என் மலர்
முகப்பு » Indian FTR 1200
நீங்கள் தேடியது "Indian FTR 1200"
இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது எஃப்.டி.ஆர். 1200 மற்றும் எஃப்.டி.ஆர் 1200 எஸ் மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் வெளியிட்டது. #motorcycle
இரண்டு மோட்டார்சைக்கிள்களின் விலை முறையே ரூ.14.99 லட்சம் மற்றும் ரூ.15.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எஃப்.டி.ஆர். 1200 மோட்டார்சைக்கிள் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. முன்பதிவு கட்டணமாக ரூ.2 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் எஃப்.டி.ஆர். 1200 வினியோகம் ஏப்ரல் 2019 முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஃப்.டி.ஆர். 1200 எஸ் மோட்டார்சைக்கிள் எஃப்.டி.ஆர். 750 ஸ்கவுட் ரேஸ் மாடலைத் தழுவி உருவாகி இருக்கிறது. எனினும் புது மோட்டார்சைக்கிளில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் பிரான்டு ஆன எஃப்.டி.ஆர். 1200 அந்நிறுவனத்தின் முதல் ஸ்டிரீட்ஃபைட்டர் மாடல் ஆகும். புது எஃப்.டி.ஆர். மாடலில் 4.3 இன்ச் எல்.சி.டி. தொடுதிரை வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, பில்ட்-இன் ப்ளூடூத் மற்றும் யு.எஸ்.பி. ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
மற்ற அம்சங்களாக 6-ஆக்சிஸ் இனெர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட், டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஸ்டான்டு, ஸ்போர்ட் & ரெயின் என மூன்றுவித ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியன் எஃப்.டி.ஆர். 1200 எஸ் மற்றும் 1200 எஸ் ரேஸ் ரெப்லிக்கா மாடலில் 1203 சிசி வி-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 120 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை எஃப்.டி.ஆர். 1200 மாடலின் முன்பக்கம் டூயல் 320 எம்.எம். டிஸ்க், 265 எ்ம.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரேக்குகளுடன் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஏ.பி.எஸ். வசதியை ஆன் அல்லது ஆஃப் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
×
X