search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ian Chappell"

    • இந்தியா ஒரு வலிமையான அணியாகும்.
    • மோசமான பேட்டிங் காரணமாகவே ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோர் காயத்தால் விளையாடவில்லை. இருவரும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர். அதே நேரத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய 3 டெஸ்டில் ஆட வில்லை.

    இந்த நிலையில் கே.எல்.ராகுல், ஜடேஜா வருகையால் இந்திய அணி வலிமை பெறும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்தியா ஒரு வலிமையான அணியாகும். அவர்களுக்கு திறமையான கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். காயத்தில் இருந்து குணமடைந்த ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். இருவரும் இந்திய அணியை வலிமைப்படுத்துவார்கள்.

    ஆனால் விராட்கோலி எஞ்சிய 3 டெஸ்டிலும் விளையாடமாட்டார் என்பது இந்திய அணிக்கு இழப்பே. தேர்வு குழுவினர் ஷ்ரேயாஸ் அய்யரின் பேட்டிங் திறமையை மிகைப்படுத்தி மதிப்பிடுவதை நிறுத்திவிட்டு, குல்தீப் யாதவின் பந்துவீச்சு திறனை அதிகமாக மதிப்பிட கற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு இயன் சேப்பல் கூறியுள்ளார்.

    மோசமான பேட்டிங் காரணமாகவே ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    • அஸ்வின் ஆஸ்திரேலியாவிலும் அபாரமாக பந்து வீசி இருந்தார்.
    • அஸ்வினை போல முயற்சிக்காமல் நாதன் லயன் தனது ஸ்டைலில் பந்துவீச வேண்டும்.

    சிட்னி:

    பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவும் அமைந்துள்ளனர். இருவரும் இதுவரையில் 31 விக்கெட்டுகளை இந்தத் தொடரில் வீழ்த்தி உள்ளனர். ஜடேஜா 17 விக்கெட்டுகளும், அஸ்வின் 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளனர்.

    அஸ்வின் மற்றும் ஜடேஜாவை போல ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் முயற்சிக்க வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். 'நீங்கள் நீங்களாகவே இருங்கள்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:- 

    இந்தியாவில் விளையாடும்போது எதிரணியினர் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவை போல பந்துவீச முயற்சிப்பார்கள். அவர்கள் இருவருக்கும் இந்தியாவில் எப்படி பந்துவீச வேண்டும் என்பது நன்கு தெரியும். அஸ்வின் ஒரு ஸ்மார்ட்டான பவுலர். அவர் ஆஸ்திரேலியாவிலும் அபாரமாக பந்து வீசி இருந்தார். அவர் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார். ஜடேஜா தனது பவுலிங் திறனை மேம்படுத்திக் கொண்டுள்ளார்.

    டெல்லி டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அபாரமாக பந்து வீசி இருந்தார். ஆனாலும், ஜடேஜா அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். சில நேரங்களில் அப்படி நடக்கும். களத்தில் அவர்கள் செய்வதை உங்களால் (ஆஸி. வீரர்கள்) செய்ய முடியாது. அஸ்வினை போல முயற்சிக்காமல் நாதன் லயன் தனது ஸ்டைலில் பந்துவீச வேண்டும்.

    என சேப்பல் தெரிவித்துள்ளார்.

    • ரிஷப் பந்த் ஒவ்வொரு போட்டியிலும் இந்த உலகக் கோப்பையில் ஆடியிருக்க வேண்டும்.
    • சில வேளைகளில் அணித் தேர்வாளர்கள் உள்நாட்டு கிரிக்கெட் பார்மை வைத்து வீரர்களை தேர்வு செய்கின்றனர்.

    சிட்னி:

    8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்னும் 4 லீக் ஆட்டங்களே உள்ளன. இந்நிலையில் இதுவரை நியூசிலாந்து அணி மட்டுமே அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

    இந்திய அணி தனது கடசி லீக் ஆட்டத்டில் ஜிம்பாப்வே அணியை எதிர் கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் தனது பிரிவில் முதல் இடம் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறும். இந்திய அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றி ( பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம் ) , 1 தோல்வி ( தென் ஆப்பிரிக்கா) எடுத்துள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்ய வேண்டும் என இயன் சேப்பல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டிம் டேவிட் சர்வதேச அளவில் என்ன செய்து விட்டார்? சில வேளைகளில் அணித் தேர்வாளர்கள் உள்நாட்டு கிரிக்கெட் பார்மை வைத்து வீரர்களை தேர்வு செய்கின்றனர்.

    இதற்கு ஒரு சிறந்த உதாரணம் இந்தியா, அவர்கள் ரிஷப் பந்த்திற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை பிளேயிங் லெவனில் தேர்வு செய்கின்றனர். இது பெரிய முட்டாள்தனம், நான் என்ன சொல்கிறேன் என்றால் ரிஷப் பந்த் ஒவ்வொரு போட்டியிலும் இந்த உலகக் கோப்பையில் ஆடியிருக்க வேண்டும்.

    மேலும், அந்தப் பேட்டியில் டிம் டேவிட்டை பற்றி கூறும்போது, உள்நாட்டு கிரிக்கெட்டில் தனியார் லீக்குகளில் மணிக்கு 120 கிமீ வேகம் வீசும் பவுலர்களை விளாசுவதை வைத்து சர்வதேச போட்டிகளுக்கு தேர்வு செய்தால் அங்கு மணிக்கு 150 கிமீ வேகம் வீசும் பவுலர்களை எப்படி அடிக்க முடியும்.

    அதனால் தான் சில சர்வதேசப் போட்டிகளையாவது ஆடவிட்டு பிறகு உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் ஒரு வீரரைத் தேர்வு செய்ய வேண்டும். மணிக்கு 150 கிமீ வேகம் வீசும் பவுலர்களை இஷ்டத்துக்கு விளாசுவதெல்லாம் சுலபமானதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

    உலகின் பல வீரர்கள் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் வல்லவராக இருந்தாலும் டோனி தான் அதில் சிறந்தவர் என இயன் சேப்பல் கூறியுள்ளார். #MSDhoni #IanChappell
    புதுடெல்லி:

    இரண்டு உலக கோப்பையை வென்று இந்திய அணிக்கு பெருமை சேர்ந்தவர் டோனி.

    2007-ம் ஆண்டு அறிமுக 20 ஓவர் உலககோப்பையும், 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலககோப்பையும் அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

    இந்திய அணியின் 3 நிலைக்கு கேப்டனாக ஜொலித்த டோனி 2014-ம் ஆண்டு இறுதியில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகி அணியில் மட்டும் ஆடி வந்தார்.

    கடந்த ஆண்டு அவரது பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் உலககோப்பை அணியில் அவர் தேவையா? என்ற விவாதம் எழுந்தது.

    ஆனால் இந்த ஆண்டு டோனியின் தொடக்கமே அமர்களமாக இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்ற டோனியின் ‘பேட்டிங்’ முக்கிய பங்கு வகித்தது.

    3 ஆட்டத்திலும் சேர்த்து 192 ரன்கள் குவித்தார். மூன்றிலும் அரைசதம் எடுத்து முத்திரை பதித்தார். இந்த சிறப்பான ஆட்டம் மூலம் அவர் தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார்.

    உலககோப்பை அணியில் அவர் இடம் பெறுவதை யாராலும் இனி தடுக்க இயலாது.

    இந்த நிலையில் ஒருநாள் போட்டியில், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் இன்னும் உலகின் சிறந்த வீரராக டோனி இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான இயன் சேப்பல் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலகின் பல வீரர்கள் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் வல்லவராக இருந்தாலும் டோனி தான் அதில் சிறந்தவர். டோனி ஆட்டத்தை முடிக்கும் திறமையில் இருக்கும் போது யாராலும் தடுக்க இயலாது.

    அவரது ஷாட்டுகள் மிகவும் அதிரடியாக இருக்கும். அவர் தனது தந்திரமான ஆட்டத்தை சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிறப்பாக கையாள்வதை பலமுறை நிரூபித்துவிட்டார்.



    ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் பெவன் 6-வது வீரராக களம் இறங்கி ஆட்டத்தை சிறப்பாக நிறைவு செய்வார். ஆனால் அவரையும் விட சிறந்தவராக டோனி இருக்கிறார்.

    பெவன் பவுண்டரி மூலம் தான் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பார். டோனி சிக்கர் மூலம் ஆட்டத்தின் தன்மையை மாற்றி வெற்றி பெற வைப்பார். விக்கெட்டுகளுக்கு இடையே ரன் எடுக்க ஓடுவதில் டோனி வல்லவர். 37 வயதிலும் அவரால் ரன் எடுக்க வேகமாக ஓட முடிகிறது. ஒருநாள் போட்டியில் டோனியின் ஆட்டம் மேம்பட்டு இருப்பதற்கு 20 ஓவர் போட்டியில் ஆடுவது காரணம். புள்ளி விவரப்படி டோனி தான் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் உலகின் சிறந்த வீரர்.

    இவ்வாறு இயன் சேப்பல் கூறியுள்ளார். #MSDhoni #IanChappell
    இந்திய அணியின் சிறந்த பேட்டிங் இது என்று சொல்ல மாட்டேன். மெச்சத்தகுந்த பேட்டிங்கை முந்தைய இந்திய அணிகளில் பார்த்து இருக்கிறேன் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கூறினார். #IanChappell #AUSvIND
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ‘ஆஸ்திரேலியாவை தோற்கடித்த விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணியை, எல்லா காலத்திலும் சிறந்த இந்திய அணியாக நினைக்கிறீர்களா?’ என்று கேட்கப்பட்டது.

    அதற்கு சேப்பல் கூறுகையில், ‘நான் பார்த்தமட்டில், சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட இந்திய அணி இது தான். பீல்டிங்கிலும் இதே போல் சொல்ல முடியும். ஆனால் பேட்டிங்கில் சிறந்தது என்று சொல்ல மாட்டேன். தற்போதைய அணியில் இருப்பதை விட மெச்சத்தகுந்த பேட்டிங்கை முந்தைய இந்திய அணிகளில் பார்த்து இருக்கிறேன்.

    ஆஸ்திரேலிய தொடரில் இந்திய பந்து வீச்சாளர்கள் உண்மையிலேயே அபாரமாக செயல்பட்டனர். ஆஸ்திரேலிய பவுலர்களை விட அதிகமாக ‘ஸ்விங்’ செய்தனர்’ என்றார். #IanChappell #AUSvIND

    பென் ஸ்டோக்ஸிடம் இருந்து கற்றுக் கொண்டால் நிலைநாட்டிக் கொள்ள முடியும் என ஹர்திக் பாண்டியாவிற்கு இயன் சேப்பல் அறிவுரை கூறியுள்ளார். #HardikPandya
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று நான்கு நாட்களில் முடிவடைந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

    இதில் இங்கிலாந்தின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் முதல் இன்னிங்சில் 21 ரன்னும், 2-வது இன்னிங்சில் 6 ரன்களும் எடுத்தார். ஆனால், முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்திய அவர், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா முதல் இன்னிங்சில் 10 ஓவரில் 46 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் கைப்பற்றவில்லை. 2-வது இன்னிங்சில் ஓவர் வீசவில்லை. முதல் இன்னிங்சில் 22 ரன்களும், 2-வது இன்னிங்சில் 31 ரன்களும் அடித்தார்.

    இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா, அவரை நிலைநாட்டிக் கொள்ள பென் ஸ்டோக்ஸிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று இயன் சேப்பல் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘இந்திய அணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை தேடும் பணி இன்னும் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. ஆனால், விராட் கோலியுடன் இணைந்து 2-வது இன்னிங்சில் ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ஹர்திக் பாண்டியாவை 6-வது இடத்தில் களம் இறக்கினால், அவருக்கு பேட்டிங்கில் நம்பிக்கை அதிகரிக்கும். அத்துடன் பென் ஸ்டோக்ஸின் பந்து வீச்சை பார்த்து அதில் இருந்து பலன் அடைய முடியும். இது இந்த தொடரில் அவரை சிறந்த ஆல்ரவுண்டாக நிலைநாட்ட உதவும்’’ என்றார். #HardikPandya
    இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா தொடரை வெல்ல அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என இயன் சேப்பல் கூறியுள்ளார். #ENGvIND
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி உள்ளூர் தொடரை சிறப்பாக முடித்து வெளிநாட்டு தொடர்களில் விளையாட தொடங்கியுள்ளது. முதல் தொடராக தென்ஆப்பிரிக்கா சென்றது. அதில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-2 இழந்தது.

    விரைவில் இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்பின் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த இரண்டு தொடர்களையும் இந்தியா கைப்பற்ற அபூர்வ வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலியா முன்னாள் வீரரும், கிரிக்கெட் விமர்சகரும் ஆன இயன் சேப்பல் கூறியுள்ளார்.

    இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடி தொடரைக் வெல்ல அரிய வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து லார்ட்ஸ் டெஸ்டில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதன்பின் ஹெட்டிங்லேயில் வெற்றி பெற்றது. அந்த அணி சீரான நிலைத்தன்மையுடன் இல்லாமல் உள்ளது.



    தற்போது இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்புவது தற்போது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அலஸ்டைர் குக்கின் இரண்டு இரட்டை சதங்கள் அவருடைய உண்மையான முகத்தை மறைக்க முடியாது. கடந்த 12 மாதங்களில் 29 இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இதில் 19 முறை 20 ரன்களுக்கு கீழ் எடுத்து்ளளார். 10 முறை ஒற்றையிலக்க ரன்னாகும்.

    தொடக்க பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனில், எதிரணி பந்து வீச்சாளர்கள் புதுப்பந்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை நிலைத்து நின்று விளையாட விடமாட்டார்கள்’’ என்றார்.
    ×