவிடர் கழகம், திருமாவளவன், இடதுசாரிகள், திராவிடர் விடுதலைக்கழகம், இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்டவை இதில் பங்கேற்றன.  

    பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க.வின் வெற்றிவேல், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இதேபோல், புதுச்சேரி, சேலம், மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. #Arputhammal #HumanChainProtest
    சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில், பெண்களின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி, கேரளாவில் நாளை மாலை 4 மணிக்கு பெண்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறார்கள். #Sabarimalai #AyyappaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில், பெண்களின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி, கேரளாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு பெண்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறார்கள். ‘பெண்கள் சுவர்’ எனப்படும் இப்போராட்டம், கேரளாவின் வட எல்லையான காசர்கோடில் தொடங்கி, தலைநகர் திருவனந்தபுரம் வரை நடக்கிறது.

    மேற்கண்ட 620 கி.மீ. தூரத்துக்கு பெண்கள் மனித சங்கிலியாக நிற்க உள்ளனர்.

    நடிகை சுகாசினி, ஒவ்வொரு பெண்ணும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும், நடிகைகள் பார்வதி திருவோத், ரீமா கலிங்கல், கீது மோகன்தாஸ், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். #Sabarimalai #AyyappaTemple

    ×