search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Implements"

    • கலப்பைகள் மற்றும் விசை தெளிப்பான் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது.
    • மர எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் பருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயிறு வகைகள், தானியங்கள், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், மர எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் பருத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயிறு வகை திட்டத்தின் கீழ் ஆதார வளங்களை பாதுகாக்கும் தொழில் நுட்பமாக பயிரிடுவதற்கு ஏற்புடையதாக நிலத்தை பண்படுத்த டிராக்டரால் இயக்கக்கூடிய சுழல் கலப்பைகள் மற்றும் விசை தெளிப்பான் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி காங்கயம் வட்டாரம் படியூர் கிராமத்தில் சிவகுமார் மற்றும் வீரணம்பாளையம் கிராமத்தில் செல்லமுத்து ஆகியோருக்கு சுழல் கலப்பை மானிய விலையில் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு மானிய விலையில் தார்ப்பாலின் மற்றும் விசைத்தெளிப்பான்களும் வழங்கப்பட்டது.

    இந்த வேளாண் பண்ணை கருவிகளை திருப்பூர் மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன், காங்கயம் வட்டார வேளாண்மை அலுவலர் ரேவதி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் ரமேஷ், உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவக்குமார், சீனிவாசன், ஜோதீஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடையே பண்ணை கருவிகளின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தனர்.

    ×