என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Human Justice Day"
- முத்தூர் - கொடுமுடி சாலை சிவகங்கா திருமண மண்டபத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொள்கிறார்.
காங்கயம் :
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மனுநீதி நாள் முகாம் முத்தூர் - கொடுமுடி சாலை சிவகங்கா திருமண மண்டபத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முகாமிற்கு கலெக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்குகிறார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, பஸ் வசதி, சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொள்கிறார்.
மேலும் முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வருவாய் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், பின்னாவரம் ஊராட்சி, சேந்தமங்கலம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் நடைபெற்றது. வருவாய் கோட்டாச்சியர் பாத்திமா கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.அரக்கோணம் வட்டாச்சியர் பழனிராஜன் உடனிருந்தார்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர் இந்த சிறப்பு மனுநீதி முகாமில் முதியோர் உதவித்தொகை புதிய ஸ்மார்ட் கார்ட் பட்டா மாற்றம் போன்றவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.