என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்
- ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
பவானி:
பவானி-மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ள தாசில்தார் அலுவலக வளாகத்தின் நுழைவாயில் பகுதியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நிதி நிலை அறிக்கையில் எந்த ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தலைமை வகித்தார். பவானி தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். புதிய முரண்பாட்டைகளைதல், காலி பணியிடங்களை நிரப்புதல், கால முறை ஊதியம் வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தின் நுழைவாயில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் ஜாக்டோ ஜியோவுக்கு உட்பட்ட அரசு ஊழியர் சங்கம், வருவாய்த்துறை, ஆசிரியர் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ் சாலை துறை, சத்துணவு ஊழியர் சங்கம் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அந்தியூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலி–யுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயேந்திரன் தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில்
பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். அக விலைப்படி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் அந்தியூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து போலீஸ் நிலையம் வரை அரசு ஊழியர்கள் மனித சங்கிலியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பாலு, சிவகுமார், ஆனந்தகுமார், ரமேஷ்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்