என் மலர்
சினிமா செய்திகள்

X
2024 ஆண்டின் பிரபலமான இந்திய நட்சத்திரங்கள்.. டாப் 10 பட்டியல்
By
மாலை மலர்5 Dec 2024 7:58 PM IST

- இந்தி நடிகர் ஷாரூக் கான் முதலிடம் பிடித்து இருந்தார்.
- ஐந்தாவது இடத்தில் ஷோபிதா துலிபலா உள்ளார்.
தி இன்டர்நெட் மூவி டேட்டாபேஸ் (IMDb) 2024 ஆண்டுக்கான பிரபல இந்திய நட்சத்திரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பல்வேறு புதுமுக நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் ஷாரூக் கான் முதலிடம் பிடித்து இருந்தார்.
இந்த நிலையில், 2024 ஆண்டுக்கான பிரபல நட்சத்திரங்கள் பட்டியலில் ஷாருக் கான் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தப் பட்டியலில் திரிப்தி திம்ரி முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடத்தில் தீபிகா படுகோண், மூன்றாவது இடத்தில் இஷான் காட்டர், ஐந்தாவது இடத்தில் ஷோபிதா துலிபலா உள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து ஷர்வாரி ஆறாவது இடத்திலும், ஐஸ்வர்யா ராய் ஏழாவது இடத்திலும், எட்டாவது இடத்தில் சமந்தா, ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களில் முறையே அலியா பட் மற்றும் பிரபாஸ் ஆகியோர் உள்ளனர்.
Next Story
×
X