search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICC Women T20 World Cup"

    • நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 56 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • இதன்மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி- நியூசிலாந்து மகளிர் அணி மோதியது. இதில் முதலில் விளையாடிய நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 56 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் இப்போட்டியில் படுதோல்வியைச் சந்தித்துள்ள பகிஸ்தான் அணி மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. அதன்படி மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2-வது இரண்டாவது குறைந்த ஸ்கோரை அடித்த அணி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது.

    முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக வங்கதேச அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே மோசமான சாதனையில் முதல் இடமாக உள்ளது.

    அதேசமயம் இப்போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நியூசிலாந்து மகளிர் அணி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் டி20 உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. இதற்கு முன் நியூசிலாந்து அணி கடந்த 2016-ம் ஆண்டு அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. 

    ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. #WT20
    ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா வீராங்கனைகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை டெனியல் வியாட் 43 ரன்களும், கேப்டன் நைட் 25 ரன்களும் அடித்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற இங்கிலாந்து 19.4 ஓவரில் 105 ரன்னில் சுருண்டது.



    பின்னர் 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீராங்கனைகள் ஹீலி (22), மூனே (14) சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அதன்பின் வந்த கார்ட்னெர் 33 ரன்களும், கேப்டன் லேனிங் 28 ரன்களும் அடிக்க 15.1 ஓவரில் 2விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 4-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது.
    ×