search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India cricket players"

    • டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தியது.
    • இதனால் வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்துள்ளது.

    சமீபத்தில், 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தியது. இதனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புதிய விதிகளைப் பரிசீலித்து வருகிறது என்று செய்திகள் வெளிவந்துள்ளன. கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் சுற்றுப்பயணங்களில் அவர்களுடன் இணைவதைத் தடை செய்வது உள்ளிட்ட மாற்றங்களை பிசிசிஐ மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வர்ணணையாளர் ஹர்சா போக்லே, கிரிக்கெட் வீரர்கள் பிஆர் நிறுவனங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பிசிசிஐ இந்திய அணிக்காக முன்மொழிவதைப் போல மாற்றங்களைப் படித்தேன். நான் எவ்வளவு நம்ப வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அணியினர் பிஆர் நிறுவனங்களை வைத்திருப்பதைத் தடை செய்யும் ஒரு விதியை கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும்.

    என போக்லே கூறினார்.

    சுப்மன் கில் பிரபலமான பிஆர் நிறுவனமான கார்னர் ஸ்டோன்-ஐ நியமித்துள்ளார். விராட் கோலி, நவம்பர் 2024 இல் Sporting Beyond நிறுவனத்துடன் இணைந்திருந்தார். இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் பிளாக் ஹாட் டேலண்ட் சொல்யூஷன்ஸ் என்ற பிஆர் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறார்.

    அதே நேரத்தில் யஷஸ்வி ஜெயஸ்வால் மெராகி ஸ்போர்ட் கவனிப்பில் இருக்கிறார். ரைஸ் வேர்ல்ட் வைடு ரோகித், பும்ரா, திலக் வர்மா, ஷ்ரேயாஸ், சாய் சுதர்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், குர்ணால் பாண்ட்யா போன்ற பல நட்சத்திர வீரர்களை நிர்வகிக்கிறது.

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பொது இமேஜ் மற்றும் ஆதரவுகளை நிர்வகிக்க பிஆர் நிறுவனங்களை எவ்வளவு நம்பியிருக்கிறார்கள் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×