என் மலர்
நீங்கள் தேடியது "Ilayankudi"
- முதுநிலை படிப்புக்கு தேர்வுக்காக ஜப்பான் நாட்டிற்கு இளையான்குடி மாணவர் செல்கிறார்.
- தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர் இவர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் இளநிலை வேதியியல் படித்து வந்தவர் தங்க செல்வம். இவர் தற்போது ஜப்பான் நாட்டின் சிசுகோ பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளுக்கான வேதியியல் முதுநிலை பட்டம் கல்வி உதவித்தொகையுடன் படிக்க தேர்வு செய்யப்பட்டார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை, வியட்நாம் வழியாக ஜப்பான் சென்றடைந்தார்.
அவருக்கு அக்டோபர் முதல் 2 ஆண்டுகளுக்கான வகுப்புகள் தொடங்க இருக்கிறது. பல்வேறு கட்ட தேர்வுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை எளிய வேலை செய்து வருபவர். இவர் கவிஞர் ஹிதாயத்துல்லாவின் (சண்முகம்) பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் சென்றுள்ள மாணவர் தங்க செல்வத்தை கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் வாழ்த்தினர்.