என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Idly"
- தனுஷ் நடிக்கும் 52 ஆவது படமாகவும், அவர் இயக்கும் 4 ஆவது படமாகும்.
- இட்லி படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ் நடித்து, இயக்கி வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் நடிப்பில் வெளியான 50-ஆவது படமாக ராயன் அமைந்தது.
ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கும் நான்காவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும், இந்த படத்தில் அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தனுஷ் நடிக்கும் 52 ஆவது படமாகவும், அவர் இயக்கும் 4 ஆவது படமாகும்.
"இட்லி கடை" என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை கிரன் கௌஷிக் மேற்கொள்ள படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா ஜிகே மேற்கொள்கிறார்.
இந்த படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்நிலையில், இட்லி கடை படத்தில் தனுஷ் உடன் நித்யா மேனன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் டீ கப் உடன் செல்பி எடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மாலையில் நன்கு அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
- அனைத்து சட்னிகளுடனும், சாம்பாருடனும் சேர்த்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு - 1 டம்ளர்
பச்சரிசி - 1 1/4 டம்ளர்
புழுங்கல் அரிசி - 1 1/4 டம்ளர்
உளுந்தம்பருப்பு- 3/4 டம்ளர்
வெந்தயம் - 1 ஸ்பூன்
செய்முறை:
• மேற்கூறப்பட்ட பொருட்களை கழுவி ஊறவைக்கவும்.
• மாலையில் நன்கு அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
• காலையில் இட்லி தட்டில் எண்ணெய் தடவி, இட்லி ஊற்றி வேக வைக்கவும்.
• மிருதுவான, சுவையான இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்த கேழ்வரகு இட்லி தயார்.
• இது சிறுகுழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
• தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, வேர்க்கடலைச் சட்னி என அனைத்து சட்னிகளுடனும், சாம்பாருடனும் சேர்த்து சாப்பிடலாம்.
- சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் கொத்துக்கறியை போட்டு நன்கு வேக வைக்கவும்.
- வறுத்து எடுத்ததை ஒரு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - பொறிக்க
மட்டன் கொத்துக்கறி - 1/2 கிலோ
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப
இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு
கடலை பருப்பு 100 கி
உளுந்தம் பருப்பு - 100 கி
மிளகு - 50 கிராம்
கருப்பு எள்ளூ - 50 கி
சீரகம் - 50 கி
வரமிளகாய் - 50 கி
இட்லி மாவு - 1 கிலோ
செய்முறை:
• முதலில் மட்டன் கொத்துக்கறியை நன்கு அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
• ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் கொத்துக்கறியை போட்டு நன்கு வேக வைக்கவும்.
• இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், காரத்திற்கு ஏற்ற மிளகாய் தூள், தேவையான அளவு இஞ்சி பூண்டு விழுது போன்றவற்றை சேர்ந்து அதனுடைய பச்சை வாடை போகும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
• ஒரு கடாயில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு, கருப்பு எள்ளு, சீரகம், வரமிளகாய் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
• வறுத்து எடுத்ததை ஒரு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
• ஒரு இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி தட்டுகளில் மேல் ஒரு துணி போட்டு, முதலில் இட்சி மாவை 1/2 கரண்டி ஊற்றவும்.
• பின்னர் தயாரித்து வைத்துள்ள மட்டன் கொத்து கறி கலவையை சிறிதளவு வைக்கவும்.
• பின்னர் மறுபடியும் 1/2 கரண்டி அளவு மாவை ஊற்றி பின்னர் இட்லி தட்டுகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
• பின்னர் வெந்த இட்லிகளை தனியாக எடுத்து வைக்கவும்.
• பின்னர் ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி தயாரித்து வைத்திருக்கும் பொடியை போட்டு சிறு தீயில் கிளறவும்.
• பின்னர் தயாரித்து வைத்துள்ள கறி இட்லியை பொடி கலவையில் போட்டு பிரட்டி எடுக்கவும்.
• இதோ தமிழ்நாட்டு ஸ்டைல் கறி இட்லி ரெடி.
- சட்னி கொஞ்சம் தண்ணீர் போல் இருந்தால் தான் நல்லா இருக்கும்.
- தக்காளியை மட்டும் 1 எடுத்து அதனை மட்டும் அரைத்து கொள்ளவும்.
தேவையான பொருட்கள்:
பூண்டு – 5
மிளகாய் – 7
புளி – எலுமிச்சை பழம் அளவு
சின்ன வெங்காயம் – 10
கடுகு – சிறிதளவு
தக்காளி – 1
கருவேப்பிலை – 1 கொத்து
செய்முறை:
முதலில் மிக்சி ஜாரில் 5 பல் பூண்டு, மிளகாய் 7 எடுத்துக் கொள்ளவும். அதில் புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கொஞ்சம் கொரகொரப்பாக இருக்கும். அதனுடன் 10 சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து வெறும் தக்காளியை மட்டும் 1 எடுத்து அதனை மட்டும் அரைத்து கொள்ளவும்.
இப்போது ஒரு கடாயை வைத்து அதில் 1 கடாயில் நல்ல எண்ணெய் ஊற்றி அதில் சிறிதளவு கடுகு போட்டு பொரிந்தவுடன் அதில் கருவேப்பிலை போடவும். அடுத்து நாம் அரைத்து வைத்துள்ள மிளகாயை சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து அதனுடைய பச்சை வாடை போகும் வரை வதக்கவும். அப்போது தான் சட்னி நன்றாக இருக்கும்.
இந்த சட்னி கொஞ்சம் தண்ணீர் போல் இருந்தால் தான் நல்லா இருக்கும். ஆகவே கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு அதன் பின் சட்னியை சூடாக தோசை மற்றும் இட்லிக்கு சேர்த்து சாப்பிடுங்கள்..! சும்மா சுவை அள்ளும்..!
- குழந்தைகள் எப்போது வித்தியாசமான ரெசிபிகளை விரும்புவார்கள்.
- இட்லி சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
இட்லி - 2
மூவர்ண குடமிளகாய் - தலா 1
இட்லி மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தே.அளவு
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
டூத்பிக் - தே.அளவு
சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
குடைமிளகாய், இட்லியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு பவுலில் இட்லி துண்டுகளை சேர்த்து அதன் மேல் சோள மாவை தூவி கிளறவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, இட்லிகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
இதன் மேலே இட்லி மிளகாய்ப்பொடிகளை எல்லா பக்கமும் படுவது போல தூவவும்.
அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கியூப் வடிவத்தில் நறுக்கிய குடமிளகாய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து லேசாக வதக்கவும்.
இனி டூத்பிக்கில் இட்லி, குடைமிளகாய் என ஒன்றன் பின் ஒன்றாக சொருகி பரிமாறவும்.
சூப்பரான இட்லி டிக்கா ரெடி.
- சில்லி மசாலா இட்லி மாலை நேர சிற்றுண்டியாக உண்பதற்கு சுவையாக இருக்கும்.
- மீதமான இட்லியில் உப்புமா செய்யாமல் இப்படி செய்தால் உடனே காலியாகிவிடும்.
தேவையான பொருட்கள்
குட்டி இட்லி - 20
சமையல் எண்ணெய் - ½ கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி-பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி
கொத்தமல்லி - சிறிது
மிளகாய்த்தூள் - 1 ½ தேக்கரண்டி
கரம் மசாலா - ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
டொமேட்டோ கெட்சப் - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - ½ தேக்கரண்டி
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
ஒரு பானில் ¼ கப் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ½ தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்த பின்னர் அதில் குட்டி இட்லிகளை சேர்த்து கிளறவும்.
குறைவான தீயில் வைத்து இட்லியின் நிறம் மாறி லேசான பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை தனியே எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் ¼ கப் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
பின்னர் டொமேட்டோ கெட்சப் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் செய்து வைத்த இட்லியை சேர்த்து பிரட்டிக் விடவும். அடுப்பை குறைவான தீயில் வைக்கவும்.
2 நிமிடங்களுக்கு பின்னர் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான சில்லி மசாலா இட்லி தயார்.
- தென்னிந்தியாவின் புகழ்பெற்ற காலை உணவு இட்லி.
- இன்று ரவா இட்லி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரவா - 1 கப்
நெய் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
தயிர் - 1/4 கப்
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
தேவையான அளவு - உப்பு
பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
தாளிக்க
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
முந்திரிப் பருப்பு - 10
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 சிறிய துண்டு
செய்முறை :
ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்துவிட்டு கலவையை தனியே வைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து சூடானதும் ரவை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.
வறுத்த ரவையுடன் தாளித்த கலவை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலக்கவும்.
அதனுடன் தயிர், பெருங்காயத்தூள், பேக்கிங் சோடா, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
20 நிமிடங்கள் கழித்து இட்லித் தட்டில் மாவை ஊற்றி 10 முதல் 12 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைக்கவும்.
இப்போது சுவையான ரவா இட்லி தயார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்