என் மலர்
நீங்கள் தேடியது "imdb"
- பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி 2022-ம் ஆண்டின் டாப்-10 இந்திய திரை நட்சத்திரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- இந்த பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார்.
பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி 2022-ம் ஆண்டின் டாப்-10 இந்திய திரை நட்சத்திரங்கள் யார் யார் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. தங்கள் தளத்தில் யார் மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறார்கள் என்பதை வைத்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தனுஷ்
ஸ்டார் மீட்டர் என எப்போதும் யார் பிரபலமாக இருக்கிறார் என்பதற்கான ரேட்டிங் இவர்கள் தளத்தில் இருக்கும். இந்த டாப்-10 இந்திய திரை நட்சத்திரங்கள் பட்டியலில் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை ஆலியா பட்டும், மூன்றாவது இடத்தை ஐஷ்வர்யா ராயும் பெற்றுள்ளனர்.

ஐஎம்டிபி வெளியிட்ட பட்டியல்
மேலும் அந்த பட்டியலில் இடம்பெற்ற பிரபலங்களின் பட்டியல் பின்வருமாறு:
1. தனுஷ்
2. ஆலியா பட்
3. ஐஷ்வர்யா ராய் பச்சன்
4. ராம் சரண் தேஜா
5. சமந்தா
6. ஹிருத்திக் ரோஷன்
7. கியாரா அத்வானி
8. ஜூனியர் என்.டி.ஆர்
9. அல்லு அர்ஜுன்
10. யஷ்
- பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி 2022-ம் ஆண்டின் டாப்-10 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- இந்த பட்டியலில் தென்னிந்திய சினிமா படங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
தென்னிந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸ் வசூல் மற்றும் வெளிநாட்டு விருது வாங்குவதிலும் அதிகம் காணப்படுகிறது. தென்னிந்திய சினிமாக்கள் தற்போது இந்திய பொழுதுபோக்கு சந்தையை ஆளுகின்றன. சமீபத்தில், ஐஎம்டிபி 2022 ஆம் ஆண்டின் முதல் 10 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டது, இதில் ஒரே ஒரு பாலிவுட் படம் மட்டுமே இடம்பெற்று உள்ளது.

எஸ்.எஸ்.ராஜமவுலியின் சூப்பர்ஹிட் பிளாக்பஸ்டர் படமான 'ஆர்ஆர்ஆர்' முதலிடத்தைப் பிடித்து உள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்கள் பின்வருமாறு:-
1. ஆர்.ஆர்.ஆர்
2. தி காஷ்மீர் பைல்ஸ்
3. கே.ஜி.எப்-2
4. விக்ரம்
5. காந்தார
6. ராக்கெட்ரி: நம்பி விளைவு
7. மேஜர்
8. சீதா ராமம்
9. பொன்னியின் செல்வன்: பாகம் ஒன்று
10. 777 சார்லி
ஆர்ஆர்ஆர் படம் மார்ச் மாத தொடக்கத்தில் ஐந்து மொழிகளில் வெளியானது, முக்கியமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி. ஆர்ஆர்ஆர் கோல்டன் குளோப் விருதுகளுக்கான பரிந்துரைகளையும் பெற்று உள்ளது. 'தி காஷ்மீர் பைல்ஸ்' விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய இப்படத்தில் அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் தர்ஷன் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் அவர்களது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரி இந்துக்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறுவதை படம் காட்டுகிறது.
- ’பொன்னியின் செல்வன் -1’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.

ஐ.எம்.டி.பி. போஸ்டர்
மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை அடுத்த ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ஐ.எம்.டி.பி.யின் மிகவும் பிரபலமான 10 இந்திய திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இதனை படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
Happy & overwhelmed to have #PonniyinSelvan1 🗡️ in the #IMDb Top 10 Most Popular Indian Movies of 2022! ✨
— Lyca Productions (@LycaProductions) December 20, 2022
Thank you @IMDb @IMDb_in 😇#IMDbBestof2022 #PS1 🗡️ #Maniratnam @MadrasTalkies_ #Subaskaran @arrahman @gkmtamilkumaran @Tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/Y88wCsKew0
- எனக்கு அடுத்தவர்களின் வாழ்க்கை இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது.
- இனிமேல் இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைப்பேன்.
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பில் சிக்கி சிகிச்சை பெற்றார். இதனால் சினிமாவை விட்டும் சில மாதங்கள் ஒதுங்கியும் இருந்தார். சிகிச்சைக்கு பின் உடல்நிலை தேறி மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இந்த நிலையில் சமந்தா அளித்துள்ள பேட்டியில், "எனக்கு அடுத்தவர்களின் வாழ்க்கை இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது. எல்லா துறைகளில் இருப்பவர்களும் தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது சகஜம். நானும் அப்படித்தான்.
மற்றவர்களின் வெற்றிகளை பார்த்து நாமும் அவர்களைப்போல் முன்னேற கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 'ஐஎம்டிபி'யின் 100 பிரபலங்கள் பட்டியலில் எனக்கு 13-வது இடம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
எனக்கு நல்ல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. இனிமேல் இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைப்பேன்''என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தி நடிகர் ஷாரூக் கான் முதலிடம் பிடித்து இருந்தார்.
- ஐந்தாவது இடத்தில் ஷோபிதா துலிபலா உள்ளார்.
தி இன்டர்நெட் மூவி டேட்டாபேஸ் (IMDb) 2024 ஆண்டுக்கான பிரபல இந்திய நட்சத்திரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பல்வேறு புதுமுக நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் ஷாரூக் கான் முதலிடம் பிடித்து இருந்தார்.
இந்த நிலையில், 2024 ஆண்டுக்கான பிரபல நட்சத்திரங்கள் பட்டியலில் ஷாருக் கான் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தப் பட்டியலில் திரிப்தி திம்ரி முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடத்தில் தீபிகா படுகோண், மூன்றாவது இடத்தில் இஷான் காட்டர், ஐந்தாவது இடத்தில் ஷோபிதா துலிபலா உள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து ஷர்வாரி ஆறாவது இடத்திலும், ஐஸ்வர்யா ராய் ஏழாவது இடத்திலும், எட்டாவது இடத்தில் சமந்தா, ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களில் முறையே அலியா பட் மற்றும் பிரபாஸ் ஆகியோர் உள்ளனர்.
