என் மலர்
நீங்கள் தேடியது "ilayaraaja"
- இளையராஜா சிம்பொனி இசைத்து புதிய சரித்திரம் படைத்துள்ளார் என புகழாரம் சூட்டினார் பிரதமர்.
- பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்தது மறக்க முடியாதது என தெரிவித்தார் இளையராஜா.
புதுடெல்லி:
இசைஞானி இளையராஜா சமீபத்தில் லண்டனில் மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார். இதை செய்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் பெற்றார்.
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இளையராஜா இன்று சந்தித்தார். அவரிடம் சிம்பொனி இசைத்தது பற்றி பிரதமர் மோடி ஆர்வத்துடன் உரையாடினார்.
இந்நிலையில், இளையராஜா உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில், மாநிலங்களவை உறுப்பினரான இசை மேதை இளையராஜாவை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நமது இசை மற்றும் கலாசாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். லண்டனில் சில நாட்களுக்கு முன் வாலியன்ட் என்ற பெயரில் மேற்கத்திய சிம்பொனியை இசைத்து சரித்திரம் படைத்துள்ளார். உலகப் புகழ்பெற்ற ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவினருடன் இணைந்து இந்த சாதனையை படைத்துள்ளார். அவரது ஈடு இணையற்ற இசைப்பயணத்தில் இது ஒரு பெருமைக்குரிய அத்தியாயம் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இளையராஜா வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாதது. அவருடன் பேசுகையில் சிம்பொனி வேலியண்ட் உள்ளிட்ட பல கருத்துக்கள் குறித்து பேசினோம். அவருடைய அன்புக்கும், ஆதரவுக்கும் நான் தலை வணங்குகிறேன் என தெரிவித்தார்.
- லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்தார்.
- இவரது அரங்கேற்றம் ஒன்றரை மணி நேரம் நடந்தது.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் 'சிம்பொனி' இசையை அரங்கேற்றினார். அவரது 1½ மணி நேர இசை மழையில் ரசிகர்கள் உற்சாகத்துடன் நனைந்தனர். ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார்.
அந்த வகையில் மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகிய சிம்பொனி இசைக்கலைஞர்கள் வரிசையில் இளையராஜாவும் இணைந்துள்ளார். சிம்பொனி அரங்கேற்றத்தை முடித்துக் கொண்டு சமீபத்தில் சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பலர் சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் பிரபல பாடகி ஷாலினி சிங் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து அவரிடம் ஆசி பெற்றதாக தெரிவித்துள்ளார்.
பாப் ஷாலினி என பிரபலமாக அழைக்கப்படும் ஷாலினி சிங் பல்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை ஷாலினி பாடியுள்ளார். தமிழில் இவர் ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வித்யாசாகர் மற்றும் பலரின் இசையில் பாடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விடுதலை பாகம் ஒன்று பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை வென்றது.
- விடுதலை 2 டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் 2023 ஆம் ஆண்டு சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை திரைப்படத்தை இயக்கியிருந்தார். விடுதலை படத்தின் முதல் பாகமாக வெளியான இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
விடுதலை பாகம் ஒன்று பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் பாராட்டை வென்றது. விடுதலை 2 திரைப்படம் இந்தாண்டு டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், விடுதலை 2 படத்தில் இடம்பெற்றுள்ள 'தினம் தினமும்' பாடல் வெளியாகியுள்ளது. இளையராஜாவின் பாடியுள்ள இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விடுதலை 2 படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
- விடுதலை இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.
சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். விடுதலை பாகம் ஒன்று பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் பாராட்டை வென்றது. விடுதலை 2 திரைப்படம் இந்தாண்டு டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், விடுதலை 2 படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வருகிற 26 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இளையராஜா இசையில் இந்தப் படத்தின் மூதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.