search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India Book of Records"

    • உ.பி.யைச் சேர்ந்த தேஜ்பால் 26 ஆண்டுகாலமாக வேலை பார்த்து வருகிறார்.
    • இதில் தம்பி கல்யாணத்துக்காக ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் தேஜ்பால் சிங். இவர் 1995, டிசம்பர் 26-ல் தனியார் நிறுவனத்தில் எழுத்தராக பணியாற்றத் தொடங்கினார். இவருக்கு 4 குழந்தைகள்.

    பயிற்சி எழுத்தராக பணியில் சேர்ந்த இவர், தற்போது கூடுதல் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 26 ஆண்டுகால பணியில் அவர் ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்துள்ளார். அதுவும் 2003, ஜூன் 18 அன்று அவரது தம்பியின் திருமணத்திற்காக அந்த ஒரு நாள் விடுமுறை எடுத்துள்ளார்.

    பணியில் அதீத ஈடுபாடு கொண்டதால் ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஹோலி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும் வேலை செய்கிறார்.

    தொழில் மீதான அசாதாரண அர்ப்பணிப்பிற்காக இந்தியா புக் ஆப் ரெக்கார்ஸ் நிறுவனத்தால் தேஜ்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×