என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "india womens team"
- 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
- இந்திய அணி தனது 4 ஆட்டங்களிலும் ஆடி முடித்து விட்ட நிலையில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளி பெற்றிருக்கிறது.
10 அணிகள் இடையிலான 9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு சார்ஜாவில் அரங்கேறிய 18-வது லீக் ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி, 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் (ஏ பிரிவு) மோதியது.
இந்த போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு மங்கி உள்ளது. மேலும் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றால் அது பாகிஸ்தான் கையில் தான் உள்ளது.
இந்திய அணி தனது 4 ஆட்டங்களிலும் ஆடி முடித்து விட்ட நிலையில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளி பெற்றிருக்கிறது. ஏ பிரிவில் துபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் கடைசி லீக்கில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் சிக்கலின்றி 2-வது அணியாக நியூசிலாந்து அரைஇறுதிக்கு முன்னேறி விடும்.
பாகிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில், இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது ரன்ரேட்டில் முன்னிலை வகிக்கும் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு கிடைக்கும். அதாவது இந்திய அணியின் தலைவிதி இப்போது பாகிஸ்தான் கையில் உள்ளது.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை 11 ஆட்டங்களில் மோதியுள்ள பாகிஸ்தான் அதில் 2-ல் வெற்றியும், 9-ல் தோல்வியும் கண்டுள்ளது.
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'இனி எங்கள் கையில் எதுவும் இல்லை. எங்களுக்கு இன்னொரு ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும். யார் நன்றாக ஆடுகிறார்களோ அவர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்' என்றார்.
- இவ்விரு அணிகளும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இதில் 19-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் இன்று துபாயில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அத்துடன் ரன்ரேட்டிலும் ஏற்றம் காண வேண்டியது முக்கியம்.
இவ்விரு அணிகளும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
உலகக் கோப்பையில் 5 ஆட்டங்களில் சந்தித்ததில் 4 ஆட்டத்தில் இந்தியாவும், ஒரு ஆட்டத்தில் இலங்கையும் வென்று இருப்பதும் இதில் அடங்கும். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- இந்தியா இடம் பிடித்துள்ள "ஏ" பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் உள்ளன.
- இந்திய அணியில் ஹர்மன்ப்ரீத் கவுர், ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா, ரோட்ரிக்ஸ் உள்ள பேட்டர்கள் உள்ளனர்.
சார்ஜா மற்றும் துபாயில் பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் உள்ளன.
நேற்று "ஏ" பிரிவில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்தியா ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா, ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட முக்கிய வீராங்கனைகளுடன் பலமான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது. பந்து வீச்சிலும் தீப்தி சர்மா உள்ளிட்டோர் உள்ளனர்.
இதனால் முழு பலத்தையும் வெளிப்படுத்தி நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூட விரும்பும். அதேவேளையில் நியூசிலாந்து அணியும் பலம் வாய்ந்தது. இந்திய அணியை வீழ்த்த முனைப்பு காட்டும். இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
"பி" பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை வங்கதேசம் வீழ்த்தியிருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்