search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Increase fish production"

    • கெண்டை, லோகு, கட்லா, மிருகால் ஆகிய மீன்ரகங்கள் வளர்க்கப்பட்டு அணைகளில் விடப்படுகிறது.
    • மீன்வளத்தை பெருக்க 6 லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ள நிலையில் மீதி குஞ்சுகள் அடுத்தடுத்து விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் மீன்வளத்துறை சார்பில் மீன்பிடிதொழில் நடந்து வருகிறது. இதில் 140-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் 500 முதல் 700 கிலோ மீன்கள் பிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அணையில் இயற்கையாக வளரும் மீன்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது.

    வைகை அணை பகுதியில் உள்ள மீன்வளத்துறை அலுவலகம் மூலம் மணிமுத்தாறு, பவானிசாகர் அணைகளில் இருந்து நுண்மீன்குஞ்சுகள் வாங்கி அதனை மீன்வளத்துறை அலுவலகத்தில் உள்ள தொட்டிகளில் பராமரித்து வருகின்றனர். கெண்டை, லோகு, கட்லா, மிருகால் ஆகிய மீன்ரகங்கள் வளர்க்கப்பட்டு அணைகளில் விடப்படுகிறது.

    கண்மாய் மற்றும் குளங்களில் மீன்வளர்ப்பவர்களுக்கும் மீன்குஞ்சுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் அணையின் நீர்தேக்கத்தில் புதிதாக மீன்குஞ்சுகள் விடப்படும். இந்த மாதம் முதல் வாரத்தில் 45 நாட்களில் வளர்ச்சி அடைந்த சுமார் 3 லட்சம் மீன்குஞ்சுகள் நீர்தேக்கத்தில் விடப்பட்டது.

    தற்போது 2-ம் கட்டமாக ஒரு லட்சம் கட்லா மீன்குஞ்சுகள், 2 லட்சம் ரோகு மீன்குஞ்சுகள் என மொத்தம் 3 லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன. இந்த ஆண்டு மட்டும் 16 லட்சம் மீன்குஞ்சுகள் விடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 6 லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ள நிலையில் மீதி குஞ்சுகள் அடுத்தடுத்து விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×