என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » Indian Technical University
நீங்கள் தேடியது "Indian Technical University"
2018-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரிகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி.க்கு முதலிடம் கிடைத்துள்ளது. #ChennaiIIT
சென்னை:
உயர் படிப்புக்கான ஜெ.இ.இ. தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவ- மாணவிகளிடம் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 2015-ம் ஆண்டு முதல் இப்படி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
கல்வி பயிற்சி, கற்கும் திறன், ஆராய்ச்சி பணி, தேர்வு முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் ஆண்டு தோறும் தயாரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரி நிறுவனங்களில் 30 நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
“2018-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரிகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த தரவரிசை பட்டியலில் சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யான இந்திய தொழில்நுட்ப கழகம் அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.க்கு ஆய்வில் 88.95 சதவீதம் மதிப்பெண் கிடைத்துள்ளது. அங்கு 606 பேர் பி.எச்.டி. பட்டம் பெற தகுதியுடன் உள்ளனர்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201806131212545559_1_annauniverm._L_styvpf.jpg)
இந்த தரவரிசைப் பட்டியலில் 8-வது இடத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பிடித்துள்ளது. ஐ.ஐ.டி. அல்லாத தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் அண்ணா பல்கலைக்கழகம் முதன்மை இடத்துடன் அகில இந்திய அளவில் 8-வது இடத்தைப் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 67.04 சதவீதம் மதிப்பெண்களை அண்ணா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
இந்த தரவரிசைப் பட்டியலில் திருச்சியில் உள்ள என்.ஐ.டி.யான தேசிய தொழில்நுட்பக் கழகம் 11-வது இடத்தைப் பிடித்துள்ளது. வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் 16-வது இடத்தில் இருக்கிறது. வி.ஐ.டி. பல்கலைக்கழகத்துக்கு 57.02 மதிப்பெண்கள் கிடைத் துள்ளது.
பிலானி பிர்லா இன்ஸ்டிடியூட் 17-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி 29-வது இடத்தைப் பெற்றுள்ளது. #ChennaiIIT
உயர் படிப்புக்கான ஜெ.இ.இ. தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவ- மாணவிகளிடம் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 2015-ம் ஆண்டு முதல் இப்படி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
கல்வி பயிற்சி, கற்கும் திறன், ஆராய்ச்சி பணி, தேர்வு முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் ஆண்டு தோறும் தயாரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரி நிறுவனங்களில் 30 நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
“2018-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரிகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த தரவரிசை பட்டியலில் சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யான இந்திய தொழில்நுட்ப கழகம் அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.க்கு ஆய்வில் 88.95 சதவீதம் மதிப்பெண் கிடைத்துள்ளது. அங்கு 606 பேர் பி.எச்.டி. பட்டம் பெற தகுதியுடன் உள்ளனர்.
இந்த தரவரிசை பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி. இரண்டாவது இடத்திலும், டெல்லி ஐ.ஐ.டி. மூன்றாவது இடத்திலும் உள்ளன. கரக்பூர் ஐ.ஐ.டி. 4-வது இடத்திலும், கான்பூர் ஐ.ஐ.டி. 5-வது இடத்திலும், ரூர்கி ஐ.ஐ.டி. 6-வது இடத்திலும், கவுகாத்தி ஐ.ஐ.டி. 7-வது இடத்திலும் இருக்கின்றன.

×
X