என் மலர்
நீங்கள் தேடியது "Hybrid Model"
- பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
- அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான காரணங்களால் இரு அணிகளும் நேரடி தொடரில் மோதுவதில்லை.
ராவல்பிண்டி:
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. பாகிஸ்தான், இந்தியா உட்பட எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இந்த தொடருக்காக இந்தியா அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது இன்னும் வரை கேள்வி குறியாகவே உள்ளது.
கடைசியாக இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2008-ல் பாகிஸ்தானில் விளையாடி இருந்தது. அதன் பிறகு அங்கு சென்று விளையாடவில்லை. இரு அணிகளுக்கு இடையிலான நேரடி தொடர் அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான காரணங்களால் நடைபெறுவதில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடி வருகிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடுவதற்காக ஹைபிரிட் மாடல் நடைமுறைப்படுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஜார்ஜா அல்லது சவுதி அரேபியாவில் நடைபெறும் என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
- இந்தியாவை இப்படி அதிகாரம் மற்றும் பணத்தால் தோற்கடிக்க முடியாது.
- இந்தியாவுக்கு நாம் சென்று அவர்களை வீழ்த்த வேண்டும்.
பாகிஸ்தான் மண்ணில் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. 2008-க்குப்பின் எல்லைப் பிரச்சனை காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா 2023 ஆசியக் கோப்பையில் தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடியது.
அதே போல இம்முறை தங்களுடைய சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு கோரிக்கை வைத்துள்ளது. இந்தியா விரும்பியது போல 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை ஹைபிரிட் மாடலில் நடத்துவதற்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக சமீபத்திய செய்திகள் காணப்படுகிறது. -
இந்நிலையில் இந்தியாவுக்கு சென்று அவர்களை அவர்களது மக்கள் முன்னிலையில் சொந்த மண்ணில் பாகிஸ்தான் வீழ்த்துவதே சரியான பதிலடி மற்றும் பழிக்கு பழியாக இருக்கும் என்று அக்தர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
ஒரு தொடரை நடத்தும் போது அதற்காக நீங்கள் வருமானத்தைப் பெறுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்கிறேன். எனவே பாகிஸ்தானின் தற்போதைய நிலைப்பாடு நியாயமானது. அவர்கள் தங்களுடைய நிலையில் வலுவாக இருக்க வேண்டும்.
இந்தியாவை இப்படி அதிகாரம் மற்றும் பணத்தால் தோற்கடிக்க முடியாது.
சாம்பியன்ஸ் டிராபியை நம் நாட்டில் நடத்த முடிந்தவுடன் இந்தியா வர விரும்பவில்லை என்றால் அவர்கள் வருவாயை எங்களுடன் அதிக விகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது நல்ல அழைப்பு. அதே சமயம் இந்தியாவில் நாம் வருங்காலங்களில் நட்புடன் விளையாட வேண்டும்.
என்னுடைய நம்பிக்கை எப்போதும் என்னவெனில் இந்தியாவுக்கு நாம் சென்று அவர்களை வீழ்த்த வேண்டும். இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்க வேண்டும். சாம்பியன்ஸ் ட்ராபி ஹைபிரிட் மாடலில் நடைபெறுவது ஏற்கனவே கையெழுத்து ஆகிவிட்டது என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.
என்று கூறினார்.
- 2024-2027 வரை இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி. தொடர்களிலும் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஐ.சி.சி.யின் இந்த முடிவை இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
9- வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) போட்டி பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர், ராவல் பிண்டியில் நடத்தப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து (ஏ பிரிவு) ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கிறது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகியவை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன.
பாதுகாப்பு காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.
இதை பாகிஸ்தான் ஏற்காமல் நீண்ட நாட்களாக பிடிவாதமாக இருந்து வந்தது. இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களை பொதுவான இடத்தில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது. இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்தது.
இதேபோல 2024-2027 வரை இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி. தொடர்களிலும் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது போன்றே அந்த தொடர்களிலும் பாகிஸ்தானுக்கு உரிய ஆட்டங்கள் பொதுவான மைதானத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவுக்கான ஆட்டத்தை பொதுவான இடத்தில் ஹைபீரிட் மாடலில் நடத்த ஒப்புக்கொண்டதற்காக பாகிஸ்தானுக்கு ஐ.சி.சி. நஷ்டஈடு வழங்கியது. அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. மூலம் ரூ.38 கோடி கிடைக்கும்.
ஐ.சி.சி.யின் இந்த முடிவை இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஹைபிரிட் மாடலில் நடத்துவதற்கு பாகிஸ்தானுக்கு எந்த பண இழப்பும் ஏற்பட போவதில்லை. பொதுவான இடத்தில் நடத்த ஒப்புக்கொண்டதற்காக ரூ.38 கோடி கொடுப்பது தொடர்பாக ஐ.சி.சி. விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.