search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICICI"

    • ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரியை கடன் மோசடி வழக்கில் சி.பி.ஐ. கைதுசெய்தது.
    • இந்த வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத் துறையினால் சாந்தா கோச்சார் கைது செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் செயல்பட்டவர் சாந்தா கோச்சார். இவரது கணவர் தீபக் கோச்சார்.

    இதற்கிடையே, 2009 முதல் 2011 வரையில் பதவியில் இருந்த காலத்தில் சாந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்திற்கு 1,875 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது. அந்த கடன் தொகை சாந்தா கோச்சாரின் கணவர் நடத்தி வந்த நுபவர் சுப்ரீம் எனர்ஜி என்ற நிறுவனத்திற்கு பல்வேறு தவணைகளாக மாற்றப்பட்டது. மேலும், வீடியோகான் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட கடன் திரும்பி வராத கடனாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஐசிஐசிஐ வங்கிக்கு 1,730 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக கடந்த 2018- ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி, நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து சாந்தா கோச்சார் விலகினார்.

    இதனை தொடந்து வீடியோகான் கடன் மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத் துறையினால் சாந்தா கோச்சார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    இந்நிலையில், தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி கடன் மோசடி செய்த வழக்கில் ஐசிஐசிஐ முன்னாள் தலைமை செயல் இயக்குனர் சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சாரை சிபிஐ அதிரடியாக நேற்று கைது செய்தது.

    வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததால் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். #ICICI #ChandaKochhar
    புதுடெல்லி :

    வீடியோகான் நிறுவனத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடன் வழங்கியது. இதில், அந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார் குடும்பம் பெரும் ஆதாயம் அடைந்திருப்பதாக இந்திய முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது.

    வழங்கப்பட்ட கடனில் ரூ.2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டதால் இந்த முறைகேடு புகார் எழுந்தது. பின்னர், வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதனால், வங்கி தலைவா் சந்தா கோச்சார் மீது விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சில மதங்களுக்கு முன்பு சிபிஐ ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்கியது.

    இந்நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி பதவியை சந்தா கோச்சார் இன்று ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி நிர்வாகம் சந்தீப் பக்‌ஷி என்பவரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #ICICI #ChandaKochhar
    ×