என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "immigrants"
- மத்தியில் ஆளும் பாஜக அரசால் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
- நாட்டில் ஏற்கனவே உள்ள புலம்பெயர்ந்தோரை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி இந்திய குடியுரிமை பறிக்கப்படுமோ என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மத்தியில் ஆளும் பாஜக அரசால் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. ௨௦௧௯ ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, குடியுரிமை சட்டத்தில், மேற்கு வங்கம், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் பகுதியில் உள்ள முஸ்லீம் அல்லாத சமூகத்தினருக்கு முக்கியமாக ஹிந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜைனர்கள், கிறித்தவர்களுக்கு விரைந்து குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யபட்டது.
இஸ்லாமியர்களை பாதிக்கும் வகையில் பாரபட்சமாக இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதே எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது. அனால் பாஜக இதை தொடர்ந்து மறுத்து வருகிறது. நாட்டில் ஏற்கனவே உள்ள புலம்பெயர்ந்தோரை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி இந்திய குடியுரிமை பறிக்கப்படுமோ என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயந்த இலங்கைத் தமிழர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் சிஏஏ மூலம் நாட்டில் முதற்கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியுரிமைக்கு விண்ணப்பித்த டெல்லியைச் சேர்ந்த 14 புலம்பெயர்ந்வர்களிடம் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா அவர்களுக்கான குடியுரிமை ஆவணங்களை வழங்கி அதன் நன்மைகள் குறித்து பேசினார்.இதில் பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- புது விதிமுறைகள் இம்மாதத்திலிருந்தே அமலுக்கு வரும் என அரசு தெரிவித்துள்ளது
- புதிய விதிகளால் 1,40,000 பேர் வருவது குறைய கூடும் என அரசு கணித்துள்ளது
இங்கிலாந்தில் கல்வி கற்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டு அரசு பல புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
அதில் முக்கிய அம்சமாக கல்வி கற்க அங்கு செல்லும் மாணவர்கள், இனி பெற்றோர் உட்பட தங்கள் குடும்ப உறுப்பினர்களை தங்களுடன் அழைத்து செல்லவோ, நுழைந்த பிறகு அவர்களை அங்கு வரவழைத்து தங்களுடன் தங்க வைத்து கொள்ளவோ அனுமதி கிடையாது. முதுநிலை ஆராய்ச்சி பட்டங்கள் மற்றும் அரசு நிதியுதவியுடன் பெறப்படும் பட்டங்கள் ஆகியவற்றை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் இந்தியர்கள் உட்பட அனைத்து மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக முனைந்துள்ளது.
புதிய விதிமுறைகள் இம்மாதத்திலிருந்தே அமலுக்கு வரும் எனவும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
"மக்களுக்கு இங்கிலாந்து அரசு அளித்த வாக்குறுதியின்படி எல்லைகளை பலப்படுத்துவது, அகதிகள் வருகையை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க தொடங்கி விட்டோம். கல்வி கற்க "விசா" பெற்று கொண்டு வரும் பலர், பிறகு இங்கேயே பணி தேடி, இங்கிலாந்திலேயே தங்கி விடுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய வழிமுறை மூலம் சுமார் 1,40,000 பேர் இங்கிலாந்து வருவது குறைய கூடும்" என இங்கிலாந்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில், "இன்றிலிருந்து இங்கிலாந்தில் கல்வி பயிலும் பெரும்பாலான அயல்நாட்டு மாணவ மாணவியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வருவது முடியாது. 2024 தொடங்கியதுமே இங்கிலாந்து மக்களுக்கு நாங்கள் பணியாற்ற தொடங்கி விட்டோம்" என பதிவிட்டுள்ளார்.
From today, the majority of foreign university students cannot bring family members to the UK.
— Rishi Sunak (@RishiSunak) January 1, 2024
In 2024, we're already delivering for the British people. https://t.co/m0TcSaxK9V
2019லிருந்து தங்கள் குடும்ப உறுப்பினர்களை இங்கிலாந்திற்கு அழைத்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை 930 சதவீதம் அதிகரித்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் இருந்து எல்லை தாண்டி அமெரிக்காவுக்குள் வருபவர்களை தடுக்க தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. தீவிர கண்காணிப்பையும் மீறி உள்ளே நுழைபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுகின்றனர். இதையும் தாண்டி பலர் அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டம் ஒன்றில் அதிபர் டிரம்ப் பேசுகையில், “சட்டவிரோதமாக மக்கள் நாட்டிற்கு வருவதை வர முயற்சிப்பதை நாம் வெகுவாக நிறுத்தி இருக்கிறோம். அப்படி வருபவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுகிறோம். இந்த மக்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று நீங்கள் நம்பமாட்டீர்கள். இவர்கள் மக்கள் அல்ல விலங்குகள்” என கூறினார்.
மேலும், “ பலவீனமான சட்டங்களின் காரணமாக அவர்கள் நாட்டிற்குள் விரைந்து வருகிறார்கள். நாம் பிடிக்கிறோம், விடுதலை செய்கிறோம் மீண்டும் பிடிக்கிறோம், மீண்டும் அவர்களை விடுதலை செய்கிறோம் இது பைத்தியக்காரத்தனம். முட்டாள்தனமான சட்டங்களால் நாட்டில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் வருகை அதிகரிக்கிறது. அமெரிக்காவிற்கு சட்டபூர்வமாக மற்றும் தகுதி அடிப்படையில் மக்கள் வர வேண்டும்” என அவர் பேசியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் இருந்து குடியேறிவர்களை கெட்ட வார்த்தை பயன்படுத்தி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. #Trump
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்