என் மலர்
நீங்கள் தேடியது "ICC T20I Rankings"
- டி20 பந்து வீச்சாளர் தரவரிசையை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டது.
- இந்திய அணியில் இவர் மட்டுமே டாப் 10-ல் உள்ளார்.
ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான டி20 பந்து வீச்சாளர் தரவரிசையை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் நீடித்த ரஷித்கானை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் முதல் இடத்தை பிடித்தார்.
பிஷ்னோய் 699 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தார். ரஷித்கான் 692 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியில் இவர் மட்டுமே டாப் 10-ல் உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய ரவி பிஷ்னோய் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டர்கள் தரவரிசையில் 56 இடங்கள் முன்னேறி 7ம் இடத்தை பிடித்தார் இந்திய இளம் வீரர் ருதுராஜ். முதலிடத்தில் சூர்யகுமாரும், இரண்டாம் இடத்தில் முகமது ரிஸ்வானும் உள்ளனர்.
- ஆடம் ஜாம்பா, ஹசரங்கா,ஆதில் ரஷித் ஆகியோர பின்னுக்கு இவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.
- டாப் 10-ல் 2 இந்திய பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.
டி20 தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். 3 இடங்கள் முன்னேறி அக்கேல் ஹோசின் முதல் இடத்தை பிடித்த்ள்ளார்.
அந்த பட்டியலில் ஆடம் ஜாம்பா, ஹசரங்கா,ஆதில் ரஷித் ஆகியோர பின்னுக்கு இவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.
டாப் 10-ல் 2 இந்திய பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அந்த வகையில் 2 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை ரவி பிஸ்னோய் பிடித்துள்ளார். மற்றொரு பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 1 இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.