என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Indian man"
- அம்பர்லா தன்னுடன் பயிலும் இந்திய மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.
- கடந்த 2022-ம் ஆண்டு அந்த ஓட்டலுக்கு சென்ற அம்பர்லா திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்தினார்.
லண்டன்:
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வருபவர் ஸ்ரீ ராம் அம்பர்லா (வயது 25). இந்திய வம்சாவளியான இவர் லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று வருகிறார். அம்பர்லா தன்னுடன் பயிலும் இந்திய மாணவி ஒருவரை காதலித்து வந்தார். பின்னர் தகராறு ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் பிரிந்தனர். இதனையடுத்து அந்த மாணவி பகுதி நேரமாக அங்குள்ள ஒரு இந்திய உணவகத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 2022-ம் ஆண்டு அந்த ஓட்டலுக்கு சென்ற அம்பர்லா திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்தினார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு அங்குள்ள பெய்லி நகர கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் அம்பர்லா மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அவருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
- பாகிஸ்தானை சேர்ந்த முகமது ரஷித் என்பவர் 254 வால்நட்களை உடைத்தது தான் சாதனையாக இருந்தது.
- சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு முகமது ரஷித்தின் சாதனையை தற்போது நவீன்குமார் முறியடித்துள்ளார்.
கின்னஸ் சாதனை படைப்பதற்காக இளைஞர்கள் பலரும் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பருப்பு வகைகளில் ஒன்றான வால்நட்களை தலையிலேயே உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் இந்தியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர்.
வால்நட்டின் மேல் ஓட்டை உடைப்பது கடினமான நிலையில் ஒரு நிமிடத்தில் 273 வால்நட்களை தலையில் உடைத்து ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த நவீன் குமார் இந்த சாதனையை படைத்துள்ளார்.
தற்காப்பு கலைஞரான இவர் கின்னஸ் சாதனை படைப்பதற்காக தலையிலேயே வால்நட்டை உடைக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த முகமது ரஷித் என்பவர் 254 வால்நட்களை உடைத்தது தான் சாதனையாக இருந்தது. 2017-ம் ஆண்டு இந்த சாதனையை அவர் படைத்திருந்தார்.
இந்நிலையில் சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு முகமது ரஷித்தின் சாதனையை தற்போது நவீன்குமார் முறியடித்துள்ளார். இவர் தலையில் வால்நட்களை உடைத்து கின்னஸ் சாதனை படைத்த வீடியோவை உலக கின்னஸ் சாதனை அமைப்பில் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தலையில் ரத்தம் சொட்ட சொட்ட நவீன்குமார் ஒரு நிமிடத்தில் 273 வால்நட்களை உடைக்கும் காட்சி பதிவாகி உள்ளது. இதை பார்த்த சமூக வலைதள பயனர்கள் நவீன்குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
செல்வங்களில் மிகச் சிறந்த செல்வம் ‘குழந்தைச் செல்வம்' என்று சொன்னால் அது மிகையன்று. திருமணம் ஆனதும் அடுத்ததாக தம்பதிகளின் எதிர்ப்பார்ப்பு குழந்தைக்குத் தான். எத்தனை செல்வங்கள் இருந்தாலும் குழந்தை பேறுக்காக ஏங்கித் தவிப்பார்கள். மனித குலத்தின் நீடிப்பே குழந்தைகள் பிறப்பதில் தான் இருக்கிறது.
குழந்தை பாக்கியத்தின் மகத்துவம் இவ்வாறு இருக்க, உயிர் பிறப்புக்கு எதிரான கொள்கையுடைய மும்பை வாலிபர் ஒருவர் தனது சம்மதம் இல்லாமல் தன்னை பெற்றெடுத்ததாக பெற்றோருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
மும்பையை சேர்ந்த ரபேல் சாமுவேல் (வயது 27) என்ற வாலிபர் தான் தனது பெற்றோருக்கு எதிராக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக அவர் போலி தாடி, மீசை மற்றும் கண்ணாடி அணிந்துகொண்டு ‘யூ-டியூப்'பில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
அதில், இந்த உலகில் பிறக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் சக்தி குழந்தைகளுக்கு இல்லை. எனவே அவர்களின் வாழ்க்கைக்கு பெற்றோர் தான் உதவ வேண்டும்.
உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும், நாம் இந்த உலகில் நமது சம்மதம் இல்லாமலேயே கொண்டு வரப்பட்டு உள்ளோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்.
எனவே நாம் எதற்கும் பெற்றோருக்கு கடமைப்பட்டவர்கள் அல்ல. நாம் வாழ்வதற்கு அவர்கள் தான் அனைத்தையும் செய்ய வேண்டும். பெற்றோர் குழந்தைகளை முதலீடாகவோ அல்லது காப்பீட்டு திட்டங்களாகவோ கருதக்கூடாது என்று கூறியுள்ளார்.
மேலும் பேஸ்புக் பதிவில், ‘தங்களது சுகத்துக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் என்னை பெற்றெடுத்து இருக்கிறார்கள். இவர்கள் சுகம் அனுபவிப்பதற்காக நான் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? நான் ஏன் உழைத்து சம்பாதிக்க வேண்டும்? என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவும் வைரலாகி உள்ளது. இவரது இந்த பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
‘மனநல ஆஸ்பத்திரியில் சேரும்படி' அவரை ஒருவர் பேஸ்புக்கில் விளாசி உள்ளார்.
ரபேல் சாமுவேலின் அறிவிப்பு குறித்து அவரது தாய் கவிதா கர்னட் சாமுவேல் தனது பேஸ்புக் பதிவில், ‘‘அவரது சம்மதத்தை பெற்று அவரை எப்படி பெற்றுக் கொள்ள முடியும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறினால், நான் எனது தவறை ஒப்புக் கொள்வேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். #ManSuingParents
2009-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து கனடாவுக்கு சென்றவர் பல்விந்தர் சிங். இவர் அங்கு லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், பல்விந்தர் சிங் வீட்டில் இருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் பல்விந்தர் சிங்கின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, 2 வாலிபர்கள் தாமாக முன்வந்து சரணடந்தனர்.
ஆனால், கொலை செய்துவிட்டு 3-க்கும் மேற்பட்டவர்கள் ஓடியதாக கொலை சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறியுள்ளார்.
கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் மட்டும் இந்த ஆண்டுக்குள் 11 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்