என் மலர்
நீங்கள் தேடியது "Indian-origin"
- மோசடி செய்ததாக அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
- ஷ்ரதா அகர்வாலுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பிராட் பர்டிக்கு 2 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சிகோகோவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் முன்னாள் நிர்வாகிகளான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி ஷா (வயது 38 ), ஷ்ரதா அகர்வால் (38) மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பிராட்பர்டி (35) ஆகியோர் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இவர்கள் 3 பேரும் சேர்ந்து 1 பில்லியன் டாலர் ( இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7,500 கோடி ) மோசடி செய்ததாக அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ரிஷி ஷாவுக்கு 7 ஆண்டு 6 மாதம் ஜெயில் தண்டனையும், ஷ்ரதா அகர்வாலுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பிராட் பர்டிக்கு 2 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
- அச்சம்மா செரியன், அவசர பிரிவில் பணியில் இருந்தபோது அவரை நோயாளி ஒருவர் கத்தரிக்கோலால் கழுத்தில் திடீரென்று குத்தினார்.
- அச்சம்மா செரியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மான்செஸ்டர்:
இந்தியாவை சேர்ந்தவர் அச்சம்மா செரியன்(வயது 57). இவர் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட்ஹாம் ராயல் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அச்சம்மா செரியன், அவசர பிரிவில் பணியில் இருந்தபோது அவரை நோயாளி ஒருவர் கத்தரிக்கோலால் கழுத்தில் திடீரென்று குத்தினார். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள், அவரை மீட்டு அவசர பிரிவில் சேர்த்தனர். மேலும் தாக்குதல் நடத்திய நபரை மடக்கி பிடித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நர்சை கத்தியால் குத்திய ரோமன் ஹக்கை (வயது 37) கைது செய்து மான்செஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவர் மீது கொலை முயற்சி மற்றும் கத்தியால் குத்தப்பட்ட பொருளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரை காத்திருக்க வைத்ததால் கோபம் அடைந்து நர்சு மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
இதற்கிடையே அச்சம்மா செரியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை கவலையிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சம்மா செரியன் இங்கிலாந்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் ல்ட்ஹாம் ராயல் ஆஸ்பத்திரியில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
- டாக்டர் விவேக் மூர்த்திதான் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் பதவியையும் வகிக்கிறார்.
- டாக்டர், ஆராய்ச்சி விஞ்ஞானி, தொழில் அதிபர், எழுத்தாளர் என பல முகங்களை இவர் கொண்டுள்ளார்.
வாஷிங்டன்
உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாக இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணர் டாக்டர் விவேக் மூர்த்தி (வயது 45) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்துள்ளார்.
டாக்டர் விவேக் மூர்த்திதான் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் (தலைமை அறுவை மருத்துவ நிபுணர்) பதவியையும் வகிக்கிறார். இந்த பதவியுடன் அவர் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாகவும் இருப்பார் என வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
டாக்டர், ஆராய்ச்சி விஞ்ஞானி, தொழில் அதிபர், எழுத்தாளர் என பல முகங்களை இவர் கொண்டுள்ளார். இவரது மனைவி ஆலிஸ் சென். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
டாக்டர் விவேக் மூர்த்தியின் பூர்வீகம், இந்தியாவின் கர்நாடக மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய வம்சாவளி ஷெபாலி ரஸ்தான் துக்கால் (வயது 50).
- இதற்கான ஒப்புதலை செனட் சபை வழங்கி விட்டது.
வாஷிங்டன்
நெதர்லாந்து நாட்டுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷெபாலி ரஸ்தான் துக்கால் (வயது 50) என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான முறையான ஒப்புதலை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை வழங்கி விட்டது.
காஷ்மீரி பண்டிட் இனத்தை சேர்ந்த இவர் இந்தியாவில் இன்றயை உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் பிறந்தவர். தனது 2 வயதிலேயே குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார். அங்குள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் பட்டமும், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றவர். தனது நியமனம் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் செனட் சபையின் வெளியுறவு குழு விசாரணை நடத்தியபோது இவர், "நான் இந்தியாவில் பிறந்தேன், அமெரிக்காவில் உருவாக்கப்பட்டேன்" என குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.
அதுமட்டுமின்றி, "சின்சினாட்டியில் என்னை வளர்த்தெடுத்தவர் என் அம்மா. என் அப்பா என் இளம் வயதிலேயே பிரிந்து சென்று விட்டார். அது எனது வாழ்க்கையின் திசையை, ஆழமாகவும் நிரந்தரமாகவும் பாதித்தது" எனவும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், "இரக்கம், பச்சாதாபம், நேர்மை மற்றும் வியர்வை சமத்துவம் ஆகியவை நம் நாட்டில் ஏதோ ஓன்றைக் குறிக்கின்றது என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்கள் நம்மை நம்பிக்கை மற்றும் சுதந்திரத்தின் கலங்கரை விளக்கமாகப் பார்க்க இதுவே காரணம். எனது கதை தனித்துவமானது இல்லை என்றாலும் கூட, இது அமெரிக்க உணர்வு மற்றும் அமெரிக்க கனவின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை பிரதிபலிக்கிறது" எனவும் தெரிவித்தார்.
கனடாவில் கடந்த மாதம் 25-ந் தேதி நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடை பெற்றது. இதில் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஜக்மீத் சிங் (வயது 40) வெற்றிபெற்றார்.
இதையடுத்து அவருக்கு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் கனடா நாடாளு மன்றத்தில் பதவியேற்கும் முதல் வெள்ளை நிறத்தவரல்லாத எதிர்க்கட்சி தலைவர் எனும் சிறப்பை பெற்று, கனடா அரசியலில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
தலையில் ‘டர்பன்’ அணிந்து நாடாளுமன்றத்திற்குள் ஜக்மீத் சிங் நுழைந்தபோது, அவை உறுப் பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். #CanadaParliament #JagmeetSingh

அமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.
குடியரசு கட்சி சார்பில் மீண்டும் டிரம்ப் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே வேளையில் ஜனநாயக கட்சி சார்பில் முதல் இந்து பெண் எம்.பி.யான துளசி கப்பார்ட் போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளி வந்தன.

இப்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண் செனட் சபை எம்.பி., என்ற பெயரைப்பெற்றுள்ள கமலா ஹாரீசுக்கு (வயது 54) அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் அங்கு கலிபோர்னியா மாகாணம் ஓக்லாந்தில் பிறந்தாலும் கூட பூர்வீகம், சென்னைதான். இவரது தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் பிறந்தவர். இவர் ‘பெண் ஒபாமா’ என அமெரிக்காவில் பெயர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மாதத்துக்கு முன்பு அவர் இயோவா மாகாணத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அவரது கூட்டங்களுக்கு ஒபாமாவுக்கு கூடியதுபோல கூட்டம் கூடியதாக தகவல்கள் கூறுகின்றன.
கமலா ஹாரீஸ், ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் களம் இறங்கக்கூடும் என அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன. அவற்றை அவர் ஒப்புக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. இவர் ஒபாமாவுக்கு நெருக்கமானவர் ஆவார்.
அமெரிக்காவில் இப்போது ஜனாதிபதி தேர்தல் நடந்து அதில் போட்டியிட்டால், டிரம்பை கமலா ஹாரீஸ் 10 பாயிண்ட் வித்தியாசத்தில் தோற்கடிப்பார் என ஆக்ஸியாஸ் கருத்துக்கணிப்பு கூறுகிறது. #USPresidency2020 #KamalaHarris
இங்கிலாந்து நாட்டில் வசித்து வந்தவர் பல்விந்தர் சிங் (வயது 59). இந்தியர். இவர் அங்கு கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் 2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் வோல்வர்ஹாம்ப்டன் என்ற இடத்தில் அவர் தனது வேனை ஓட்டிச்சென்றார்.
அப்போது அந்த வேன் மீது ஒரு கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் பல்வீந்தர் படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் மீது காரை ஓட்டிச்சென்று மோதி விபத்து ஏற்படுத்திய ஜேசன் பேனிஸ்டர் என்பவர் சிக்கினார். அவர் ஸ்டாப்போர்டுஷயர் போலீஸ் அதிகாரி ஆவார். அவர் மீது விபத்தை ஏற்படுத்தி பல்விந்தர் சிங்கை கொன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு அங்குள்ள பர்மிங்ஹாம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜேசன் பேனிஸ்டர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் குற்றவாளி என நீதிபதி முடிவு செய்து, அவருக்கு 18 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் அவர் 3 ஆண்டு காலம் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனையொட்டிய சவுதாலில் வசித்து வந்தவர் பால்பீர் ஜோஹல் (வயது 48). இந்திய வம்சாவளி. இவர் கடந்த மார்ச் மாதம் அங்குள்ள மார்ல்பாரோ ரோட்டில் கத்திக் குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றிய ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், கொலை செய்யப்பட்ட பால்பீர் ஜோஹலுக்கும், சொகுசு காரில் வந்த 2 வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்த காட்சிகளை கண்டுபிடித்தனர்.
அதைத் தொடர்ந்து காரை வைத்து, ஹசன் முகமது (24), யாசின் யூசுப் (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது லண்டன் பழைய பெய்லி கோர்ட்டில் கொலை வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான கொலை குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து ஹசன் முகமதுவுக்கு 26 ஆண்டு சிறைத்தண்டனையும், யாசின் யூசுப்புக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆர்பிங்டன் பார்க் உட்பார்க் பகுதியில் வசித்து வருபவர் மயூர் கார்லேகர் (வயது 43). இந்தியாவை சேர்ந்த இவருக்கு ரீது என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு மயூர் கார்லேகர் தனது குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது வீட்டுக்கு 4, 5 இளைஞர்களைக் கொண்ட கும்பல் ஒன்று தீ வைத்து விட்டு தப்பினர். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே மயூர் கார்லேகர் குடும்பத்தினரை எழுப்பி விட்டனர். இதனால் அவர்கள் உயிரோடு எரித்துக்கொல்ல நடந்த முயற்சியில் இருந்து தப்பினர். உடனடியாக தீயணைக்கும் படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
இது குறித்து மயூர் கார்லேகர் கூறும்போது, “நாங்கள் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் அக்கம்பக்கத்தினர் உரிய வேளையில் தட்டி எழுப்பியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். சரியான நேரத்தில் இந்த அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டது. நாங்கள் யாருக்கும் எந்த தீங்கும் செய்தது கிடையாது. வாழ்நாளில் எல்லோருக்கும் உதவிகள் செய்து வந்திருக்கிறோம். இந்த சம்பவம் எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்து உள்ளது” என்று குறிப்பிட்டார்.
சம்பவ இடத்தில் பதிவான ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மாநகர போலீசார் துப்பு துலக்குகின்றனர்.
இதை வெறுப்புணர்வு குற்றமாக கருதி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
மயூர் கார்லேகர், மராட்டிய மாநிலம் மும்பையை அடுத்த தானே டோம்பிவிலி பகுதியை சேர்ந்தவர். 1990-க்கு பின்னர் லண்டனுக்கு குடும்பத்துடன் சென்று குடியேறினார். டிஜிட்டல் ஆலோசகராக இருந்து வருகிறார்.
பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளி சீக்கியர் ரக்பிர் சிங் சங்கோரா. இவர் கடந்த 1991-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். தற்போது பிரிட்டனின் டெர்பி நகரில் உள்ள ஒரு சீக்கிய கோவிலில் மத குருவாகவும், பண்ணை தொழிலும் செய்து வருகிறார்.
மிகச்சாதாரணமான இவர் தற்போது உலகின் மிக நீளமான வெள்ளரிக்காயை வளர்த்ததற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க உள்ளார். 51 இன்ச் நீளம் வளர்ந்துள்ள இந்த வெள்ளரிக்காய் இதற்கு முன்னதாக உலக சாதனையாக கருதப்பட்ட 42 இஞ்ச் நீளத்தை முறியடித்துள்ளது.
இதுகுறித்து ரக்பிர் சிங் கூறுகையில், இந்த வெள்ளரிக்காய் வளர தினமும் கடவுளை வேண்டி வந்ததாகவும், வளரும் பருவத்தில் அருகில் நாற்காலியிட்டு அமர்ந்து பார்த்து பார்த்து வளர்த்ததாகவும் பெருமிதமாக கூறியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு 39 இஞ்ச் நீளமுள்ள வெள்ளரிக்காயை தாம் வளர்த்ததாகவும், அதில் திருப்தி அடையாததால் தொடர்ந்து முயற்சித்து தற்போது சாதனை படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெள்ளரிக்காய் இன்னும் தனது நீளத்திலும் அகலத்திலும் வளர்ந்துகொண்டே இருக்கிறது இதில் ஆச்சரியமான விஷயமாக கருதப்படுகிறது. #LongestCucumber #UK
கணிதத்துறையில் மிக சிறப்பாக தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தும் மேதைகளுக்கு சர்வதேச கணித கூட்டமைப்பு சார்பில் ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விருது வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஃபீல்ட்ஸ் விருதுக்கு 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதில் அக்ஷய் வெங்கடேஷும் ஒருவர். அக்ஷய் தனது 2 வயதில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். சிறுவயதிலேயே படிப்பில் சிறந்து விழங்கிய அக்ஷய் தனது 20-வது வயதில் பி.எச்.டி பட்டத்தை வென்றார். இவர் தற்போது ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
36 வயதான அக்ஷய் வெங்கடேஷ், கணிதத்துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு காரணமாக ஃபீல்ட்ஸ் பதக்கம் பெற்றுள்ளார்.
நோபல் பரிசுக்கு இணையாக கணிதத்துறையில் இந்த ஃபீல்ட்ஸ் பதக்கம் கவுரவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #FieldsMedal #AkshayVenkatesh