என் மலர்
நீங்கள் தேடியது "India beat Austraia"
பாங்காக்கில் நடைபெற்று வரும் உபேர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இந்தியா 4-1 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. #UberCup
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உபேர் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. குரூப் ‘ஏ’-யில் இடம்பிடித்துள்ள இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் கனடாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-4 என தோல்வியடைந்தது.
இந்நிலையில் இன்றைய 2-வது ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-4 என வெற்றி பெற்றது. முதலில் சாய்னா நேவால் சுயான்-யு வென்டி சென்-ஐ எதிர்கொண்டார். இதில் 21-14, 21-19 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இரட்டையர் பிரிவில் மேகனா ஜக்கம்புடி - பூர்விஷா எஸ் ராம் ஜோடி 13-21, 16-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தது. மற்றொரு ஒற்றையர் பிரிவில் வைஷ்ணவி ரெட்டி ஜக்கா 21-17, 21-13 என எளிதில் வெற்றி பெற்றார்.
2-வது இரட்டையர் பிரிவில் சன்யோகிதா கோர்பாடே- பிரஜக்தா சவந்த் ஜோடி 21-19, 21-11 என வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 3-1 என முன்னிலைப் பெற்றது. கடைசி ஒற்றையர் பிரிவில் அனுரா பிரபுதேசாய் 21-6, 21-7 என வெற்றி பெற்றது. இந்தியா 4-1 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இந்தியா அடுத்த போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால்தான் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும்.